Published on : 30 Jan 2023 18:57 pm

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை நிறைவு நாள் தருணங்கள் - போட்டோ ஸ்டோரி

Published on : 30 Jan 2023 18:57 pm

1 / 24

“ஜம்மு காஷ்மீரில் நடந்து செல்ல பாஜக தலைவர்கள் அஞ்சுவார்கள்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். | படங்கள் : நிசார் அகமது

2 / 24

இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

3 / 24

இங்கு தேசிய கொடி ஏற்றப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ''ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிவைத்துக் கொல்வது, குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

4 / 24

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மேம்பட்டுள்ளதாக பாஜக கூறுவது உண்மையல்ல. அது உண்மையாக இருந்திருக்குமானால், ஸ்ரீநகருக்கு வாகனத்தில் செல்லுங்கள்; நடந்து செல்லாதீர்கள் என்று போலீசார் என்னிடம் கூறி இருக்க மாட்டார்கள்.

5 / 24

பாதுகாப்பு நிலைமை மேம்பட்டிருப்பது உண்மை என்றால், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு பாஜக தலைவர்கள் ஏன் நடைபயணம் மேற்கொள்ளவில்லை? உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் நடைபயணம் மேற்கொள்ளவில்லை?

6 / 24

பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும், ஆர்எஸ்எஸ்ஸும் வன்முறையைப் பார்த்ததில்லை. நாங்கள் இங்கு 4 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டோம்.

7 / 24

என்னால் ஒன்றை உறுதியாக சொல்ல முடியும், இதைப் போன்ற ஒரு நடைபயணத்தை பாஜக தலைவர்களால் மேற்கொள்ள முடியாது. அவர்களை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது அல்ல காரணம். உண்மையான காரணம் அவர்களிடம் இருக்கும் அச்சம்தான்.

8 / 24

போலீசார் கூறியும் நான் வாகனத்தில் செல்லவில்லை. நடந்துதான் வந்துள்ளேன். ஏனெனில் பயமின்மையை எனது குடும்பம் எனக்கு கற்றுத் தந்திருக்கிறது; மகாத்மா காந்தி கற்று தந்திருக்கிறார்.

9 / 24

நீங்கள் நடந்து சென்றால் உங்கள் மீது கையெறி குண்டுகளை வீசுவார்கள் என போலீசார் எச்சரித்தனர். என்னை வெறுப்பவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பை கொடுக்கக்கூடாது என்று நான் நினைத்தேன்.

10 / 24

எனது வெள்ளை நிற டி ஷர்ட்டை அவர்கள் சிவப்பாக்கட்டுமே என்று கருதினேன். ஆனால், நான் எதிர்பார்த்ததுதான் நிகழ்ந்தது. ஜம்மு காஷ்மீர் மக்கள் கையெறி குண்டுகளை என் மீது வீசவில்லை. மாறாக அன்பைத்தான் அளித்துள்ளார்கள்.

11 / 24

வன்முறைக்குக் காரணமாக இருக்கும் பிரதமர் மோடி, அமித் ஷா, அஜித் தோவல், ஆர்எஸ்எஸ் ஆகியவர்களால் மக்களின் வலியை புரிந்து கொள்ள முடியாது. ஆனால், எங்களால் முடியும்.

12 / 24

இந்தியாவின் அடிப்படையை தகர்க்கும் சித்தாந்தத்திற்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரம் இது'' என்று ராகுல் காந்தி பேசினார்.

13 / 24

முன்னதாக, யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் வகையில், பாந்தசவுக்கில் உள்ள முகாம் அலுவலகத்தில், தேசிய கீதம் இசைக்கப்பட தேசியகொடியை அவர் ஏற்றிவைத்தார்.

14 / 24

பின்னர் தன்னுடன் யாத்திரையில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி," கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரையில் 136 நாட்களாக நீங்கள் அளித்துவந்த ஆதரவு, அன்பு, பிரியத்திற்கு நன்றி" என்றார்.

15 / 24

கொடியேற்றி முடித்தப் பின்னர், உற்சாகமாக தனது சகோதரி பிரியங்காவுடன் பனிபந்து வீசி ஏறியும் விளையாட்டில் ராகுல் காந்தி ஈடுபட்டார். அப்போது தனது முத்திரையான வெள்ளைநிற டி சர்ட் அணிந்திருந்த ராகுல் காந்தி அதன் மீது ஒரு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்தார்.

16 / 24

நிறைவு நிகழ்ச்சியைத் தொடர்ந்த ஷெக் இ காஷ்மீர் மைதானத்தில் ராகுல் காந்தியின் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

17 / 24

இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக, ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத முக்கியமான 21 எதிர்க்கட்சியினருக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. பேரணியில் திமுக, தேசிய மாநாடு கட்சி, பிடிபி, சிபிஐ, ஆர்எஸ்பி, ஐயுஎம்எல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

18 / 24

இந்திய ஒற்றுமை யாத்திரை 2022-ம் ஆண்டு செப். 7ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது. அங்கிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், வழியாக 4,080 கிமீ பயணித்து 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் கடந்து ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்துள்ளது.

19 / 24

இந்த யாத்திரை முழுவதும் ராகுல் காந்தி, 12 பொதுக்கூட்டங்கள், 100க்கும் அதிகமான தெருமுனைக் கூட்டங்கள், 13 பத்திரிகையாளர்கள் சந்திப்பு, 275க்கும் அதிகமான திட்டமிடப்பட்ட நடைபயண உரையாடல்கள், 100-க்கும் அதிகமான தனி உரையாடல்கள் ஆகியவற்றில் பங்கேற்றுளார்.

20 / 24

இந்த நிறைவு நிகழ்வுக்காக, உள்ளூர் நிர்வாகம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. இதற்காக இரண்டாவது நாளாக, லால்சவுக்கில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கின் வரலாற்று சிறப்பு மிக்க மணிக்கூண்டில் கொடியேற்றினார்.

21 / 24

பனிபந்து விளையாட்டு: இதற்கிடையில் இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிறைவு நிகழ்வினைத் தொடர்ந்து, தனது சகோதரி பிரியங்காவுடன் பனிபந்து எறிந்து விளையாண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

22 / 24

ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், "ஷீன் முபாரக்! ஸ்ரீநகரில் உள்ள இந்திய ஒற்றுமையை யாத்திரை முகாமின் ஒரு மகிழ்ச்சியான கடைசி காலைப்பொழுது" என்று தெரிவித்துள்ளார். வீடியோவில் உடன்பிறப்புகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பனிப்பந்துகளை எறிந்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொள்கின்றனர்.

23 / 24
24 / 24

Recently Added

More From This Category

x