மதுரையில் அதிமுக மாநில மாநாடு இன்று (ஆக.20) காலை தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.தங்கரத்தினம்
மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள கட்சித் தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார்.
அதிமுக மாநில மாநாடு மதுரையில் இன்று தொடங்கியது. பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் கட்சியினர் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கட்சி தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதை நினைவுகூரும் வகையில் இந்த மாநாட்டுக்கு ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ என பெயரிடப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெறும் மாநாட்டுத் திடலை ரிப்பன் வெட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
மாநாட்டுத் திடலின் முகப்பில் உள்ள 51 அடி உயர கம்பத்தில் பழனிசாமி கட்சிக் கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
மாநாட்டுத் திடலின் முகப்பில் உள்ள 51 அடி உயர கம்பத்தில் பழனிசாமி கட்சிக் கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது.
கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் அழைக்கப்படாத நிலையில், முழுக்க முழுக்க அதிமுகவினர் மட்டுமே பங்கேற்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
ஜெயலலிதா பேரவை உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த 3,000 தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார்.
மாநாட்டில் பங்கேற்க பேருந்துகள், தனியார் வாகனங்கள் மூலம் நிர்வாகிகள், தொண்டர்கள் மதுரையில் நேற்றிலிருந்தே குவியத் தொடங்கினர்.