Published on : 16 Oct 2020 21:08 pm

பேசும் படங்கள்... (16.10.2020)

Published on : 16 Oct 2020 21:08 pm

1 / 32

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்காதே மற்றும் கல்விக் கட்டணத்தை உயர்த்துகிற உயர் சிறப்பு நிறுவன அந்தஸ்தை ஏற்காதே... என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மாணவர் சம்மேளனம் சார்பில் இன்று (16.10.2020) அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: ம.பிரபு

2 / 32
3 / 32
4 / 32

சென்னை - தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (16.10.2020) வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடியான 5-வது தலைமுறை வாரிசான ஜெகவீர சுப்ரமணிய கட்டபொம்மன் துரை சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் அக்கட்சியினர் கலந்துகொண்டனர். படங்கள் : ம.பிரபு

5 / 32
6 / 32
7 / 32
8 / 32

'கரோனா' தொற்றுப் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து சேவை... மீண்டும் இயக்கப்படவுள்ளதையொட்டி... கோவை - காந்திபுரத்தில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில்... சொகுசுப் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் இன்று (16.10.2020) வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் கோவை - காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் முன்னதாக பயணிகளுக்கு உடல் வெப்ப நிலையை அலுவலர்கள் பரிசோதித்தனர். இதைத் தொடர்ந்து இப்பேருந்து நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் திரண்டிருந்தனர். படங்கள் : ஜெ .மனோகரன்

9 / 32
10 / 32
11 / 32
12 / 32
13 / 32
14 / 32
15 / 32
16 / 32

மத்திய அரசு வேலைவாய்ப்பில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்காததைக் கண்டித்து... புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று (16.10.2020) நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர்தொல். திருமாவளவன் எம்பி கலந்துகொண்டார். அருகில் - அக்கட்சியின் நாடாளுமன்ற் உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் அக்கட்சியினர். படங்கள்: எம்.சாம்ராக்

17 / 32
18 / 32
19 / 32

புதுச்சேரி - கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கூட்டுறவு நிறுவனமான ’அமுதசுரபி’ பெட்ரோல் பங்கில்... பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படாமல் மூடப்பட்டிருந்த நிலையில்... அங்குள்ள ஊழியர்கள் ஊதியம் வழங்கக் கோரி பல்வேறு வகைகளில் தொடர்ந்து ஆர்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அரசு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்பதற்காக புதுச்செரி - வருவாய் துறையினர்... பெட்ரோல் பங்க்கை கையகப்படுத்தி... இன்று (16.10.2020) அரசு வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கி வருகின்றனர். படங்கள்: எம்.சாம்ராஜ்

20 / 32
21 / 32

புதுச்சேரி - பாஜக அலுவலகத்தில் இன்று (16.10.2020) நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில்... பாஜக தேசியச் செயலர் ரவி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார். அருகில் - புதுவை மாநில பாஜக தலைவர் சுவாமிநாதன் எம்எல்ஏ மற்றும் எம்எல்ஏ-க்கள் செல்வகணபதி, சங்கர் ஆகியோர். படம் : எம்.சாம்ராஜ்

22 / 32

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கியமான பெரிய ஏரிகளில் கூடுவாஞ்சேரி ஏரியும் ஒன்று. இந்த ஏரியில் தேங்கியுள்ள நீரில் முழுவதும் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளதால்... ஏரி நீரும் இப்பகுதி நிலத்தடி நீரும் பாதிப்படைவதால் இந்த ஏரியை சீரமைத்து... தூர் வார வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்

23 / 32
24 / 32
25 / 32
26 / 32

மத்திய அரசு வேலைவாய்ப்பில்... எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காததைக் கண்டித்து.... மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே.... விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பாக இன்று (16.10.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

27 / 32

சென்னை - தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில்... மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில்... அக்கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று (16.10.2020) நடைபெற்றது. முன்னதாக கமல்ஹாசனை அக்கட்சியினர் மலர்த் தூவி வரவேற்றனர். படங்கள் : ம.பிரபு

28 / 32
29 / 32
30 / 32
31 / 32
32 / 32

Recently Added

More From This Category