Published on : 11 Oct 2020 19:17 pm

பேசும் படங்கள்... (11.10.2020)

Published on : 11 Oct 2020 19:17 pm

1 / 32

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ’கரோனா’ தொற்றுக் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய செவிலியர்களுக்கான எழுத்துத் தேர்வு புதுச்சேரி - விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் இன்று (11.10.2020) நடைபெற்றது. இதில் கையுறை மற்றும் மூகக்கவசத்துடன் தேர்வு எழுதும் செவிலியர்கள். படங்கள்.: எம்.சாம்ராஜ்

2 / 32
3 / 32
4 / 32
5 / 32

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு ’அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பாக... 100 நாட்களுக்கு மேல் தொடர்ந்து உணவளித்து வரும் அம்மா கிச்சனை... இன்று (11.10.2020) தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி

6 / 32

இன்று ரயில்வே பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு... சுமார் 150 ரயில்களை தனியாருக்கு வழங்கப்பட உள்ளதைக் கண்டித்தும்... ரயில்களில் உயர் வகுப்புப் பெட்டிகளை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை - ரயில்வே நிலையத்தின் கிழக்கு நுழைவாயிலின் முன்பு இன்று (11.10.2020) மக்கள் முதன்மை இயக்கம் சார்பாக மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

7 / 32
8 / 32

கடந்த சில தினங்களாக... சென்னை - புறநகர் பகுதிகளில் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு... வெப்பத்தை குறைக்கும் வகையில் இதமாக மழை பொழிந்தது. இன்று காலையில் புல்லின் மேல் உறவாடும் பனித் துளிகளைக் காண மனதுக்கு இதமளித்தது. படங்கள் : எம்.முத்துகணேஷ்

9 / 32
10 / 32
11 / 32
12 / 32
13 / 32
14 / 32
15 / 32

சென்னை - செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் வெளியேறும் பகுதியில்... புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ராட்சத இயந்திரங்களின் உதவியோடு இதன் கட்டுமானப் பணிகள் தற்போது (11.10.2020) மும்முரமாக நடைபெற்று வருகிறது. படங்கள்: எம் .முத்துகணேஷ்

16 / 32
17 / 32
18 / 32
19 / 32

சென்னை - மணலிப்புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் புரட்டாசி மாதம் 10 நாள் திருவிழாவையொட்டி இன்று (11.10.2020) தேர்த் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ’கரோனா’ தொற்று காரணமாக தேரை இழுக்க பொதுமக்களை அனுமதிக்காமல், கிரேன் மூலம் தேர் இழுக்கப்பட்டது. படங்கள் : பு.க.பிரவீன்

20 / 32
21 / 32
22 / 32
23 / 32

சென்னை - தேனி நெடுஞ்சாலை பகுதிகளில் இன்று (11.10.2020) பரவலாக பெய்த மழையில் நனைந்த அறுவடை செய்யப்பட்ட நெல்லை... உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் படங்கள்: பு.க.பிரவீண்

24 / 32
25 / 32
26 / 32

சென்னை - காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று (11.10.2020) சமூக இடைவெளியைப் பற்றி கவலையின்றி மீன் வாங்க திரண்டிருந்த மக்கள் கூட்டம். படங்கள் : பு.க.பிரவீன்

27 / 32
28 / 32
29 / 32

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் இடத்தில்... புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ராட்சத இயந்திரங்களின் உதவியோடு கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. படங்கள்: எம்.முத்துகணேஷ்

30 / 32
31 / 32
32 / 32

Recently Added

More From This Category

x