இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உங்கள் அந்தஸ்து உயரும். அதிரடியான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். எக்காரியத்திலும் பொறுமை தேவை.

ரிஷபம்: புதிதாக யோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். உடல்நலம் சீராகும்.

மிதுனம்: விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். உதவி செய்வதாக வாக்கு கொடுத்த சிலர் இழுத்தடிப்பார்கள். அலைச்சல், அசதி, வேலைச் சுமை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும்.

கடகம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். நயமாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். பண வரவு, பொருள் வரவு உண்டு.

சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். கலைப் பொருட்கள் சேரும்.

கன்னி: நீண்டகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் சுமுக தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவி செய்வீர்கள்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் சற்று தள்ளிப்போய் முடியும். சிலரது தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உடல்நலம், உணவு பழக்கத்தில் கவனம் தேவை. உறவினர்களால் ஆதாயம் உண்டு.

தனுசு: கேட்டிருந்த இடத்தில் தக்க சமயத்தில் பணம் கிடைக்கும். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

மகரம்: உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசு, வங்கி காரியங்களில் இருந்த இழுபறி நிலை மாறும். மனதில் நம்பிக்கை, உற்சாகம், புதிய சிந்தனைகள் தோன்றும்.

கும்பம்: உங்கள் பேச்சாற்றல், நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும். சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். எக்காரியத்திலும் கவனம் தேவை.

மீனம்: உங்கள் கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு உண்டாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

51 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்