Published on : 15 Oct 2020 17:13 pm
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வேலூர் மண்டல தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம், 450 பவுன் தங்க நகைகள், 7 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் அசையா சொத்துகளுக்கான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் டிரங்க் பெட்டியில் வைத்து... பலத்த பாதுகாப்புடன் இன்று (15.10.2020) எடுத்துச் சென்றனர். படங்கள் : வி.எம்.மணிநாதன்
சென்னை - குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையின் நடுவே விமான நிலையத்தில் இருந்து பரங்கிமலை போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகள் சிக்னலில் காத்திருக்கும் நேரத்தில்... கரகாட்டக் கலைஞர்களை மூலம் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் ‘கரோனா’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். படங்கள் : எம்.முத்து கணேஷ்
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் முறைகேடுகளை கண்டித்தும்... அதன் துணைவேந்தர் சுரப்பாவை பதவி விலகக் கோரியும்... திமுக இளைஞரணி சார்பில் இன்று (15.10.2020) சென்னை - குரோம்பேட்டை எம்ஐடி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள் : எம்.முத்துகணேஷ்
சென்னை - புறநகர் போக்குவரத்து காவல் துறை மேற்கு மாவட்டம் சார்பில்... போக்குவரத்து காவலர்கள் இரு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று 'கரோனா’ விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இன்று (15.10.2020) ஈடுபட்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி அண்ணா வளைவில் தொடங்கி ஆவடி வரை சென்று... மீண்டும் அண்ணா வளைவில் பேரணியை நிறைவடைந்தது. படங்கள் : பு.க.பிரவீன்
தமிழகத்தில் - நாளை முதல் தனியார் சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து... இன்று (15.10.2020) பேருந்துகளில் கிருமி நாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. படங்கள்: பு.க.பிரவீன்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை எதிர்த்தும் - அதன் துணைவேந்தர் சுரப்பாவை பணி நீக்கம் செய்யக் கோரியும்... திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், இன்று (15.10.2020) உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படங்கள் : பு.க.பிரவீன்
நவராத்திரி பண்டிகை வரும் 17-ம்-தேதிமுதல் தொடங்குவதையொட்டி... வீட்டில் கொலு பொம்மைகளை அலங்கரித்து வைத்து பூஜை செய்ய வேலூர் அண்ணா சாலையில் உள்ள வட ஆற்காடு சர்வோதய சங்கம் கதர் கிராம கைத்தொழில் பவனில் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை இன்று (15.10.2020) வாங்கிய மக்கள். படங்கள் : வி.எம்.மணிநாதன்.
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையைக் கண்டித்து புதுச்சேரியில் கண்களை கட்டிக் கொண்டு சைக்கிளில் இன்று (15.10.2020) சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவன் சாய் பிரணவ். படங்கள் : எம்.சாம்ரான்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு... புதுச்சேரி - திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் இன்று (15.10.2020) அவரது உருவப்படத்திற்க்கு அஞ்சலி செலுத்தினர். படங்கள் : எம்.சாம்ராஜ்
புதுச்சேரி மாநிலத்தில் இன்று (15.10.2020) முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இன்று படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே திரையரங்குக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி மாநிலத்தில் இன்று (15.10.2020) முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இன்று படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே திரையரங்குக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் - திரையரங்குக்குள் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? கிருமிநாசினி வழங்கப்படுகிறதா? ரசிகர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என புதுச்சேரி - துணை ஆட்சியர் சுதாகர் மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். படம் : எம்.சாம்ராஜ்
புதுச்சேரி மாநிலத்தில் இன்று (15.10.2020) முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இன்று படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே திரையரங்குக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு... ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கையில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகர்கள். படங்கள் : எம்.சாம்ராஜ்