Published on : 25 Oct 2023 11:31 am

விமரிசையாக நடந்த வித்யாரம்பம் - புகைப்படத் தொகுப்பு

Published on : 25 Oct 2023 11:31 am

1 / 19

விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று அவர்களது கல்வியை தொடங்கி வைத்தனர். | படங்கள்: ஜெ.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.சாம்ராஜ்

2 / 19

நவராத்திரி பண்டிகையின் 10-ம்நாளான விஜயதசமி நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வி,கலைகள், விளையாட்டுப் பயிற்சிகள் போன்றவற்றை தொடங்குவது விசேஷமாக கருதப்படுகிறது.

3 / 19

குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைக்கும் ‘வித்யாரம்பம்’ எனும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி, விஜயதசமி நாளான நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் நடந்தது. பரப்பி வைக்கப்பட்டுள்ள நெல்லில் ‘அ’ என்று எழுதி, குழந்தைகள் தங்கள் கல்வியை தொடங்கினர்.

4 / 19

தஞ்சை மாவட்டம் கூத்தனூரில் உள்ள கல்விக் கடவுள் சரஸ்வதி கோயிலில் பால வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுக்கு நெல்லில் எழுத வைத்து,கல்வியை தொடங்கினர்.

5 / 19

கோவை, திருப்பூர், உதகைஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஐயப்பன் கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

6 / 19

சென்னையில் பிரசித்தி பெற்ற மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில், நங்கநல்லூர் குருவாயூரப்பன் கோயில், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன்கோயில், அம்பத்தூர் ஐயப்பன் கோயில், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

7 / 19

விஜயதசமி பண்டிகை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளியில் பச்சரிசியில் ' அ ' என்று எழுதும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

8 / 19

2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுடன் ஏராளமான பெற்றோர், அதிகாலை முதலே கோயிலுக்கு வரத் தொடங்கினர்.

9 / 19

தாங்கள் கொண்டு வந்திருந்த நெல், அரிசியை தாம்பாளத்தில் வைத்து அனைவரும் வரிசையாக அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து, அர்ச்சகர்கள் கூறியபடி, குழந்தைகளின் நாக்கில் ‘ஓம் ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ’ என்னும் மந்திரத்தை பெற்றோர் எழுதினர்.

10 / 19

பின்னர், குழந்தைகளின் கையை பிடித்து, நெல், அரிசியில் ‘அ’ என்று எழுத வைத்தனர். சில இடங்களில் அர்ச்சகர்களும் குழந்தைகளின் கையை பிடித்து எழுத வைத்தனர்.

11 / 19

இது வித்தியாசமான அனுபவமாக இருந்ததால், குழந்தைகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில குழந்தைகள் தாங்களாகவே அரிசியில் எழுதியும், கிறுக்கியும் மகிழ்ந்தது காண்போர் ரசிக்கும்படி இருந்தது.

12 / 19

வித்யாரம்பம் நிகழ்வின் நிறைவாக, குழந்தைகளுக்கு ஸ்லேட், பல்பம், புத்தக பைகள் வழங்கப்பட்டன.

13 / 19

விஜயதசமியை முன்னிட்டு, தொடக்க பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் சிறப்பு மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.

14 / 19

படங்கள்: ஜெ.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.சாம்ராஜ்

15 / 19
16 / 19
17 / 19
18 / 19
19 / 19

Recently Added

More From This Category

x