Published on : 09 Apr 2025 23:15 pm
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 29-ல் நடந்த ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மார்ச் 30-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மெதுவாக பந்துவீசியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் ரியான் பராகுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின்போது களத்தில், விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடும் விதமாக பிரியன்ஸ் ஆர்யா பக்கத்தில் சென்ற திக்வேஷ் ராத்தி தனது கைகளில் எழுதுவது போன்று ‘நோட்புக்’ கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். சர்ச்சைக்குரிய இந்த செயலுக்காக, அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமும், 1 டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 7-ல் நடந்த போட்டியின்போது, பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாக கவுன்சில் உத்தரவிட்டது.