Young players who scored centuries in IPL cricket
Young players who scored centuries in IPL cricket

ஐபிஎல் தொடரில் சதம் விளாசிய இளம் வீரர்கள் யார் யார்?

Updated on
2 min read

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டில் சதம் விளாசிய டாப் 5 இளவயது வீரர்கள் யார், யார் என்பதை பார்ப்போம். 

14 வயது + 32 நாட்களில் ஐபிஎல் சதமடித்த (35 பந்து) ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிவேக சதத்தில் 2-ம் இடம் பெற்றார். முதலிடம் - கிறிஸ் கெயில் (30 பந்து).

19 வயது மற்றும் 253 நாட்களில் ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்தார் மணிஷ் பாண்டே. 2009 சீசனில் ஆர்சிபி அணிக்காக அவர், இந்த சதத்தை பதிவு செய்தார்.

20 வயது மற்றும் 218 நாட்களில் ஐபிஎல் 2018 சீசனில் சதம் விளாசினார் ரிஷப் பந்த். ஹைதராபாத் அணி உடனான ஆட்டத்தில் 63 பந்துகளில் 128 ரன்கள் எடுத்தார் பந்த்.

20 வயது மற்றும் 289 நாட்களில் 2021 சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய தேவ்தத் படிக்கல். 52 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். 

21 வயது மற்றும் 123 நாட்களில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் ஜெய்ஸ்வால், 62 பந்துகளில் 124 ரன்கள் விளாசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in