Published on : 09 May 2022 17:30 pm
சென்னை மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த 29-ம் தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி படிப்படியாக 150-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. | படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம்