Published on : 19 Sep 2020 18:23 pm

பேசும் படங்கள்... (19.09.2020)

Published on : 19 Sep 2020 18:23 pm

1 / 64

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி வேலூர் - அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில்... வெங்கடேசப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் இன்று (19.9.2020) தரிசனம் செய்தனர். படம் : வி.எம்.மணிநாதன்

2 / 64
3 / 64
4 / 64
5 / 64
6 / 64

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், புதிய கல்வி கொள்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... இன்று (19.9.2020) வேலூர் - ஆர்டிஓ சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : வி.எம்.மணிநாதன்.

7 / 64

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து வேலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகே இன்று (19.9.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். படம் : வி.எம்.மணிநாதன்

8 / 64

இயற்கையின் படைப்பு அதிசயங்களின் ஒன்றாக... பசுமையான மலை மீது ஆமை ஒன்று அமர்திருப்பதைப் போன்று காட்சியளிக்கும் பாறை. வேலூர் மாவட்டம் - கணியம்பாடி வழியாகச் செல்லும் பொதுமக்களை திரும்பி பார்க்கவும் ரசிக்கவும் வைக்கிறது. படம் : வி.எம்.மணிநாதன்

9 / 64

திருச்சி- காந்தி மார்க்கெட்டில் இன்று காலை பூட்டப்பட்டிருந்த கடை ஒன்றில் தீப் பிடித்தது. இதையடுத்து அங்கு திரண்ட வியாபாரிகள் ’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க 5 மாதங்களாக மூடப்பட்டிருக்கும் மார்க்கெட்டை மீண்டும் திறக்க வலியுறுத்தி இன்று (19.9.2020) போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

10 / 64
11 / 64
12 / 64

திருச்சி- காந்தி மார்க்கெட்டில் இன்று காலை பூட்டப்பட்டிருந்த கடை ஒன்றில் தீப் பிடித்தது. இதையடுத்து அங்கு திரண்ட வியாபாரிகள் ’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க 5 மாதங்களாக மூடப்பட்டிருக்கும் மார்க்கெட்டை மீண்டும் திறக்க வலியுறுத்தி இன்று (19.9.2020) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து - போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

13 / 64

திருச்சி- காந்தி மார்க்கெட்டில் இன்று காலை பூட்டப்பட்டிருந்த கடை ஒன்றில் தீப் பிடித்தது. இதையடுத்து அங்கு திரண்ட வியாபாரிகள் ’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க 5 மாதங்களாக மூடப்பட்டிருக்கும் மார்க்கெட்டை மீண்டும் திறக்க வலியுறுத்தி இன்று (19.9.2020) போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து - மூடப்பட்ட மார்க்கெட் பகுதிகளில் தீ விபத்தை அறிந்து திரண்டிருந்த வியாபாரிகளை வெளியேற்றிய பின்னர் மார்க்கெட் மீண்டும் பூட்டப்பட்டது. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.

14 / 64

நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் இன்று (19.9.2020) முதல் கொலு பொம்மைகள் விற்பனை மற்றும் கண்காட்சி தொடங்கியது. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

15 / 64
16 / 64
17 / 64

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருச்சி - ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு நேற்று இணையவழியில் விண்ணப்பித்திருந்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

18 / 64
19 / 64
20 / 64

பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாளையொட்டி வளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி பெரம்பூர் - கமலாம்பாள் கல்யாண மண்டபத்தில் இன்று (19.9.2020) காலை நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த பால் கனகராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். படங்கள் : பு.க.பிரவீன்

21 / 64
22 / 64
23 / 64
24 / 64

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும், நிதி நிறுவனங்கள் - வங்கிகள் - கூட்டுறவு அமைப்புகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் வசூலை ஓராண்டுக்கு தள்ளி வைப்பதோடு... வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி இன்று (19.9.2020) திருவான்மியூர் சிக்னல் சந்திப்பு அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். படங்கள் : பு.க.பிரவீன்

25 / 64
26 / 64
27 / 64

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி இன்று (19.9.2020) சென்னை - தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான மையத்தில்... வெங்கடேசப் பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். படங்கள் : க.ஸ்ரீபரத்

28 / 64
29 / 64
30 / 64
31 / 64
32 / 64
33 / 64
34 / 64
35 / 64
36 / 64

சென்னை - பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் கலந்தாய்வு கூடத்தில்... இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவான "சலாம் சென்னை" என்ற குறும்படம் வெளியீட்டு விழா இன்று (19.9.2020) சென்னை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் முன்னிலையில் நடைபெற்றது. படங்கள் : க.ஸ்ரீபரத்

37 / 64
38 / 64
39 / 64

இன்று (19.9.2020) காலையில் பெய்த மழையின் காரணமாக திருவான்மியூர் பேருந்து நிலைய வளாகம் முழுதும் மழை நீர் குளம் போல் தேங்கியிருந்தது. படங்கள் : பு.க.பிரவீன்

40 / 64
41 / 64
42 / 64
43 / 64

மதுரை - தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு... இன்று (19.9.2020) கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து, ஸ்ரீதேவி பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் பூதேவியுடன் அலங்காரத்தில் காட்சியளித்தார். படங்கள் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

44 / 64
45 / 64
46 / 64
47 / 64

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று (19.9.2020) மதுரை - கூடலழகர் பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. காணப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி வியூக சுந்தரராஜப் பெருமாள் பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

48 / 64
49 / 64

வேலூரில்... இன்று (19.9.2020) மாலை பெய்த மழையில் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்துசென்ற வாகனங்கள். இடம்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில். படம்: வி.எம்.மணிநாதன்.

50 / 64
51 / 64
52 / 64
53 / 64
54 / 64
55 / 64
56 / 64

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில்.... தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்; கிராமப்புற 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இன்று (19.9.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

57 / 64

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு... திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ’கெட்வெல்’ ஆஞ்சநேயர் கோயிலில் இன்று (19.9.2020) 5,008 வடைகளால் ஆன மாலை ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டிருந்தது. படம் : மு. லெட்சுமி அருண்.

58 / 64

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று (19.9.2020) புதுச்சேரி - காந்தி வீதியில் உள்ள கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீ வரதராஜப் பெருமாள். படம் : எம்.சாம்ராஜ்

59 / 64

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு புதுச்சேரி - காந்தி வீதியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் இன்று (19.9.2020) சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர். படம் : எம்.சாம்ராஜ்

60 / 64

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு புதுச்சேரி - காந்தி வீதியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் இன்று (19.9.2020) சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர். தரிசனத்துக்கு வந்த பக்தர்களின் உடல் வெப்ப நிலையை கோயில் ஊழியர்கள் பரிசோதித்தனர். படம் : எம்.சாம்ராஜ்

61 / 64

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு புதுச்சேரி - காந்தி வீதியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் இன்று (19.9.2020) சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர். தரிசனத்துக்கு வந்தபக்தர்களின் கைகளில் கோயில் ஊழியர் கிருமிநாசினி வழங்கினார். படம் : எம்.சாம்ராஜ்

62 / 64

புதுச்சேரி வக்பு வாரியத்தில் உறுப்பினர்களை நியமிக்கக் கோரி... புதுச்சேரி - துணைநிலை ஆளுநரை சந்திக்க கோரிக்கை மனுவுடன் வந்த அதிமுக எம்எல்ஏ அன்பழகன். படம் : எம்.சாம்ராஜ்

63 / 64

புதுச்சேரி அரசில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி... புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும்... துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அஞ்சல் அனுப்பும் புதுச்சேரி - பட்டதாரி இளைஞர்கள். படம் : எம்.சாம்ராஜ்

64 / 64

புதுச்சேரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநருக்கு பட்டதாரி இளைஞர்கள் சிலர் அஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தபோது... அந்த வழியாகச் சென்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அந்த இளைஞர்களை சந்தித்து... அவர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்வதாக உறுதி வழங்கினார். படம் : எம்.சாம்ராஜ்

Recently Added

More From This Category