Published on : 21 Jan 2021 20:09 pm

பேசும் படங்கள்... (21.01.2021)

Published on : 21 Jan 2021 20:09 pm

1 / 36

பல ஆண்டுகளாக துப்புரவுப் பணிசெய்து வேலைநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு... மீண்டும் வேலை வழங்கக் கோரியும், தமிழக அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியை கண்டித்தும்... சென்னை மாநகராட்சி செங்கொடிச் சங்கம் (CITU ) சார்பாக... இன்று 21.1.2021) சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் சவுந்தரராஜன், மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். படங்கள்: ம.பிரபு

2 / 36
3 / 36

விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பெரிதும் பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்... மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும்... சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: ம.பிரபு

4 / 36

புதுச்சேரி அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (21.1.2021) பணிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு கண்டன பேரணியாகச் சென்று புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்றனர். படம்: எம்.சாம்ராஜ்

5 / 36

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, கண்டன பேரணியாகச் சென்று இன்று (21.1.2021)புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற புதுச்சேரி அரசு ஊழியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். படங்கள்: எம்.சாம்ராஜ்

6 / 36
7 / 36

புதுச்சேரி நகரப் பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்தப்படுவர் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார். ஆனால் இன்றும் (21.1.2021) சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அங்கே த துப்பாக்கி ஏந்திய பாதுபாப்பு படையினர் பணியிலிருந்தனர். படங்கள்: எம்.சாம்ராஜ்

8 / 36
9 / 36

மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டத்தை இயற்றக் கோரி... புதுச்சேரி சுதேசி பஞ்சாலையின் முன்பு ரவிக்குமார் எம்பி தலைமையில் இன்று (21.1.2021)விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. படம்: எம்.சாம்ராஜ்

10 / 36

புதுச்சேரி அப்பா பைத்திய சாமி குருபூஜையை முன்னிட்டு... இன்று (21.1.2021) சிறப்பு பூஜை நடத்திய புதுச்சேரி - முன்னாள் முதல்வர் ரெங்கசாமி படங்கள்: எம்.சாம்ராஜ்

11 / 36
12 / 36

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 2019-2020 ஆண்டில் தவறாக கணக்கிடப்பட்டு வழங்கப்பட்ட போனஸ் தொகைத் தொடர்பாக... சென்னை - தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் நல இணை ஆணையர் லட்சுமிகாந்தனுடன் இன்று (21.12021) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். படம்: க.ஸ்ரீபரத்

13 / 36

சென்னை - தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில்... பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று (21.12021) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: க.ஸ்ரீபரத்

14 / 36
15 / 36
16 / 36

சென்னை - சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ... இன்று (21.1.2021) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: க.ஸ்ரீபரத்

17 / 36
18 / 36

வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினக் கொண்டாட்டத்தையொட்டி... சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலையை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் இன்று (21.1.2021) ஈடுபட்டனர். படம்: க.ஸ்ரீபரத்

19 / 36

வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினக் கொண்டாட்டத்தையொட்டி... சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணி இன்று (21.1.2021) மும்முரமாக நடைபெற்றது. படங்கள்: க.ஸ்ரீபரத்

20 / 36
21 / 36

மத்திய அரசு சார்பில் நீர்வாழ் உயிரினங்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் குறித்த ஆய்வகம் அமைத்தல் தொடர்பாக தாம்பரத்தை அடுத்த படப்பையில் இன்று (21.1.2021) அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் - மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் கிரிராஜ்சிங் தொடங்கி வைத்தார். அருகில் - தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய மீன்வளத் துறைச் செயலர், ராஜீவ் ரஞ்சன், தமிழக மீன்வளத் துறை முதன்மைச் செயலர் கோபால் கலந்து கொண்டனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

22 / 36
23 / 36
24 / 36
25 / 36
26 / 36
27 / 36

சென்னை - அடையாறு செயின்ட் லூயிஸ் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்காளர் பட்டியல் பதிவு செய்யும் சிறப்பு முகாம் இன்று (21.1.2021) நடைபெற்றது. படங்கள்: பு.க.பிரவீன்

28 / 36
29 / 36
30 / 36

சென்னை - வேளச்சேரி காந்தி சாலையில் சென்னை - தெற்கு திமுக மாவட்டச் செயலர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ’ வேளச்சேரியா... வெள்ளச்சேரியா’ என்ற தலைப்பில் இன்று (21.1.2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள் : பு.க.பிரவீன்

31 / 36
32 / 36
33 / 36

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி... இன்று (21.1.2021) தாம்பரம் பகுதியில் ஏராளமான அளவில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்களுக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். படங்கள்: எம்.முத்துகணேஷ்

34 / 36
35 / 36
36 / 36

Recently Added

More From This Category

x