Published on : 09 Sep 2024 19:51 pm
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் குடைப்பாறைப்பட்டி கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம். | படங்கள்: நா.தங்கரத்தினம்.
விநாயகர் சதுார்த்தி முடிந்து மூன்றாம் நாள் வீடுகளில் வழிபட்ட விநாயகர் சிலைகளை புதுச்சேரி கடலில் கரைக்கும் பொதுமக்கள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
மதுரை கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்ட விநாயகர் ஊர்வலம் மதுரை வைகை ஆற்றின் கரையில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
கோவை மசக்காளிபாளையத்தில் விசர்ஜனம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள். | படங்கள்: ஜெ.மனோகரன்
கோவை குறிச்சிக் குளத்தில் நீரில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள். | படங்கள்: ஜெ.மனோகரன்
விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கிரேன் உதவியுடன் கரைக்கப்பட்டது. | படங்கள்: வி.எம்.மணிநாதன்
விநாயகர் சதுர்த்தியையொட்டி, வேலூர் கொணவட்டம் பகுதியில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் சதுப்பேரி ஏரியில் கரைக்க ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டது. | படங்கள்: வி.எம்.மணிநாதன