Published on : 10 Sep 2020 17:32 pm

பேசும் படங்கள்... (10.09.2020)

Published on : 10 Sep 2020 17:32 pm

1 / 49

திருச்சி ரயில்வே நிலைய நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள நவீன ’தெர்மோ ஸ்கேனர்’ சிசிடிவி கேமரா தற்போது (10.9.2020) அமைக்கப்பட்டுள்ளது, இந்த கேமரா ரயில்வே நிலையத்துக்குள் பயணிகள் நுழையும்போது... அவர்களின் உடல் வெப்ப நிலையை சோதித்து புகைப்படத்துடன் பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்

2 / 49
3 / 49
4 / 49
5 / 49
6 / 49

வேலூர் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் இன்று (10.9.2020)பாரத பிரதமரின் கிஷான் சம்மான் நிதித் திட்டத்தில் தகுதி பெறாதவர்கள்... பெற்ற தொகையைத் திரும்ப வசூல் செய்வது குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அருகில், வேளாண் துறை இணை இயக்குநர் மகேந்திர பிரதாப் தீட்ஷித், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண ஐயப்பதுரை மற்றும் துரைச் சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர். படங்கள் : வி.எம்.மணிநாதன்

7 / 49
8 / 49
9 / 49
10 / 49
11 / 49

சென்னை நகரம் முழுவதும் தூய்மைப் பணியில் குப்பை அள்ளிவர பயன்படும் வகையில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புதிய பேட்டரி வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தப் புதிய வாகனங்கள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள விளையாட்டு திடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படங்கள் : பு.க.பிரவீன்.

12 / 49
13 / 49
14 / 49
15 / 49
16 / 49

சென்னை - தியாகராய நகர் - தெற்கு போக் சாலையில் இன்று தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏழை எளியோருக்கான சமூக நலத் திட்ட உதவிகளை வழங்கினார். படங்கள் : பு.க.பிரவீன்

17 / 49
18 / 49
19 / 49
20 / 49
21 / 49
22 / 49
23 / 49

மதுரையைச் சுற்றியுள்ள கண்மாய்களைத் தூர்வாரி... நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை - தெற்குவாசல் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இன்று (10.9.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

24 / 49

சென்னை - ஸ்டான்லி மருத்துவக் கல்லுரியில் புதிதாக நடை மேம்பாலம் அமைக்க இன்று (10.9.2020) தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டினார். மேலும், அவர் இம்மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளையும் ஆய்வு செய்தார். உடன் மருத்துவர்கள். படங்கள் : ம.பிரபு

25 / 49
26 / 49
27 / 49
28 / 49

சென்னை - கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் இன்று (10.9.2020) நடைபெற்ற உலக தற்கொலை தடுப்பு நாளை முன்னிட்டு... மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள்.. தற்கொலை குறித்த விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர். படங்கள் : க.ஸ்ரீபரத்

29 / 49
30 / 49
31 / 49

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை - கலைவாணர் அரங்கில் நடைப்பெறவுள்ளதையொட்டி... அந்த வளாகத்தைச் சுற்றிலும் சுத்தம் செய்யும் பணியில் பொதுப்பணி துறையினர் இன்று (10.9.2020) ஈடுபட்டனர், படம் : ம.பிரபு

32 / 49

சென்னை - எழும்புரில் உள்ள ஆதித்தனார் சிலை அருகே சாலையின் நடுவில் உள்ள சாலை தடுப்பில் வளர்ந்துள்ள செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் இன்று (10.9.2020) எழும்பூர் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டனர். படங்கள் : க.ஸ்ரீபரத்

33 / 49
34 / 49
35 / 49

கலைவாணர் அரங்கில் விரைவில் நடக்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்துக்காக... அந்த வளாகத்தில் இன்று (10.9.2020) காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைத் தொடர்பாக ஈடுபட்டனர். படங்கள் : க.ஸ்ரீபரத்

36 / 49

கலைவாணர் அரங்கில் விரைவில் நடக்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்துக்காக... அந்த வளாகத்தை இன்று (10.9.2020) சுத்தம் செய்யும் பணியில் தமிழக பொதுத்துறைப் பணியினர் ஈடுபட்டனர். படங்கள் : க.ஸ்ரீபரத்

37 / 49

மாநிலங்களுக்குள் ரயில் போக்குவரத்து கடந்த 7-ம் தேதிமுதல் இயங்கத் தொடங்கி 5 நாட்களான பின்னர்... இன்றுதான் ஓரளவு பயணிகள் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பல்லவன் ரயிலில் பயணிக்க ஃபிளாட்பாரத்தில் காத்திருப்போர் அனைவருக்கும் சுகாதார ஊழியர்கள் வெப்ப பரிசோதனை செய்தனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்

38 / 49
39 / 49
40 / 49
41 / 49
42 / 49
43 / 49
44 / 49
45 / 49
46 / 49

தமிழகத்தில் ஒரே தூணில் 6 வழிப் பாதை சிறப்பைக் கொண்ட... சென்னை - வண்டலூர் பாலம் விரைவில் திறக்கப்படவுள்ளது. அதற்கான இறுதிகட்டப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பாலத்துக்கு அருகில் நடைபாதையில் கற்கள் பதிக்கும் பணி தற்போது (10.9.2020) நடந்து வருகிறது. படங்கள் : எம்.முத்துகணேஷ்

47 / 49
48 / 49
49 / 49

Recently Added

More From This Category

x