Published on : 18 Nov 2023 21:36 pm

பழநி கோயில் சூரசம்ஹாரம் - போட்டோ ஸ்டோரி

Published on : 18 Nov 2023 21:36 pm

1 / 17

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (நவ.18) நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சூரன்களை சின்னக்குமாரசுவாமி வதம் செய்தார். நாளை (நவ.19) திருக்கல்யாண வைபவம் நடக்க உள்ளது.

2 / 17

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நவ.13-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மலைக்கோயிலில் மூலவர், உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டதை தொடர்ந்து விநாயகர், துவாரபாலகர்கள், நவ வீரர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

3 / 17

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (நவ.18) மாலை கிரிவீதிகளில் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 4.30 மணிக்கு விளா பூஜை, நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது.

4 / 17

மாலை 3 மணிக்கு மலைக்கொழுந்து அம்மனிடம் சூரனை வதம் செய்ய சின்னக்குமாரர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சந்நிதி அடைக்கப்பட்டது.

5 / 17

பராசக்திவேலை திருஆவினன்குடி முருகன் கோயிலுக்கு சென்று பூஜை செய்த பின், மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் சூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் ஆகியோரை அடுத்தடுத்து சின்னக்குமாரர் வதம் செய்தார்.

6 / 17

அப்போது, பக்தர்களின் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

7 / 17

சூரசம்ஹாரத்தை காண வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் அடிவாரம், கிரிவீதியில் கூடியிருந்தனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் இரவு 9 மணிக்கு மேல் ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவும், மலைக்கோயிலுக்கு சென்ற பின் சம்ப்ரோட்சனம் மற்றும் அர்த்தஜாம பூஜையும் நடைபெற்றது.

8 / 17

நாளை (நவ.19) காலை 9.30 மணிக்கு மேல் காலை 10.30 மணிக்குள் மலைக்கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சண்முகருக்கும், பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 7.30 மணிக்குள் வள்ளி, தேவசேனா முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

9 / 17

தகவல்: நல்லசிவன் | படங்கள்: நா. தங்கரத்தினம்

10 / 17
11 / 17
12 / 17
13 / 17
14 / 17
15 / 17
16 / 17
17 / 17

Recently Added

More From This Category

x