Published on : 30 Apr 2025 21:54 pm
பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி, பவுண்டரிக்கு பந்தை விரட்டி, விரைந்து இலக்கை எட்டுவது தான் டி20 கிரிக்கெட்டின் அழகு. இந்த 18 ஐபிஎல் சீசன்களில் அதுபோன்ற சேஸிங்கை நாம் பார்த்தது உண்டு.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200+ ரன்களை எடுத்த டாப் 5 ஆட்டங்கள் குறித்து பார்ப்போம்.
2023 சீசனில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 201 ரன்கள் இலக்கை 18 ஓவர்களில் எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி.
2017 சீசனில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 209 ரன்கள் இலக்கை 17.3 ஓவர்களில் எட்டியது டெல்லி டேர்டெவில்ஸ்.
ஆர்சிபி அணிக்கு எதிராக 16.3 ஓவர்களில் 200 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. 2023 சீசனில் இது நடந்தது.
2024 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 201 ரன்களை 16 ஓவர்களில் எட்டியது ஆர்சிபி.
நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 210 ரன்கள் இலக்கை 15.5 ஓவர்களில் எட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.