Published on : 03 Apr 2025 16:34 pm
தஞ்சாவூரில் கோடியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, கடந்த மார்ச் 10-ம் தேதி காப்புகட்டப்பட்டது. திருவிழாவின் ஒரு பகுதியகாக ஆயிரம் ஆண்டு பழமையான பச்சைக்காளி, பவளக்காளி உற்வசம் கடந்த 1-ம் தேதி காளி புறப்படாகி இன்று அதிகாலை வரை மேலவீதியில், பச்சைக்காளி, பவளக்காளி உறவாடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பச்சைக் காளி - பவளக்காளி ஆக்ரோஷமாக ஆடியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சை ஆண்ட சோழ மன்னர்கள் நிசும்பசூதனியை வெற்றித் தெய்வமாகப் போற்றியுள்ளனர். விஜயாலயச் சோழன் அவ்வாறான ஒரு நிசும்பசூதனித் திருவுருவை அமைத்து அவளுக்குத் தனிக்கோயில் அமைத்தாக வரலாறு உண்டு.
இந்த நிசும்பசூதனி அம்மன், தஞ்சன் என்ற அரக்கனை அழிக்க பச்சைக் காளியாக அவதாரம் எடுத்தார். அரங்கன் கோடி ரூபம் எடுத்தால், அம்மனும் கோடி ரூபம் எடுத்து அரக்கனை அழிக்க முடியாத சூழலில், சாந்தமான தனது ரூபத்தை மாற்றி பவளக் காளியாக அவரதாரம் எடுத்து, அரக்கனை அம்மன் வதம் செய்து கோடியம்மனாக பெயர் பெற்றார்.
ஆண்டுதோறும் பங்குனி மாதம் மேலவீதியில் உள்ள சங்கரநாராயணன் ஆலயத்தில் இருந்து பச்சைக்காளியும் - கொங்கேனஸ்வர்ர ஆலயத்தில் இருந்து பவளக்காளியும் புறப்பட்டு, மேலவீதியில் பச்சைக்காளி,பவளக்காளி உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது.