Published on : 20 Oct 2020 18:49 pm

பேசும் படங்கள்... (20.10.2020)

Published on : 20 Oct 2020 18:49 pm

1 / 70

வேலூரில் நேற்று இரவு சூழ்ந்திருந்த பனிமூட்டம்... தேசிய நெடுஞ்சாலையில் எரியும் மின்விளக்குகள் வெளிச்சத்தில் அழகாக காட்சியளிக்கிறது. இடம். சேண்பாக்கம். படங்கள் : வி.எம்.மணிநாதன்.

2 / 70
3 / 70
4 / 70

சென்னை - குரோம்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிவோர் அனைவரும் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்ததையடுத்து.... சென்னை - லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது - பத்திரவுப்பதிவுக்காக காத்திருந்த மக்களிடம்... ’’பத்திரப்பதிவு இல்லை...’’ எனச் சொல்லி திருப்பி அனுப்பப்பட்டனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்

5 / 70
6 / 70
7 / 70

’பல்லாவரத்தை அடுத்த பம்மலில் உள்ள நாகல்கேணி பூம்புகார் நகரில் குடியிருப்பு பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள சுற்றுச்சுவர்’ என செய்தியுடன் புகைப்படமும் ‘இந்து தமிழ்’ நாளிதழில் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்தது. இதன் விளைவாக நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த ஆபத்தான சுவரை நேற்று இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்

8 / 70
9 / 70
10 / 70
11 / 70

ஆந்திராவில் இருந்த சென்னை குடிநீருக்காக திறந்துவிடப்பட்ட நீரால்.... செம்பரம்பாக்கம் ஏரி நேற்று நீர் நிறைந்து கண்ணுக்கு குளிர்ச்சியாய் காணப்பட்டது. படங்கள்: எம்.முத்துகணேஷ்

12 / 70
13 / 70
14 / 70

இந்திய ரயில்வே துறையை தனியார்மயாக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்; ரயில்வே ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள டிஏ-வை விரைந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கம் சார்பில்... சென்னை - ரயில்வே கோட்டத் தலைமை அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் - எஸ்ஆம்எம்யு தலைவர் ராஜா ஸ்ரீதர் உட்பட நூற்றுக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் பங்கேற்றனர். படங்கள் : பு.க.பிரவீன்.

15 / 70
16 / 70
17 / 70
18 / 70
19 / 70
20 / 70

சென்னை - வில்லிவாக்கத்தில் 70 ஆண்டுகளாக செயல்பட்டு வரும்... சிங்காரம் பிள்ளை அரசு உதவிபெறும் பள்ளியின் கட்டிங்களை இடித்துவிட்டு... அந்த இடத்தை வேறொரு பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் முயற்சியை தடுக்கக் கோரி... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பள்ளிக்கல்வி இயக்குநரை சந்தித்து நேற்று கோரிக்கை மனு வழங்கினார். படங்கள் : ம.பிரபு

21 / 70
22 / 70
23 / 70

சென்னை - கோயம்பேட்டில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய 2 பேர்.. தனது கடைக்கு உள்ளேயே இருந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அந்த க் கடைக்கு முன்பாக பலர் கூடியுள்ளனர். படங்கள்: ம.பிரபு

24 / 70
25 / 70
26 / 70
27 / 70
28 / 70
29 / 70

சென்னை - பட்டினம்பாக்கம் முகத்துவாரப் பகுதியில் சென்னை - மாநகராட்சி சார்பில் தூர்வாரும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. படங்கள் : பு.க.பிரவீன்

30 / 70
31 / 70

சமூக இடைவெளியைக் கடைபிடிக்காததால்... சென்னை - தியாகராய நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடைக்கு இன்று (20.10.2020) மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். படங்கள்: ம.பிரபு

32 / 70
33 / 70
34 / 70
35 / 70

உத்தரப்பிரதேச முதல்வர் பதவி விலகக் கோரி... மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ’மக்கள் அதிகாரம்’ இயக்கத்தின் சார்பாக இன்று (20.10.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

36 / 70

திரைப்படத் துறையைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் இன்று (20.10.2020) தமிழக முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து... திரையரங்குகளை மீண்டும் திறக்கக் கோரிக்கை வைத்தனர். படங்கள் : ம.பிரபு

37 / 70

சென்னையில் இன்று (20.10.2020) பல பகுதிகளில் பரவலாக மழை விட்டு விட்டு பெய்தது. இடம் : அடையாறு படங்கள் : பு.க.பிரவீன்

38 / 70
39 / 70
40 / 70
41 / 70
42 / 70
43 / 70

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவும்.... அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில்.... இன்று (20.10.2020) சென்னை - சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள் : பு.க.பிரவீன்

44 / 70
45 / 70

செம்பாக்கம் நகராட்சி யினர் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங் கள், படிக்கட்டுகள் போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மழைக்காலங்களில் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக அடைபட்டுள்ள கால்வாய்களை சிட்லபாக்கம் மெயின் ரோடு பகுதியில் அடைப்புகளை அகற்றி சீர் செய்தனர். படங்கள் எம்.முத்து கணேஷ்

46 / 70
47 / 70
48 / 70
49 / 70
50 / 70
51 / 70

முதல்வர் கே.Uழனி சாமி தாயாருக்கு அஞ்சலி செலுத்திய வைகோ. குஷ்பு. மற்றும் ரோஜா ஆந்திர எம்.எல்.ஏ Uடங்கள் : ம.பிரபு

52 / 70
53 / 70
54 / 70
55 / 70
56 / 70
57 / 70

சென்னை - கோயம்பேட்டில் சில்லரை வர்த்தகம் வியாபாரிகளுடனான பேச்சுவார்த்தை மூலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது தற்போது காய்கறி மார்கெட் புதுப்பிக்கும் பணிகள் முடிந்து திறப்பு தேதிிக்காக காத்திிருக்கும் வியாபாரிிகள் Uடம் : ம.பிரபு

58 / 70
59 / 70
60 / 70

தாம்பரம் பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு இன்று (20.10.2020) தாம்பரம் - நகராட்சியினர் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். அபராதம் செலுத்த வசதியில்லாதாவர்களுக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்யப்பட்டது. தாம்ரம் நகராட்சி ஊழியர்கள் சாலையின் ஓரமாக நின்றுகொண்டு முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை சோதனைக்கு உட்படுத்தினர். படங்கள் : எம்.முத்துகணேஷ்

61 / 70
62 / 70
63 / 70
64 / 70

’தமிழுக்கும் அமுதென்று பேர்’ எனத் தொடங்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைக்கு உயிரூட்டும் விதமாக ஓவியம் வரையும் ஓவியர். இடம்: திருநெல்வேலி - கொக்கிரகுளம். படங்கள் : மு.லெட்சுமி அருண்

65 / 70
66 / 70
67 / 70

சென்னை - கிழக்கு கடற்கரை சாலை ஆறுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால்.... முதற்கட்டமாக பாலவாக்கத்தில் சாலையோரத்தில் இருந்த கடைகள் மற்றும் வீடுகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. படங்கள் : பு.க.பிரவீன்

68 / 70
69 / 70
70 / 70

Recently Added

More From This Category

x