Published on : 22 May 2025 18:59 pm
நடப்பு ஐபிஎல் சீசனில் தனது 100-வது ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.
83 போட்டிகளில் தங்களது 100-வது ஐபிஎல் விக்கெட்டை அமித் மிஷ்ரா, ரஷீத் கான், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் கைப்பற்றி உள்ளனர்.
தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் சஹல், 84 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், 86 ஐபிஎல் போட்டிகளில் இந்த சாதனையை படைத்தார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் விளையாடும் குல்தீப் யாதவ், 97 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை எட்டினார். நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய போது இந்த மைல்கல் சாதனையை படைத்தார். மும்பை வீரர் ரிக்கல்டன், அவரது 100-வது ஐபிஎல் விக்கெட்.
மும்பை மற்றும் சென்னை அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் அதிகம் விளையாடிய ஹர்பஜன் சிங், தனது 100-வது ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடிய போது நூறாவது விக்கெட்டை கைப்பற்றினார்.