Published on : 13 Apr 2025 13:34 pm

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் யார், யார்?

Published on : 13 Apr 2025 13:34 pm

1 / 6

கடந்த 2008-ம் ஆண்டு ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஆரம்பமானது. இதில் இதுநாள்வரை ஒரே இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்கள் எடுத்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் யார் என்ற பட்டியலை பார்க்கலாம். 

2 / 6

2013 சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில், புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 66 பந்துகளில் 175* ரன்கள் எடுத்தார். 

3 / 6

ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் சீசனான 2008-ல் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய பிரெண்டன் மெக்கல்லம் 73 பந்துகளில் 158* ரன்கள் எடுத்தார். இதுதான் ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் ஆட்டம். இது பெங்களுருவில் நடைபெற்றது. 
 

4 / 6

நடப்பு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, 55 பந்துகளில் 141 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக இப்போது அவர் திகழ்கிறார். 

5 / 6

கடந்த 2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் லக்னோ அணிக்காக விளையாடிய குயின்டன் டி காக் 70 பந்துகளில் 140* ரன்களை கொல்கத்தா அணிக்கு எதிராக பதிவு செய்தார். 

6 / 6

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் ஆர்சிபி வீரர் டிவில்லியர்ஸ் 59 பந்துகளில் 133* ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பதிவு செய்தார்.

Recently Added

More From This Category

x