Published on : 12 Sep 2020 18:50 pm

பேசும் படங்கள்... (12.09.2020)

Published on : 12 Sep 2020 18:50 pm

1 / 29

இன்று (12.9.2020) சென்னை - காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் மகா ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார் எழுப்பி, அதற்கான தகுந்த ஆவணங்களுடன்... ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் உரையாடினார். படங்கள்: க,ஸ்ரீபரத்

2 / 29
3 / 29
4 / 29
5 / 29

கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த மயிலாப்பூர் சாய் பாபா கோயில்... இன்று (12.9.2020 சனிக்கிழமை) முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. கோயிலுக்குள் வருபவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு, தொடந்து உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். படங்கள் : க.ஸ்ரீபரத்

6 / 29
7 / 29
8 / 29
9 / 29
10 / 29

‘நீட்’ தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட ஜோதி ஸ்ரீ துர்காவுக்கு ஆதரவாக ‘நீட்’ தேர்வை எதிர்த்து மதுரை மாநகர் திமுக சார்பாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை அருகே இன்று (12.9.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

11 / 29

மதுரை 6 பட்டாலியனில் பணியாற்றும் முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா ‘நீட்’ தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து... தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (12.9.2020) மதுரை - அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஜோதி துர்காவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

12 / 29
13 / 29
14 / 29
15 / 29

’நீட்’ தேர்வு அச்சத்தில் இன்று (12.9.2020) அதிகாலை தற்கொலை செய்து கொண்ட மதுரை மாணவி ஜோதி துர்காவின் பெற்றோர்... மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தங்கள் மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

16 / 29
17 / 29

மதுரையில் இன்று (12.9.2020) அதிகாலை ‘நீட்’ தேர்வு அச்சத்திலும் தேர்வு தொடர்பான மன அழுத்தத்திலும் தற்கொலை செய்துகொண்ட ஜோதி துர்காவில் உயிரிழப்பு தமிழகமெங்கும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் ’நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய வாலிபர் சங்கம் மாணவர் சங்கத்தினர் இன்று - மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

18 / 29

சென்னை - தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் இன்று (12.9.2020) சனிக்கிழமையை முன்னிட்டு... நீ்ண்ட வரிசையில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு... சுவாமி தரிசனத்துக்காக காத்திருந்த பாலாஜி பக்தர்கள். படங்கள் : பு.க.பிரவீன்

19 / 29
20 / 29
21 / 29
22 / 29

நாளை ’நீட்’ தேர்வு நடைபெற உள்ளதையொட்டி... சென்னை - பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியொன்றில் கிருமிநாசினி கொண்டு தேர்வு அறைகளை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் இன்று (12.9.2020) ஈடுபட்டனர். படங்கள் : பு.க.பிரவீன்

23 / 29
24 / 29
25 / 29
26 / 29

நாளை ‘நீட்’ தேர்வு நடைபெறவுள்ளதையொட்டி... கோவை - பீளமேடு நேஷ்னல் மா டல் பள்ளி தேர்வு மையத்தில் ’கரோனா’ தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... தேர்வு எழுத வரும் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் வரும் வகையில் இன்று (12.9.2020) ஏற்பாடுகள் செய்யப்பட்டன. படம் : ஜெ.மனோகரன்

27 / 29

நாளை ‘நீட்’ தேர்வு நடைபெறவுள்ளதையொட்டி... கோவை - பீளமேடு நேஷ்னல் மா டல் பள்ளி தேர்வு மையத்தில் இன்று (12.9.2020) போலீஸார் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். படம் : ஜெ .மனோகரன்

28 / 29

கோவை - கவுண்டம்பாளையம் கல்பனா திருமண மண்டபத்தில் இன்று (12.9.2020) நடைபெற்ற பா.ஜ.க மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு... இப்பகுதி பாஜக-வினர்ஆளுயர மாலை மற்றும் மலர் கிரீடம் அணிவித்து வரவேற்றனர். படங்கள் : ஜெ .மனோகரன்

29 / 29

Recently Added

More From This Category