sai sudharsan hope of gujarat titans ipl 2025
sai sudharsan hope of gujarat titans ipl 2025

குஜராத் டைட்டன்ஸ் தூணாக தமிழக வீரர் சாய் சுதர்சன்!

Updated on
2 min read

ஐபிஎல் 2025 சீசனில், குஜராத் டைட்டன் அணிக்கு தனது அட்டகாசமான பேட்டிங் மூலம் தூணாக நின்று கவனம் ஈர்க்கிறார் தமிழக வீரர் சாய் சுதர்சன். | படங்கள்: பாக்ய பிரகாஷ்
 

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் தொடக்க வீரர் சாய் சுதர்சன் 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 49 ரன்கள் விளாசினார். 
 

நடப்பு சீசனில் இடதுகை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன், இதுவரை 62 சராசரியுடன் 186 ரன்கள் குவித்து அதிக ரன்கள் சேர்த்தோர் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார். 
 

ஸ்டிரைக் ரேட் 158 கொண்டுள்ள சாய் சுதர்சன், ஜோஸ் ஹேசில்வுட் வீசிய 4-வது வீசிய ஓவரில் சிக்ஸர் விளாசிய விதம் அனைவரையும் கவர்ந்தது.

“ஐபிஎல் தொடரில் இது எனது 4-வது வருடம். எனவே இந்தத் தொடர் எனக்கு அதிக அளவிலான அனுபவங்களை கொடுத்துள்ளதாக உணர்கிறேன்” என்கிறார் சாய் சுதர்சன். 
 

“வலை பயிற்சியின்போது, எனது பேட்டிங்கை மேம்படுத்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சாளர்கள்தான்” என்கிறார் சாய் சுதர்சன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in