Published on : 18 Apr 2025 12:49 pm

டாப் 10 பேட்ஸ்மேன்கள்: பூரன், சாய் சுதர்ஷன் மற்றும் பலர் | IPL 2025

Published on : 18 Apr 2025 12:49 pm

1 / 11

நடப்பு ஐபிஎல் சீசனில் பெரும்பாலான அணிகள் 7 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ளன. இந்நிலையில், இந்த சீசனில் தங்கள் அணிக்காக அதிக ரன் எடுத்துள்ள டாப் 10 பேட்ஸ்மேன்கள் யார், யார்? என்பதை பார்ப்போம். 

2 / 11

நிக்கோலஸ் பூரன் - லக்னோ அணிக்காக 7 இன்னிங்ஸ் விளையாடி 357 ரன்கள் எடுத்துள்ளார். 28 ஃபோர்கள் மற்றும் 31 சிக்ஸர்களை விளாசி உள்ளார். பேட்டிங் சராசரி 59.50. 

3 / 11

சாய் சுதர்ஷன் - குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 6 இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்துள்ளார் சாய். 31 ஃபோர்கள், 13 சிக்ஸர்கள் விளாசி உள்ளார். 
 

4 / 11

மிட்செல் மார்ஷ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான மார்ஷ், 6 இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்துள்ளார். 30 ஃபோர்கள், 17 சிக்ஸர்களை விளாசி உள்ளார்.  
 

5 / 11

சூர்யகுமார் யாதவ் - மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ், 7 இன்னிங்ஸ் விளையாடிய 265 ரன்கள் எடுத்துள்ளார். 

6 / 11

ஸ்ரேயாஸ் ஐயர் - பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ், 6 இன்னிங்ஸ் விளையாடி 250 ரன்கள் எடுத்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 62.50 என உள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களில் இதுவே சிறந்த பேட்டிங் சராசரி. 

7 / 11

விராட் கோலி - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி, 6 இன்னிங்ஸ் விளையாடி 248 ரன்கள் எடுத்துள்ளார். 

8 / 11

டிராவிஸ் ஹெட் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹெட், 7 இன்னிங்ஸில் 242 ரன்கள் எடுத்துள்ளார். 

9 / 11

கே.எல்.ராகுல் - டெல்லியி கேபிட்டல்ஸ் அணியின் ராகுல், 5 இன்னிங்ஸ் விளையாடி 238 ரன்கள் எடுத்துள்ளார். மிக குறைந்த இன்னிங்ஸ் விளையாடி இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரராக ராகுல் உள்ளார். 
 

10 / 11

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 7 இன்னிங்ஸ் விளையாடி 233 ரன்கள் எடுத்துள்ளார் இளம் வீரர் ஜெய்ஸ்வால். 
 

11 / 11

அபிஷேக் சர்மா - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, 7 இன்னிங்ஸில் 232 ரன்கள் எடுத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 141 ரன்கள் விளாசி இருந்தார். 

Recently Added

More From This Category

x