Published on : 15 Sep 2020 21:20 pm

பேசும் படங்கள்... (15.09.2020)

Published on : 15 Sep 2020 21:20 pm

1 / 44

அண்ணா 112-வது பிறந்த நாளையொட்டி முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னை - அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்குக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு இன்று (15.9.2020) மலர் தூவி மரியாதை செய்தனர். படங்கள்: பு.க.பிரவீன்

2 / 44
3 / 44
4 / 44

சென்னையில் இன்று (15.9.2020) பல பகுதிகளில் மெல்லிய தூறலாக மழை பொழிந்தது. அண்ணா சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் எல்.ஐ.சி கட்டிடத்தின் பிம்பம் விழுந்து பார்க்க ரம்மியமாக இருந்தது. படம் : பு.க.பிரவீன்.

5 / 44

ஓய்வூதியர்களுக்கு 2019 ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்லவன் இல்லம் முன்பு இன்று (15.9.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: பு.க.பிரவீன்

6 / 44
7 / 44

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால், வேலூரை அடுத்த அமிர்தி வன உயிரியல் பூங்கா அருகே உள்ள கொட்டாறு அருவியில் தண்ணீர் தொடர்ந்து வழிந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவியின் அருகே செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: வி.எம்.மணிநாதன்

8 / 44
9 / 44
10 / 44

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து... சிலையின் கீழே வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர்த் தூவி மரியாதை செய்தனர். படங்கள் : ம.பிரபு

11 / 44
12 / 44
13 / 44
14 / 44

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் அவரது சிலைக்கு திமுக-வின் தெற்கு அமைப்பாளரும் புதுவை சட்டப்பேரவை உறுப்பினருமான சிவா இன்று (15.9.2020) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். படங்கள்: எம்.சாம்ராஜ்

15 / 44
16 / 44

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் அவரது சிலைக்கு புதுச்சேரி - முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் கந்தசாமி ஆகியோர் இன்று (15.9.2020) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். படம்: எம்.சாம்ராஜ்

17 / 44

மத்திய அரசு பல்வேறு வழிகளில் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாகக் கூறி... அதை கண்டித்து புதுச்சேரியில் நாடாளுமன்று உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் இன்று (15.9.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எம்.சாம்ராஜ்

18 / 44

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அண்ணா சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்... அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இன்று (15.9.2020) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். படம்: எம்.சாம்ராஜ்

19 / 44

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி... சென்னை - எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகமான தாயகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு இன்று (15.9.2020) மதிமுக-வின் பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். படம் : ம.பிரபு

20 / 44

சென்னையில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள பல்லாவரம் ஏரி ஆகாயத் தாமரையால் சூழப்பட்டிருந்தது. அதனை இப்போது (15.9.2020) அகற்றும் பணி நடந்து வருகிறது. படங்கள் : எம்.முத்துகணேஷ்

21 / 44
22 / 44
23 / 44
24 / 44
25 / 44
26 / 44

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் நிறுவன நாளை முன்னிட்டு மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளருமான சௌமியா ரெட்டி தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மகளிரணி தலைவி சுதா ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில்.... மகளிரணியினர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (15.9.2020) கேக் வெட்டி கொண்டாடினர். இதையசுத்து கொடியேற்றி, மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. படங்கள் : ம.பிரபு

27 / 44
28 / 44
29 / 44
30 / 44

காஞ்சிபுரத்தில் உள்ள வேகவதி ஆற்றில் சீரமைப்பு பணிகள் தற்போது (15.9.2020) மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படங்கள் : எம்.முத்துகணேஷ்

31 / 44
32 / 44
33 / 44

மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி சென்னை - கலைவாணர்அரங்கில் இன்று (15.9.2020) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்துக்கு வந்தபோது ’நீட்’ நுழைவு தேர்வை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கும் பதாகையை கையில் ஏந்தி வந்திருந்தார். படங்கள் : க.ஸ்ரீபரத்

34 / 44
35 / 44

சென்னை - கலைவாணர் அரங்கில் இன்று (15.9.2020) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் ’நீட்’ தேர்வு குறித்து நடை பெற்ற விவாதத்தின்போது அவைத் தலைவரால் வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள். செய்தியாளர்களிடம் உரையாடினர். படங்கள் : க.ஸ்ரீபரத்

36 / 44
37 / 44
38 / 44

சென்னை - கலைவாணர் அரங்கில் இன்று (15.9.2020) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். படம் : க.ஸ்ரீபரத்

39 / 44

வேலூரில் இன்று (15.9.2020) மாலைப் பொழுதில் வானில் சூழ்ந்த கருமேகக் கூட்டங்களை... நம்பி பலத்த மழைப் பொழிவை எதிர்பார்த்திருந்த பொதுமக்களை - சிறு துளிகளால் ஆசிர்வதித்துவிட்டு கலைந்துச் சென்றது. இடம் : காட்பாடி ரயில் நிலையம். படங்கள் : வி.எம்.மணிநாதன்.

40 / 44
41 / 44
42 / 44

தமிழக முதல்வரால் சென்னையில் நாளை திறக்கப்படவுள்ள வண்டலூர் புதிய மேம்பாலம் இன்று (15.9.2020) அலங்கார விளக்குகளால் மின்னியது. இந்நிலையில் பாலத்தின் கீழே வாகனங்களின் அணிவகுப்பு ஒலிக் கோடுகளாய் பிரதிபலித்ததை காண வசீகரமாக இருந்தது.. படங்கள் : எம்.முத்து கணேஷ்

43 / 44
44 / 44

Recently Added

More From This Category