புரி ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் - ஒரு விசிட்
Published on : 20 Sep 2024 19:14 pm
1 / 11
இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒடிசா மாநிலம் புரி நகரத்தில் அமைந்த ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில், சக்தி பீடங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
2 / 11
புரி தலத்தில் ஸ்ரீ ஜெகந்நாதர் தனது சகோதரர் பலராமர், சகோதரி சுபத்ரா தேவியுடன் அருள்பாலிக்கிறார். மூலவர் விக்கிரகங்கள் மரச் சிற்பங்களால் ஆனவை.
3 / 11
‘உத்கலம்’ என அழைக்கப்படும் ஒடிசாவில் அமைந்துள்ளது புரி நகரம். சோழ மன்னர் அனந்த வர்மன் சோதங்க தேவனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது கோயில்.
4 / 11
665 அடி நீளமும், 640 அடி அகலமும் கொண்டது கோயில். பிரகாரச் சுவர் 20 அடி முதல் 24 அடி உயரம். 4 திசைகளிலும் 4 மகா துவாரங்கள் உள்ளன.
5 / 11
ஸ்ரீஜெகந்நாதர் கோயிலில், பிரதான மூர்த்திகள், 4 அடி உயரம் 16 அடி நீளமுள்ள ஒரு கல் மேடையின் (ரத்னவதி) மீது ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர்.
6 / 11
மேடையில் மேல் வடக்கில் 6 அடி உயர சுதர்சன சக்கரத்துக்கு தெற்குப் பகுதியில் ஸ்ரீ ஜெகந்நாதர், சுபத்திரை, பலபத்ரனின் மூர்த்திகள் நின்ற நிலையில்!
7 / 11
ஜெகந்நாதருக்கு ஒருபுறம் லட்சுமி தேவியும், மறுபுறம் சத்தியபாமாவும் அருள்பாலிக்கின்றனர்.
8 / 11
மூர்த்திகளுக்கு ஆரதி அலங்காரம், அவகாசர் அலங்காரம், ப்ரஹார அலங்காரம், தாமோதர அலங்காரம் செய்யப்படுகின்றன.
9 / 11
ஜெகந்நாதர் கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுவதில்லை. பறவைகள் கோயிலின் மேல் பறப்பதில்லை. கோபுரத்தின் மீது எந்தப் பறவையும் அமர்வதில்லை.
10 / 11
கோபுரத்தின் மீதுள்ள சுதர்சன சக்கரம், பக்தர்கள் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் ஒன்றுபோல காட்சியளிக்கும்.
11 / 11
கோயிலில் கடலலை சப்தம் கேட்பதில்லை. ஆடி அமாவாசைக்குப் பிறகு வரும் துவாதசி தின ரதோற்சவம் பிரசித்தி பெற்றது. | தகவல்கள்: கே.சுந்தரராமன்