இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த - பந்தங்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்: கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.

மிதுனம்: தாயாருடன் கொஞ்சம் மனத்தாங்கல் வரும். பணவரவு திருப்தி தரும் என்றாலும் அநாவசிய செலவுகள் வந்து போகும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். பால்ய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு.

கடகம்: சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகைகள் எல்லாம் தாமதமாக வரும். பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகளை பிறரிடம் கூறுவதை தவிர்க்கவும்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் இன்று முடிவடையும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்து காட்டுவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகவும்.

துலாம்: தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு சுபகாரியங்களுக்கு தலைமை தாங்குவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

விருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து மோதல்களும், பிரச்சினைகளும் வரக் கூடும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்துவிடவும்.

தனுசு: பழுதாகியிருந்த வாகனம் சரியாகும். கிரஹப்பிரவேசம், சீமந்தம் என்று வீடு களைகட்டும். மகன், மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் முன்னேற்றம் உண்டு.

மகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புதுவாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை உண்டு.

கும்பம்: நீண்ட நாளைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தந்தைவழி உறவினர்கள் மூலம் சில உதவிகள் கிட்டும். நேர்மறை, தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும்.

மீனம்: ஆன்மிக ஆற்றல் கிட்டும். கடந்த காலத்தில் நடந்த நல்ல சம்பவங்களை நினைத்து மகிழ்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். யாரிடமும் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

இணைப்பிதழ்கள்

32 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

48 mins ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்