Published on : 07 Apr 2025 22:06 pm
டி20 கிரிக்கெட்டில் 13,000+ ரன்களை குவித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. | படங்கள்: இம்மானுவேல் யோகினி
மும்பை இந்தியன்ஸ் உடனான ஐபிஎல் போட்டியில்தான் இந்த புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார் விராட் கோலி.
மும்பை மைதானத்தில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 221 ரன்களை குவித்தது.
இந்தப் போட்டியில் விராட் கோலி 42 பந்துகளில் 67 ரன்கள் விளாசி அசத்தினார்.
மும்பைக்கு எதிராக விராட் கோலி சேர்ந்த 67 ரன்களில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களும் அடங்கும்.
இந்த இன்னிங்ஸ் மூலம் ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 13,000+ ரன்களை குவித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.