Published on : 10 Aug 2020 16:53 pm

பேசும் படங்கள்... (10.08.2020)

Published on : 10 Aug 2020 16:53 pm

1 / 66

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்... ’கரோனா’ தொற்றுப் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பிய காவலர்களை... இன்று (10.8.2020) சென்னை மாநகர ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வரவேற்று... அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். படங்கள் : க.ஸ்ரீபரத்

2 / 66
3 / 66
4 / 66

’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்ததை முன்னிட்டு தமிழக அரசின் ஆணைப்படி... பல நாட்களாக செயல்படாமல் இருந்த உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று (10.8.2020) முதல் செயல்படத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து... சென்னை - மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் உற்சாகத்துடன் பயிற்சி செய்யும் இளைஞர்கள். படங்கள் : க.ஸ்ரீபரத்

5 / 66
6 / 66
7 / 66
8 / 66

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவு இன்று (10.8.2020) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து... சென்னை - திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் பார்க்கும் மாணவிகள். படங்கள் : க.ஸ்ரீபரத்

9 / 66
10 / 66
11 / 66

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் - 10) இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து... வேலூர் தோட்டப் பாளையம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவிப்புப் பலகையில் ஓட்டப்பட்டிருந்த தேர்வு முடிவுகளை... முகக்கசவம் அணிந்து... தனிமனித இடைவெளியுடன் பார்த்த மாணவிகள். படம் : வி.எம்.மணிநாதன்

12 / 66
13 / 66

வரும் 15-ம் தேதி 74-வது சுதந்திர தின விழாவையொட்டி... 2-ம்கட்ட அணிவகுப்பு ஒத்திகை...இன்று (10.8.2020) காலையில் சென்னை - தலைமைச் செயலகம் வாயிலில் நடைபெற்றது. படங்கள் : பு.க.பிரவீன்.

14 / 66
15 / 66
16 / 66
17 / 66
18 / 66
19 / 66
20 / 66

’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்ததை முன்னிட்டு தமிழக அரசின் ஆணைப்படி... பல நாட்களாக செயல்படாமல் இருந்த உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று (10.8.2020) முதல் செயல்படத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து... சென்னை - பாலவாக்கத்தில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் உற்சாகத்துடன் பயிற்சி செய்யும் இளைஞர்கள். படங்கள் : பு.க.பிரவீன்

21 / 66
22 / 66
23 / 66

தென்னக ரயில்வே வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கபடுவதைக் கண்டித்தும், தொடர் வண்டி பணிமனையில் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தியும், திமுக சார்பில் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு இன்று (!0.8.2020) ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: ஜி.ஞானவேல் முருகன்

24 / 66
25 / 66
26 / 66

விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், உள் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தியும், திருச்சி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு இன்று (!0.8.2020) இலை தழைகளைக் கட்டிக்கொண்டு நூதனப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். படம்: ஜி.ஞானவேல் முருகன்

27 / 66
28 / 66
29 / 66

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்ததை முன்னிட்டு தமிழக அரசின் ஆணைப்படி... பல நாட்களாக செயல்படாமல் இருந்த உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று (10.8.2020) முதல் செயல்படத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து... திருச்சி டி.வி.எஸ். டேல்கேட் பகுதியில் இன்று திறக்கப்பட்ட ஓர் உடற்பயிற்சிக் கூடத்தில் முகக்ககவசம் அணிந்து... சமூக இடைவெளியுடன் பயிற்சி தொடங்கிய இளைஞர்கள். படம் : ஜி.ஞானவேல்முருகன்

30 / 66
31 / 66

ஆண்டு வருமானம் 10 ஆயிரத்துக்கும் கீழே உள்ள கோயில்களை இன்று (10.8.2020) முதல் திறக்க அரசு அனுமதியளித்ததையொட்டி சென்னை - கோடம்பாக்கம் பாலமுருகன் கோயிலில் உள்ள சிவன் சன்னதியில் நடைபெறும் பூஜையில் கலந்தி கொண்ட பக்தர்கள். படங்கள் : ம.பிரபு

32 / 66
33 / 66

நாடு முழுவதும் நாளை கிருஷ்ணஜெயந்தி கொண்டாடவுள்ளதை யொட்டி... ஊத்துக்கோட்டையை அடுத்துள்ள சுருட்டுப்பள்ளியில் வடமாநிலத்தவர்களால் செய்யப்பட்ட வண்ண வண்ண கிருஷ்ணர் பொம்மைகள்... சாலையோரம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. படம் : ம.பிரபு

34 / 66

மதுரை மக்களின் கோரிக்கைகளையும்... இப்பகுதி சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளையும் ஏற்று... மதுரை - வைகை ஆற்றங்கரையின் இருபுறமும் புதிதாக சாலைகள் போடப்பட்டுள்ளன. படங்கள் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

35 / 66
36 / 66

சாலைப் பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது; 41 மாத காலப் பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்... என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து... தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறைப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக... இன்று (10.8.2020) மதுரை - கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்ட ம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

37 / 66

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன்... தான் யாசகம் எடுத்த ரூ. 10 ஆயிரம் தொகையை ஆட்சியரிடம் இன்று ‘கரோனா’ நிவாரண நிதியாக வழங்கினார். இவர் இதுபோல் கரோன நிவாரண நிதி வழங்குவது எட்டாவது முறையாகும். படம் : எஸ் கிருஷ்ணமூர்த்தி

38 / 66

ஓபிசி உள் ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்த வேண்டும்; மத்திய கல்வி நிறுவனச் சட்டம் 2006-ஐ திருத்தி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்...என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து... இன்று (10.8.2020) மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சீர் மரபினர் நலச் சங்கம் மற்றும் 68 சமுதாய அமைப்புகள் சார்பாக ’சொட்டாங்கல்’ விளையாட்டு விளையாடி போராட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

39 / 66

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள கோயில்களை சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபாட்டுக்கு இன்று (ஆகஸ்ட் 10) முதல் திறக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து... வேலூர் - டோல்கேட் பகுதியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் இன்று திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபாட்டில் ஈடுபட்டனர். படம் : விஎம்.மணிநாதன்

40 / 66

பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கத் துடிக்கும் மத்திய அரசை கண்டித்தும்... தொழிலாளர்கள் நலச் சட்டங்களை திருத்தும் தொழிலாளர் நல விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி - பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு இன்று (10.8.2020) தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

41 / 66

தமிழகம் முழுவதும் இன்று (10.8.2020) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து... மதுரை பொன்முடியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மதிப்பெண்களை ஆர்வத்துடன் பார்க்கும் மாணவிகள். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

42 / 66
43 / 66

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட... பால்துரை இன்று மதுரையில் ‘கரோனா’ தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்தார்.

44 / 66

இன்று (10.8.2020) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து.. . திருநெல்வேலி - பாளையங்கோட்டை சாராள் டக்கர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு... மதிப்பெண் தகவல்களை தலைமை ஆசிரியர் காண்பித்தார். படம் : மு.லெட்சுமி அருண்

45 / 66

இன்று (10.8.2020) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து.. தங்களது மதிப்பெண்களை ஆர்வமுடன் ஸ்மார்ட் போனில் பார்க்கும்... திருநெல்வேலி - பாளையங்கோட்டை சாராள் டக்கர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள். படங்கள் : மு.லெட்சுமி அருண்

46 / 66
47 / 66

ஏற்காட்டில் நேற்று (9.8.2020) நள்ளிரவில் 98.6 மி.மீ கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மலைப் பாதையில் மண் சரிவு மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. இதையடுத்து 14-வது கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட மண் சரிவை சரிசெய்யும் பணி இன்று (10.8.2020) நடைபெற்றது. படம்: எஸ்.குருபிரசாத்

48 / 66

ஏற்காட்டில் நேற்று (9.8.2020) நள்ளிரவில் 98.6 மி.மீ கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மலைப் பாதையில் மண் சரிவு மற்றும் பாறை சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து... 6-வது கொண்டை ஊசி வளைவில் சரிந்து விழுந்த பாறைக்கற்கள். படம் : எஸ்.குருபிரசாத்

49 / 66

ஏற்காட்டில் நேற்று (9.8.2020) நள்ளிரவில் 98.6 மி.மீ கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மலைப் பாதையில் மண் சரிவு மற்றும் பாறை சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து... கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால்... நீண்ட வரிசையில் காத்திருந்த லாரிகள். படம் : எஸ்.குருபிரசாத்

50 / 66

ஏற்காட்டில் நேற்று (9.8.2020) நள்ளிரவில் 98.6 மி.மீ கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மலைப் பாதையின் பல இடங்களில் திடீர் அருவிகள் உருவாகியுள்ளன. அந்த தீடீர் அருவியில் ஆர்ப்பரித்து பொங்கி வரும் தண்ணீரை... ரசித்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்ட சுற்றுலாப் பயணிகள். படங்கள் : எஸ்.குருபிரசாத்

51 / 66
52 / 66
53 / 66

தமிழகம் முழுவதும் இன்று (10.08.2020) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து... சேலம் - குகை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தங்கள் மதிப்பெண்களை ஆர்வத்துடன் பார்வையிடும் மாணவிகள். படம் : எஸ்.குருபிரசாத்

54 / 66

தமிழகம் முழுவதும் இன்று (10.08.2020) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து... சேலம் - கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தங்கள் மதிப்பெண்களை செல்போன் மூலம் பார்வையிடும் மாணவிகள். படம் : எஸ்.குரு பிரசாத்

55 / 66

கோவை - ராஜ வீதி துணி வணிகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (10.8.2020) வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து தனது மதிப்பெண்களை ஆர்வத்துடன் பார்வையிடும் மாணவிகள். படம் : ஜெ .மனோகரன்

56 / 66
57 / 66
58 / 66
59 / 66

கோவை - ராஜ வீதி துணி வணிகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (10.8.2020) வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மாணவி. படம் : ஜெ .மனோகரன்

60 / 66

’கரோனா’ தொற்றுப் பரவலைத் தடுக்க... மூடப்பட்டிருந்த உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று (10.8.2020) முதல் இயங்க அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து... கோவை - ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்தில் தனி மனித இடைவெளியுடன் இளைஞர்கள் பயிற்சி மேற்கொண்டனர். படம்: ஜெ. மனோகரன்

61 / 66
62 / 66

வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி... கோவை - டவுன்ஹால் காதி கடையில்... விற்பனைக்கு தயாராகி வரும் தேசியக் கொடிகள். படம் : ஜெ .மனோகரன்

63 / 66

ரயில்வே துறையை தனியார்மயமாக்கக் கூடாது; ரயில்வே பணிமனைகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... கோவை கூட்ஷேட் சாலையில் உள்ள ரயில்வே பணிமனை முன்பு இன்று (10.8.2020) எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தின் சேலம் கோட்டச் செயலர் எம். கோவிந்தன் தலைமையில்... ஆர்பாட்டம் நடைபெற்றது. படம் : ஜெ. மனோகரன்

64 / 66

நாளை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு... புதுச்சேரி சாலையோரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வண்ணமயமான கிருஷ்ணர் பொம்மைகளை... தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள். படங்கள் : எம்.சாம்ராஜ்

65 / 66
66 / 66

வரும் 12-ம் தேதி புதன்கிழமையன்று ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளதையொட்டி... பக்தர்கள் முருகன் கோயில்களுக்கு காவடி எடுத்து செல்வதற்காக... வேலூர்- அண்ணா பஜாரில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காவடிகளை வாங்கிச் சென்றனர். படம் : வி.எம்.மணிநாதன்

Recently Added

More From This Category