செஞ்சி ரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், மைலம் முருகன் மற்றும் புதுச்சேரியிலிருந்து ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி, லாஸ்பேட்டை சிவசுப்பிரமணியர், கவுசிக பாலசுப்பிரமணியர் உள்ளிட்ட கோயில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் வைத்திக்குப்பம் கடற்கரைக்குக் கொண்டுவரப்பட்டு கடல் தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.