Published on : 17 Oct 2020 17:58 pm

பேசும் படங்கள்... (17.10.2020)

Published on : 17 Oct 2020 17:58 pm

1 / 29

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பாக ’கரோனா’ விழிப்புணர்வு பிரச்சாரம்... தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இன்று (17.10.2020) நடைபெற்றது. இதில் ஆடல், பாடல் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. படங்கள் : பு.க.பிரவீன்

2 / 29
3 / 29
4 / 29
5 / 29
6 / 29
7 / 29
8 / 29
9 / 29
10 / 29

சென்னை - நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் மண்டிக் கிடக்கும்... ஆகாயத்தாமரையை மாநகராட்சி சார்பில் மிதவை இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. படங்கள் : பு.க.பிரவீன்

11 / 29
12 / 29
13 / 29
14 / 29

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். உடன் அமைச்சர்கள். படங்கள் : ம.பிரபு

15 / 29
16 / 29
17 / 29

சென்னை - தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ’சாதனை கொலு’ என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை வெளிப்படுத்தும் வகையில்... கொலு வைக்கப்பட்டுள்ளது. இதை மாநிலத் தலைவர் எல்.முருகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். படங்கள் : ம.பிரபு

18 / 29
19 / 29

இந்திய கம்யூனிச இயக்கம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவையொட்டி... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றினார். மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே,கனகராஜ், மாநிலக் குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர் படங்கள் : ம.பிரபு

20 / 29
21 / 29
22 / 29

மதுரை - எஸ்.எஸ்.காலனியில் உள்ள திருமண மண்டபத்தில் திமுக மாநகரச் செயலர் தளபதி தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்தனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

23 / 29

மதுரை மாவட்டம் - பேரையூர் வட்டம் சூலபுரம் கிராமத்தில் செல்லாண்டி அம்மன் கோயிலில் திருவிழா நடத்த பாதுகாப்புக் கோரி... மதுரை காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (17.10.2020) மனு கொடுக்கச் சென்ற சூலபுரம் கிராம மக்கள். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

24 / 29
25 / 29

மதுரை - கரும்பாலையைச் சேர்ந்த ராமன், முத்தரசி இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டதையடுத்து... இத்திருமணத்துக்கு இவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால்... இவர்கள் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பாதுகாப்பு வழங்கக் கோரி.... தஞ்சம் புகுந்துள்ளனர். படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

26 / 29
27 / 29

நாடு முழுவதும் இன்று (17.9.2020) முதல் நவராத்திரிப் பண்டிகை தொடங்கியுள்ளதையொட்டி... சென்னை - தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். படங்கள் : ம.பிரபு

28 / 29
29 / 29

Recently Added

More From This Category