Published on : 20 Jan 2021 19:44 pm

பேசும் படங்கள்... (20.01.2021)

Published on : 20 Jan 2021 19:44 pm

1 / 57

சென்னை - ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூயில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்பு இன்று (20.1.2021) தொடங்கியது. கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவ - மாணவியரை தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் சீனியர் மாணவ - மாணவியர் வரவேற்றனர். படங்கள்: ம.பிரபு

2 / 57
3 / 57
4 / 57
5 / 57
6 / 57
7 / 57
8 / 57

மதுரை - மாநகராட்சியில் இன்று (20.1.2021) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார். அருகில் - நகராட்சி ஆணையர் விசாகன். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

9 / 57

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதல் நாள் வகுப்புகள் தொடக்க விழாவில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த தென்மண்டல ஐ.ஜி முருகன். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

10 / 57
11 / 57
12 / 57

குடியரசு தின விழாவையொட்டி நடைபெறவுள்ள அணிவகுப்புக்கான ஒத்திகை... சென்னை - மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே இன்று (20.1.2021) நடைபெற்றது. இந்த ஒத்திகை அணிவகுப்பில் . காவல்துறையின் பல்வேறு பிரிவினர் பங்கேற்றனர். படங்கள்: ம.பிரபு

13 / 57
14 / 57
15 / 57
16 / 57
17 / 57
18 / 57
19 / 57

சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின்.முன்னிலையில் இன்று (20.1.2021) ரிப்பன் மாளிகை, வளாகத்தில் வெளியிட்டார். படங்கள்: ம.பிரபு

20 / 57
21 / 57
22 / 57
23 / 57

சென்னை - அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா... 93 வயதில் உடல் நலக் குறைவால் நேற்று (19.1.2021) காலமானார். சாந்தாவின் உடல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் இருந்து பெசண்ட் நகரில் உள்ள இடுகாட்டுக்கு நேற்று மாலையில் அமைதி ஊர்வலமாக எடுத்து வரபட்டு, 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

24 / 57
25 / 57
26 / 57

புதுச்சேரியில் இன்று (20.1.2021) தேர்தல் விரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பூர்வாகார்க் வெளியிட, அதனை பல்வேறு அரசியல் கட்சியினர் பெற்றுக் கொண்டனர். படம்: எம்.சாம்ராஜ்

27 / 57

.புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து... பாஜக செயலர் சுவாநாதன் எம்எல்ஏ தலைமையில் பாஜகவினர் லாஸ்பேட்டை பகுதியில் இன்று (20.1.2021)கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: எம்.சாம்ராஜ்

28 / 57
29 / 57

புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கலலுாரியில் மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகளை ஏற்படுத்த வேண்டும், பேராசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... இன்று (20.1.2021) கல்லுாரி வளாகத்தில்கல்லுாரி முதல்வர் சசிகாந்த் தரையில் அமர்ந்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். படங்கள்: எம்.சாம்ராஜ்

30 / 57
31 / 57

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக திமுகவின் சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை - செக்கானூரணியில் இன்று (20.1.2021) நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டார். இதில் அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும், பொதுமக்களும் அதிகளவில் கலந்து கொண்டனர். .படங்கள்; எஸ்.கிருஷ்ணமூர்த்தி

32 / 57
33 / 57
34 / 57
35 / 57

தமிழகத்தின் வடமாவட்டங்களில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள முதல்வர் பழனிசாமி... முன்னதாக இன்று (20.1.2021) ஸ்ரீபெரும்புதூர் - ஸ்ரீராமானுஜர் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவருக்கு அக்கோயிலின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. படம்: எம்.முத்துகணேஷ்

36 / 57
37 / 57

தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள முதல்வர் பழனிசாமி... முன்னதாக இன்று (20.1.2021) வட மாவட்டமான ஸ்ரீபெரும்புதூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு பிரம்மாண்டமாக கூடியிருந்த அக்கட்சியினரிடையே முதல்வர் உரையாற்றினார். அப்போது கூட்டத்தினரிடையே இரட்டை இலை சின்னத்தை உற்சாகமாக அவர் காட்டினார். படங்கள்: எம்.முத்துகணேஷ்

38 / 57
39 / 57
40 / 57

திருச்சி - பெரிய சூரியூரில் இன்று (20.1.2021) நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் சீறிப் பாய்ந்த காளைகளும்... அவற்றை அடக்க முயன்ற வீரர்களும். படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்

41 / 57
42 / 57
43 / 57
44 / 57
45 / 57

திருச்சி - பெரிய சூரியூரில் இன்று (20.1.2021) நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் மாட்டு உரிமையாளரை இழுத்து சென்ற காளை. படம்: ஜி.ஞானவேல் முருகன்

46 / 57

திருச்சி - பெரிய சூரியூரில் இன்று (20.1.2021) நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை காண கேலரி இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள். படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்

47 / 57

திருச்சி - பெரிய சூரியூரில் இன்று (20.1.2021) நடைபெற்றா ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்ற அதிமுக தெற்கு மாவட்டச் செயலர் ப.குமார், மற்றும் திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் நீதி மய்யம் மாநிலச் செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர். படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்.

48 / 57

சென்னை - அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா... 93 வயதில் உடல்நலக் குறைவால் நேற்று (19.1.2021) காலமானார். அவரது உடல் அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது, ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், கலை உலகத்தினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.. படங்கள்: பு.க.பிரவீன்

49 / 57
50 / 57
51 / 57
52 / 57
53 / 57
54 / 57
55 / 57
56 / 57
57 / 57

Recently Added

More From This Category

x