Published on : 13 Jan 2025 18:35 pm

களைகட்டிய மகா கும்பமேளா - சிறப்பு அம்சங்கள் | போட்டோ ஸ்டோரி

Published on : 13 Jan 2025 18:35 pm

1 / 14

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகா கும்பமேளா’, உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் இன்று (ஜன.13) கோலாகலமாக தொடங்கியது. | படங்கள்: சந்தீப் சக்சேனா

2 / 14

கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமாக கருதப்படும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவின் முதல் நாளில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.

3 / 14

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சாதுக்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் மகா கும்பமேளாவில் முகாமிட்டுள்ளனர்.

4 / 14

“பாரதத்தின் விழுமியங்களையும், கலாச்சாரத்தையும் போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

5 / 14

“மகா கும்பமேளா 2025 எண்ணற்ற மக்களை நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் புனிதமான சங்கமத்தில் ஒன்றிணைக்கிறது” என்றார் மோடி.

6 / 14

“இந்தியாவின் காலம் கடந்த ஆன்மிக பாரம்பரியத்தை உள்ளடக்கிய மகா கும்பமேளா, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது” என்றார் பிரதமர் மோடி.

7 / 14

‘மகர சங்கராந்தி’யான நாளை (ஜன.14) முதல் அமிர்த கால நீராடல் நடைபெறுகிறது. திரிவேணி சங்கமத்தில் நீராடுவது பாக்கியம் என்பது ஐதீகம். 

8 / 14

ஜனவரி 14 (மகர சங்கராந்தி), 29 (மவுனி அமாவாசை) மற்றும் பிப்ரவரி 3 (வசந்த பஞ்சமி) ஆகிய 3 தினங்கள் புனித நீராடலுக்கான சிறப்பு தினங்கள் ஆகும். 

9 / 14

உ.பி.யில் மகா கும்பமேளா தொடங்கியுள்ள நிலையில், ஏஐ கேமரா, என்எஸ்ஜி கமாண்டோ உட்பட உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

10 / 14

40 கோடிக்கும் அதிகமானோர் வருகையுடன், உலகளவில் மக்கள் அதிகம் கூடும் நிகழ்வாக இந்த மகாகும்ப மேளா அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

11 / 14

குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்தும் மக்கள் அதிக அளவில் ‘மகா கும்பமேளா’வுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12 / 14

பிப்.26 வரை நடைபெறும் ‘மகா கும்பமேளா’ விழாவுக்கு 4,000 ஹெக்டர் பரப்பளவில் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுள்ளன. 1.6 லட்சம் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 45 நாட்கள் நடைபெறும் இந்த ‘மகா கும்பமேளா’ திருவிழாவுக்காக ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

13 / 14

பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவால், உ.பி. அரசின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய அளவில் ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்தர் ரூ.5,000 செலவிட்டால் கூட 40 கோடி பேர் வரும் பட்சத்தில் உ.பி. அரசுக்கு ரூ. 2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்பது மதிப்பிடப்பட்டுள்ளது. 

14 / 14

40 கோடி பேர் வரும் பட்சத்தில், ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Recently Added

More From This Category

x