தஞ்சை கிராமத்தில் 300 ஆண்டுகளாக இந்துக்களின் ‘மொஹரம்’ வழிபாடு - போட்டோ ஸ்டோரி

Published on
தஞ்சாவூர் அருகே மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக மொஹரம் பண்டிகையை இந்து மக்கள் கொண்டாடி, தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றி  வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூர் கிராமத்தில், இந்துக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, மொஹரம் பண்டிகையை 10 நாட்களுக்கு விரதத்தைத் துவங்கி, ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில், (ஊரின் பொதுவான இடம்), உள்ளங்கை போன்ற உருவத்தை

இந்த ஆண்டு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு விரதம் இருந்து நேற்று இரவு, உள்ளங்கை உருவத்திற்கு மாலை அணிவித்து வீதியுலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் சென்றனர்.

அங்கு வீடுகளில் புது மண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழங்கள் வைத்து வீட்டுக்கு வந்த அல்லா சுவாமியை வழிபட்டனர்.

பின்னர் இன்று காலை, கிராமம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு இந்த அல்லா சாமி தாரை, தப்பட்டையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் எலுமிச்சை, ரோஜா மாலைகள் மற்றும் பட்டுத் துண்டை சாத்தி வழிபட்டனர்.  மீண்டும் செங்கரையில் சாவடிக்கு வந்ததும், அல்லா சாமியைத் தூக்கி வரும் நபர்கள் முதலில் தீ குண்டத்தில் இறங்கினர்.

தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தீ குண்டத்தில் இறங்கி வழிபட்டனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், “எங்கள் கிராமத்தில், குளம் வெட்டப்பட்ட போது உள்ளங்கை உருவத்தில் உலோகம் கிடைத்தது. அது அல்லாவின் கையாகக் கருதி கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறோம்” என்றனர்.

“இவ்விழாவை இந்துக்கள் கொண்டாடும் போது,  இஸ்லாமியர்களும் உடன் இருந்து அவர்களும் வழிபடுகின்றனர். இந்துக்கள் அதிகம் இருப்பதால், இந்து முறைப்படியே வீதியுலா, தீக்குண்டம் இறங்குவது போன்ற விநோத வழிபாட்டை நாங்கள் செய்கிறோம்” என்றனர்.

“எங்கள் ஊரில் பிறந்த பெண்கள் அனைவரும் மொஹரம் திருவிழாவின்போது பிறந்த வீட்டுக்கு வந்து பானகம் தயாரித்து அல்லாவுக்கு வழங்குவதை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், இந்த விழாவைக் கிராம விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்” என்றனர்.

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in