Published on : 07 Aug 2020 19:25 pm

பேசும் படங்கள்... (07.08.2020)

Published on : 07 Aug 2020 19:25 pm

1 / 48

பாஜக கட்சியின் வடசென்னை மருத்துவப் பிரிவு சார்பாக... ’கரோனா’ தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் இன்று (7.8.2020) ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ’பிளாஸ்மா’ தானம் செய்தனர். படம் : க.ஸ்ரீபரத்

2 / 48
3 / 48

தமிழகத்தில் இனி வரும் காலங்களில் அரசு கல்லூரிகளில்... காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்ற தமிழக அரசின் உத்தரவைக் கண்டித்தும்... காலை - மாலை இரண்டுவேளையும் கல்வி கற்பிக்கும் முறையை அமல்படுத்தக் கோரியும்... சென்னை - தியாகராய நகரில் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள காமராஜர் நினைவில்லத்தின் முன்பு... ‘காமராஜர் கல்வி மேம்பாட்டு நிறுவனம்’ சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. படம் : க.ஸ்ரீபரத்

4 / 48

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி... சென்னை - மேரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் இன்று (7.8.2020) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார். உடன் - துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு மற்றும் அக்கட்சியினர். படம் க.ஸ்ரீபரத்

5 / 48

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி... சென்னை - அண்ணா சாலையில் உள்ள அறிவாலயத்தின் முகப்பில் அமைந்திருக்கும் கருணாநிதியின் சிலையின் முன்பு இன்று (7.8.2020) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்... மலர் அஞ்சலி செலுத்தினார். அருகில் - துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு மற்றும் அக்கட்சியினர். படங்கள் : க.ஸ்ரீபரத்

6 / 48
7 / 48

இணைய வழி அழைப்புகள் மூலம் ‘ ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வந்ததாக.. வேலூர் - கலாஸ்பாளையம் சஞ்சீவி பிள்ளை தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி... அந்த வீட்டில் இருந்த கணினி, இணையதள சேவைக் கருவிகள் மற்றும் ஆவணங்களை இன்று (7.8.2020) பறிமுதல் செய்து காவல்துறை வாகனத்தில் எடுத்துச் சென்றனர். படம் : வி.எம்.மணிநாதன்

8 / 48
9 / 48
10 / 48

கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு தேங்காய்களை ஏற்றி வந்த லாரியொன்று... இன்று (7.8.2020) காலையில் வேலூர் மாவட்டம், பொய்கை அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படங்கள் : வி.எம்.மணிநாதன்

11 / 48
12 / 48

ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையான இன்று (ஆகஸ்ட் 7) வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. படம் : வி.எம்.மணிநாதன்

13 / 48

ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையான இன்று (ஆகஸ்ட் 7) வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில்... அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. படம் : வி.எம்.மணிநாதன்

14 / 48

திருச்சியில் கரோனா தொற்று பாதித்த காவலர்கள் சிலர்... சிகிச்சைக்குப் பின்பு இன்று (7.8.2020) பணிக்குத் திரும்பினர். அவர்களுக்கு பாராட்டுச் சான்று, பழங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து உள்ளிட்டப் பொருட்களை வழங்கி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் வரவேற்றார். படம் : ஜி.ஞானவேல்முருகன்

15 / 48

திருச்சியில் கரோனா தொற்று பாதித்த காவலர்கள் சிலர்... சிகிச்சைக்குப் பின்பு இன்று (7.8.2020) பணிக்குத் திரும்பினர். அவர்களை வரவேற்று மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் வழங்கிய அன்பளிப்பு பெட்டியை பெற்றுக்கொண்ட காவலர்கள். படம் : ஜி.ஞானவேல்முருகன்

16 / 48

மத்திய - மாநில அரசுப் பணிகளில் 90 சதவீதம் வேலைவாய்ப்பை தமிழக இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... திருச்சி - பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம் : ஜி.ஞானவேல்முருகன்

17 / 48

’கரோனா’ தொற்று ஏற்பட்டு... குணமடைந்து பணிக்குத் திரும்பிய 7 காவலர்களை சென்னை - குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ... இன்று (7.8.2020) பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகரன் வரவேற்றார். படம் : எம்.முத்து கணேஷ்

18 / 48

சென்னை - அண்ணா சாலையில் உள்ள மின் சாதனப் பொருட்கள் விற்கப்படும் ரிச் தெருவில் (ரேடியோ மார்க்கெட்) மின் சாதனப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடும் நிலையில்... அங்குள்ள சில கடைகளில் பணிபுரிந்த சிலர் ’கரோனா’ தொற்றால் பாதித்ததையொட்டி.. அப்பகுதியில் உள்ள சில தெருக்கள் தகடுகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் ’தொற்று’ பரவலை மனதில் கொள்ளாமல் இன்று (7.8.2020) தடுப்புகளைத் தாண்டிச் செல்லும் பொதுமக்கள். படம் : ம. பிரபு

19 / 48
20 / 48

’கரோனா’ தொற்று தடுப்புக்காக அமலில் இருக்கும் ஊரடங்கு கால ஓய்வை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட... வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் புதிய சைக்கிள் ஒன்றை உ ருவாக்கியுள்ளார். சைக்கிள் பிரியரான இவர்.. தனது சகோதரரின் லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் ஊதிய தொகையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து... லேத் பட்டறையில் உபயோகமற்ற பொருட்களை சேர்த்து... எவருடைய உதவியுமின்றி தானே யோசித்து இந்தப் புதிய சைக்கிளை உருவாக்கியுள்ளார். சாலையில் சிறுவர்களும் பெரியவர்களும் ஓட்டும் வகையில் இந்த புதிய சைக்கிளை ராஜேந்திரன் வடிவைத்துள்ளார். தகவல் மற்றும் படங்கள் : ம.பிரபு

21 / 48
22 / 48

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று (7.8.2020) திருநெல்வேலி , தென்காசி மாவட்டங்களுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவும் அரசு துறை கட்டிடங்களை திறந்து வைக்கவும் ‘கரோனா’ பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவும் வந்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு... அரங்கத்துக்குள் வருவதற்கு முன்பு... ’கரோனா’ பாதுகாப்பு நடவடிக்கையாக சுகாதார அலுவலர்கள் உடல் வெப்பப் பரிசோதனை செய்தனர். பின்னர் அவர் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டு மேடைக்கு வருகை தந்தார். படம்: மு.லெட்சுமி அருண்

23 / 48
24 / 48

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று (7.8.2020) நடைபெற்ற நிகழ்ச்சியில்... திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசு துறை கட்டிடங்களுக்கான கல்வெட்டுகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார் . படங்கள் : மு. லெட்சுமி அருண்.

25 / 48
26 / 48
27 / 48
28 / 48

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று (7.8.2020) நடைபெற்ற கரோனா பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி... அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். படங்கள் : மு. லெட்சுமி அருண்.

29 / 48
30 / 48

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று (7.8.2020) நடைபெற்ற ’கரோனா’ பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் பழனிசாமி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். படங்கள்: மு.லெட்சுமி அருண்

31 / 48
32 / 48

வாடகை கார் செல்வதற்கு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி.... சேலம் - கந்தம்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு... இன்று (7.8.2020) சேலம் மாவட்ட அனைத்து வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எஸ்.குரு பிரசாத்.

33 / 48

புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு... அவரது உருவப்படத்துக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். அருகில் திமுக வடக்கு அமைப்பாளர் சிவக்குமார். படம்: எம்;சாம்ராஜ்

34 / 48

புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு... அவரது உருவப்படத்துக்கு புதுச்சேரி - தெற்கு திமுக அமைப்பாளர் சிவா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.அருகில் துணைஅமைப்பாளர் அனிபால் கென்னடி. படம்: எம்:சாம்ராஜ்

35 / 48

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிலையில்... வரும் 22-ம் தேதி விநாயகர் சதுார்த்தியையொட்டி ,புதுச்சேரி - பிள்ளையார்குப்பம் பகுதியில் மிகவும் குறைந்த அளவே சிறிய வகை பிள்ளையார் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. படம்: எம்.சாம்ராஜ்

36 / 48

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி.. சென்னை - குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, சட்டப்பேரவை உறுப்பினர் தா.மோ.அன்பரசன் மற்றும் இ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு... அப்பகுதியில் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு இன்று (7.8.2020) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். படம் : எம்.முத்து கணேஷ்

37 / 48

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி.. சென்னை - குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, சட்டப்பேரவை உறுப்பினர் தா.மோ.அன்பரசன் மற்றும் இ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு இன்று (7.8.2020) கருணாநிதியின் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். படம்: எம்.முத்து கணேஷ்

38 / 48

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி.. சென்னை - குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, சட்டப்பேரவை உறுப்பினர் தா.மோ.அன்பரசன் மற்றும் இ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு... அப்பகுதியில் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு இன்று (7.8.2020) மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன்... அவர்களுக்குநிவாரணப் பொருட்களையும் வழங்கினர். படம் : எம்.முத்து கணேஷ்

39 / 48

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மதுரையில் திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, மத்திய தொகுதி எம்எல்ஏ தியாகராஜன், திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு முன்பு அஞ்சலி செலுத்தினர். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

40 / 48

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள நீதிமன்றங்களை உடனடியாக திறக்க வேண்டும்; வழக்கறிஞர்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து... இன்று (7.8.2020) அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக... சென்னை - உயர்நீதிமன்ற மதுரை கிளையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி

41 / 48

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு.... மதுரை எல்லீஸ் நகரில் உள்ள கருமாரி அம்மன் கோயிலில் இன்று (7.8.2020) அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

42 / 48

கோவை - திருச்சி சாலை அரசு மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிலையம் அருகே சாலையோரம் உள்ளவர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு... கோவை - தெப்பக்குளம் 8 -ம் பகுதி திமுகவினர் போர்வைகள் மற்றும் உணவு வழங்கினர். படம் ஜெ .மனோகரன்

43 / 48

கோவை - திருச்சி சாலை ஹைவேஸ் காலனி பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு... அவருடைய உருவப் படத்துக்கு அப்பகுதி திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். படம் : ஜெ .மனோகரன்

44 / 48

தேசிய - கைத்தறி தினத்தையொட்டி இன்று (7.8.2020) கோவை மக்கள் மய்யம் சார்பில் கல்லுரிகளுக்கு இடையான கைத்தறி ஆடை அழகு அணிவகுப்பில் கலந்துகொண்ட கல்லுரி மாணவிகள். படம் : ஜெ .மனோகரன்

45 / 48
46 / 48
47 / 48
48 / 48

தேசிய கைத்தறி தினத்தையொட்டி இன்று (7.8.2020) கோவை மக்கள் மய்யம் சார்பில் கல்லுரிகளுக்கு இடையேயான கைத்தறி ஆடை அழகு அணிவகுப்பில் கல்லுரி மாணவ - மாணவியர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கான இணையதளம் வாயிலாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் தேர்வானவர்களுக்குரிய பரிசுகளை வழங்குகிறார் மக்கள் சேவை தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் சுச்சாரித்தா உள்ளிட்டோர். படம்: ஜெ .மனோகரன்

Recently Added

More From This Category