Published on : 02 Feb 2021 22:16 pm

பேசும் படங்கள்... (02.02.2021)

Published on : 02 Feb 2021 22:16 pm

1 / 32

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று (1.2.2021) காலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றன. வீடுகள் மேகக் கூட்டத்தின் நடுவே இருப்பது போல் காட்சியளித்தன. படங்கள்: எம்.முத்துகணேஷ்

2 / 32
3 / 32
4 / 32
5 / 32

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று (1.2.2021) வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து... மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய் உதவியுடன் விமான நிலைய வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

6 / 32
7 / 32

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று (1.2.2021) வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து... பயணிகள் இன்றி வெறிச்சோடிக் கிடந்த விமான நிலையம். படம்: ஜி.ஞானவேல்முருகன்

8 / 32

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (1,2,2021) குறைதீர் கூட்டத்துக்கு முகக்கவசம் அணிந்து வந்தவர்களின் பைகளை பரிசோதிக்கும் போலீஸார். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.

9 / 32
10 / 32

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (1.2.2021) குறைதீர் கூட்டத்தில் தங்கள் கோரிக்கை மனுக்களைப் பதிவுசெய்ய வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்.

11 / 32

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (1.2.2021) குறைதீர் கூட்டத்தில் தங்கள் கோரிக்கை மனுக்களைப் பதிவுசெய்ய வந்த பொதுமக்களிடம்... அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு... அதுகுறித்து விசாரிக்கும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு. படம்: ஜி.ஞானவேல்முருகன்

12 / 32

திருச்சி ரயில்வே சந்திப்பில் நேற்று (1.2.2021) நடைபெற்ற 'ஆபரேஷன் ஸ்மைல்' எனும் காணாமல் போன குழந்தைகளை பெற்றோரிடம் சேர்க்கும் சிறப்பு முகாமின் தொடக்க நிகழ்ச்சியில் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார் கலந்துகொண்டு பேசினார். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

13 / 32
14 / 32

சென்னை கோட்டூர்புரம் பறக்கும் ரயில்நிலையம் அருகில் மாநகராட்சி சார்பில் அடர்வனம் அமைத்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு... அது தொடர்பான சிறப்பு மலரை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று (1.2.2021) வெளியிட, அதை மாநகராட்சி வட்டார துணை ஆணையர் ஆல்பிஜான் வர்கீஸ் பெற்றுக் கொண்டார். படம் : பு.க.பிரவீன்

15 / 32

சென்னை கோட்டூர்புரம் பறக்கும் ரயில் நிலையம் அருகில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நகர்ப்புற அடர்வனத்தில்... வளர்ந்துள்ள மரக் கன்றுகளை பார்வையிடுகிறார் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ். உடன், மாநகராட்சி வட்டார துணை ஆணையர் ஆல்பிஜான் வர்கீஸ் உள்ளிட்டோர். படங்கள் : பு.க.பிரவீன்

16 / 32
17 / 32
18 / 32

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் 125-வது பிறந்த நாளையொட்டி... சென்னை - சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி அக்கட்சியினர் நேற்று (1.2.2021) மரியாதை செலுத்தினர். படம்: பு.க.பிரவீன்

19 / 32

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தென் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் நேற்று (1.2.2021) கலந்தாலோசனை கூட்டம் நடத்தினர். படங்கள்: பு.க.பிரவீன்

20 / 32
21 / 32

இந்திய ரயில்வேயில் தனியார்மயத்தை புகுத்துவதை கண்டித்து... SRMU மற்றும் AIRF தொழிற்சங்கங்கள், ரயில் பயணிகள், பொது மக்கள் சார்பில் நேற்று (1.2.2021) சென்னை - புறநகர் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : பு.க.பிரவீன்

22 / 32

கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக இப்பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. படங்கள்: எம்.முத்துகணேஷ்

23 / 32
24 / 32

சென்னை - கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் இன்று (2.2.2021) கூடியது. இதில் காங்கிரஸைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். படம்: ம.பிரபு

25 / 32

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (2.2.2021) கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள எம்எல்ஏக்கள் கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் கோரிக்கை பதாகையை கையில் ஏந்திக் கொண்டு வந்திருந்தனர். படங்கள்: ம.பிரபு

26 / 32
27 / 32

சென்னை - கலைவாணர் அரங்கத்தில் இன்று (2.2.2021) சட்டப்பேரவை கூடியது. இதில் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் பேரவை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். படம்: ம.பிரபு

28 / 32
29 / 32
30 / 32

சென்னையை அடுத்த திரிசூலம் குவாரி பகுதியில் போட்டோ ஷூட் எடுக்கச் சென்ற ஆகாஷ், தினேஷ்குமார் என்ற இளைஞர்கள் நேற்று (1.2.2021) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இன்று அவர்களது உடல் மீட்கப்பட்டது. படங்கள்: எம்.முத்துகணேஷ்

31 / 32
32 / 32

Recently Added

More From This Category

x