Published on : 11 Aug 2020 16:44 pm

பேசும் படங்கள்... (11.08.2020)

Published on : 11 Aug 2020 16:44 pm

1 / 24

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று (11.8.2020) சென்னை - மடிப்பாக்கத்தில் தங்கள் குழந்தைகளுக்கு கண்ணன் மற்றும் ராதை வேடமிட்டு விழாவை கொண்டாடினர். படம்: பு.க.பிரவீன்

2 / 24
3 / 24
4 / 24
5 / 24

ஆடி பரணி விழாவையொட்டி... வேலூர் - பேரிப்பேட்டையில் உள்ள பேரி சிவ சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு இன்று (ஆகஸ்ட் -11) முகக்கவசம் அணிந்து பரணி காவடி எடுத்து தங்களின் நேர்த்திகடனை செலுத்திய பக்தர்கள். படம் : வி.எம்.மணிநாதன்

6 / 24
7 / 24

மதுரையில் பந்தடித் தெருவில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோயிலில் உள்ள உற்சவமூர்த்திக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று (11.8.2020) சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

8 / 24

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக... பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று (11.8.2020) மதுரை - தல்லாகுளம் அஞ்சல் நிலையம் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

9 / 24

மத்திய அரசின் புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தைக் கண்டித்து இன்று (11.8.2020) சென்னை - மெரினா நொச்சிக்குப்பத்தில் மீனவப் பெண்கள்... தெருவில் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். படங்கள் : ம.பிரபு

10 / 24
11 / 24

வறட்சி காலங்களில் சென்னையின் தாகத்தை தீர்க்கும் நீர்ஆதாரங்களில் ஒன்றான சிக்கராயபுரம் குவாரிகளில்... தண்ணீர் இருப்பு தற்போது குறைவாகவே உள்ளது. இனி வரும் வடகிழக்குப் பருவ மழையை நம்பி... நிரம்புவதற்கு காத்திருக்கிறது இந்த ஏரி. படங்கள் : எம்.முத்து கணேஷ்

12 / 24
13 / 24
14 / 24

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு... மதுரை - எல்லீஸ் நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில்... இன்று (11.8.2020) கிருஷ்ணன் மற்றும் ராதை வேடமிட்ட சிறுவர் சிறுமியர்கள். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

15 / 24

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு... இன்று (11.8.2020) கோவை - கொடிசியா சாலையில் தன் குழந்தைக்கு கண்ணன் வேடமிட்டு... இருசக்கர வாகனத்தில் செல்லும் தந்தை. படம்: ஜெ .மனோகரன்

16 / 24

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு...இன்று (11.8.2020) கோவை - இஸ்க்கான் ஜெகநாதர் கோயிலில் கிருஷ்ணர் போல வேடமணிந்து வந்த... மழலையர். படம் : ஜெ. மனோகரன்

17 / 24

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு... இன்று (11.8.2020) கோவை - இஸ்க்கான் ஜெகநாதர் கோயிலில் அலங்கரிக்கபட்டுள்ள கிருஷ்ணர் - ராதை படம் : ஜெ .மனோகரன்

18 / 24

’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால்... வரும் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா அவ்வளவு விமரிசையாக கொண்டாடப்படாது என்கிற அவநம்பிக்கையுடன்... விநாயகர் சிலைகள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டாமல் படுத்து உறங்கும் தொழிலாளர். படம்: ஜெ மனோகரன்

19 / 24

உடல் வெப்பநிலையை அளவிடுவது, சானட்டைசர் வழங்குவது, கபசுரக் குடிநீர் வழங்குவது, விவரச் சேகரிப்பு... என ஒரே இயந்திரத்தில் 4 செயல்கள் செய்யும் இயந்திரத்தை... கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் வடிவமைத்துள்ளார். படம்: ஜெ.மனோகரன்

20 / 24

இன்று (11.8.2020) கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி - வண்ணாரப்பேட்டை இஸ்க்கான் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் மற்றும் பலராமர். படங்கள்: மு.லெட்சுமி அருண்

21 / 24

சென்னை - எழும்பூரில் சினிவாசப் பெருமாள் கோயிலில்... இன்று (11.8.2020) கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு... ஸ்ரீ கிருஷ்ண யாதவ மகா சபை சார்பில்... கிருஷ்ணர், ராதை, கோபியர் வேடம் அணிந்து வந்த சிறுவர் - சிறுமிகள். படங்கள்: ம.பிரபு

22 / 24
23 / 24
24 / 24

Recently Added

More From This Category