Published on : 18 Jan 2025 16:22 pm
தஞ்சாவூர் திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழா பஞ்சரத்தின கீர்த்தனை நிறைவில் தியாகராஜ சுவாமிகளுக்குத் தீபாராதனை செய்யப்பட்டு இசைக் கலைஞர்களிடம் காட்டப்பட்டது. படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
தியாகராஜ சுவாமிகள் 178-வது ஆராதனை விழாவில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜ சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
திருவையாறு ஆராதனை விழாவின் நிறைவு நாளில் தியாகராஜ சுவாமி வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி வழியாகச் சன்னிதியைச் சென்றடைந்தது.
திருவையாறு ஆராதனை விழாவில் உஞ்சவிருத்தி வீதியுலா வந்த தியாகராஜ சுவாமிகள்.
தஞ்சாவூர் திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழாவில் தியாகராஜ சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
தியாகராஜ சுவாமிக்குப் பால், நெய், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.