Published on : 18 Apr 2024 09:27 am

காசு காட்டி... கண் கலங்கி... வேல் ஏந்தி... ஓய்ந்தது பிரச்சாரம்! - புகைப்படத் தொகுப்பு

Published on : 18 Apr 2024 09:27 am

1 / 20
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று சென்னை பெசன்ட் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் மத்திய சென்னை மற்றும் தென்சென்னை வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். | படம் :எஸ்.சத்தியசீலன் |
2 / 20
கோவையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பல்லடம் பகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் உதயநிதி, தமிழகத்திலிருந்து வசூலிக்கும் வரியில், ஒரு ரூபாய்க்கு, 29 பைசாவை மட்டுமே மத்திய அரசு திருப்பித் தருவதாக கூறி பிரச்சாரம் செய்தார்.
3 / 20
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன், கோவிந்தசாமி தெருவில் உள்ள மன்மதன் கோயிலில் படையல் செய்து, தேங்காய் உடைத்து, பழம் வைத்து வழிபட்டு நிறைவுநாள் பிரச்சாரத்தை தொடங்கினார். | படம்: க.ரமேஷ் |
4 / 20
மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோரி திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் பேசிய அக்கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். | படம்: நா. தங்கரத்தினம் |
5 / 20
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாச்சிகுளத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.
6 / 20
சிவகங்கை தொகுதிக்குட்பட்ட மானாமதுரை கண்ணார் தெருவில் தனது மகனும், காங்கிரஸ் வேட்பாளருமான கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
7 / 20
பாஜக கூட்டணியில் பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து கட்சி சின்னமான சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்த அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன்.
8 / 20
ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர். வெ.ரவிச்சந்திரன், திருவள்ளூர் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் ஆகியோரை ஆதரித்து சென்னை கொரட்டூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான். | படம்: ம. பிரபு |
9 / 20
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை ‘நானா, நானி’ முதியோர் இல்லத்துக்கு சென்று முதியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவருக்கு பெரியவர்கள் மலர்கள் தூவி ஆசி வழங்கினர். அப்போது பேசிய அவர், ‘உங்களிடம் வாக்கு சேகரிக்க நான் வரவில்லை. உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன்' என்று கூறி கண்கலங்கினார்.
10 / 20
அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா முதல் கடைவீதி வரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ‘ரோடு ஷோ’ நடத்தி மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு அதிமுகவினர் வெற்றிவேலை பரிசாக அளித்தனர்.
11 / 20
பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உடன் தர்மர் எம்.பி., பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், அமமுக மாவட்ட செயலாளர் ஜி.முனியசாமி உள்ளிட்டோர்.
12 / 20
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை ‘நானா, நானி’ முதியோர் இல்லத்துக்கு சென்று முதியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
13 / 20
தேனியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி. தினகரன், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் பிரச்சாரத்துக்கு சென்றபோது மக்கள் சால்வை அணிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.
14 / 20
மதுரையில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு செங்கோல், வேட்பாளருக்கு வீரவாள் வழங்கி அதிமுகவினர் வரவேற்றனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
15 / 20
வேலூரில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நேற்று தொரப்பாடியில் இருந்து பேரணியாக சென்று அண்ணா கலையரங்கம் அருகே வாக்கு சேகரித்தார்.‌ அருகில், திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன் |
16 / 20
பாஜக கூட்டணியில் பெரம்பலூரில் போட்டியிடும் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், திருச்சி மாவட்டம் முசிறியில் வாகனத்தில் சென்றபடி மக்களிடம் ஆதரவு கோரி பிரச்சாரம் செய்தார்.
17 / 20
தருமபுரியை அடுத்த மதிகோன்பாளையம் பகுதியில் பாமக வேட்பாளர் சவுமியாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவரது கணவரும் பாமக தலைவருமான அன்புமணி. தாய் சவுமியாவை ஆதரித்து, அவரது மகள்கள் சங்கமித்ரா (இடது), சஞ்சுத்ரா ஆகியோர் மேட்டூர் அனல்மின் நிலைய நுழைவு வாயில் முன்பு வேலைக்கு செல்லும் ஊழியர்களிடம் வாக்கு சேகரித்தனர்.
18 / 20
19 / 20
20 / 20
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தஞ்சாவூரில் தேமுதிக வேட்பாளருக்கு பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்த கட்சியினர். | படம்: ஆர்.வெங்கடேஷ் |

Recently Added

More From This Category

x