கஷ்டமும் வாய்ப்பும் - சர்ச்சில் 11 பொன்மொழிகள்
Published on : 25 Sep 2024 17:03 pm
1 / 12
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில், இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் பெற்றவர். அவரது 11 முக்கிய மேற்கோள்கள்...
2 / 12
“உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா? நல்லது. அப்படியென்றால், எப்பொழுதோ எதோ ஒரு விஷயத்திற்கு எதிராக செயல்பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.”
3 / 12
“அணுகுமுறை என்பது பெரிய மாற்றத்தை உண்டாக்கக்கூடிய ஒரு சிறிய விஷயமாகும்.”
4 / 12
“ஒரு நாடு தன்னகத்தே கொண்டுள்ள மிகப் பெரிய சொத்து, ஆரோக்கியமான குடிமக்களே.”
5 / 12
“சொல்லாத வார்த்தைகளுக்கு நாமே முதலாளி, ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு நாம் அடிமை.”
6 / 12
“காற்றுக்கு எதிராகவே பட்டங்கள் எழுகின்றன, காற்றுடன் சேர்ந்து எழுவதில்லை.”
7 / 12
“நம்பிக்கை இல்லாதவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள கஷ்டத்தைக் காண்கிறான்; நம்பிக்கை உள்ளவன் ஒவ்வொரு கஷ்டத்திலும் உள்ள வாய்ப்பை காண்கிறான்.”
8 / 12
“உண்மையில் நகைச்சுவை என்பது மிகவும் சீரியஸான ஒரு விஷயமாகும்.”
9 / 12
“வெற்றி என்பது இறுதியானதல்ல; தோல்வி என்பது மரணத்துக்குரிய செயலல்ல; அதுவே வெற்றிகளின் எண்ணிக்கையை தொடர்வதற்கான துணிவாகும்.”
10 / 12
“நீங்கள் நரகத்தின் வழியே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்றால், தொடர்ந்து போய்க் கொண்டேயிருங்கள்.”
11 / 12
“தைரியமே, உங்களை எழுந்து நின்று பேச வைக்கின்றது; அதுவே உங்களை உட்கார்ந்து கேட்கவும் வைக்கின்றது.”
12 / 12
“பெருந்தன்மையின் விலை பொறுப்பை அதிகரிக்கும்.”