Published on : 06 Aug 2020 19:03 pm

பேசும் படங்கள்... (06.08.2020)

Published on : 06 Aug 2020 19:03 pm

1 / 46

திருநெல்வேலி - கொக்கிரக்குளம் தாமிரபரணி நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள புதிய ஆற்றுப்பாலம்... இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து - தமிழக முதல்வர் கைகளால் திறப்பு விழா காணத் தயாராகக் காத்திருக்கிறது. படங்கள் : மு.லெட்சுமி அருண்

2 / 46
3 / 46

மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் ‘கரோனா’ தொற்றுப் பாதுகாப்பு ஆய்வு கூட்டத்துக்கு வருகை தரவிருக்கும்... தமிழக முதலவர் பழனிசாமி பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிக்கான... மேடை அமைக்கும் பணி... திருநெல்வேலி ஆட்சியர் வளாகத்தில் இன்று (6.8.2020) நடைபெற்றன. படங்கள் : மு. லெட்சுமி அருண்

4 / 46
5 / 46

திருநெல்வேலி - மேலப்பாளையம் பகுதியில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம்... ’கரோனா’ சிகிச்சை மேற்கொள்வவதாகவும்... அதனை தடை செய்யக் கோரி... அப்பகுதி பொதுமக்கள் குறிச்சி செல்லும் சாலையில் இன்று (6.8.2020) சாலை மறியல் போராட்டம் செய்தனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்

6 / 46
7 / 46

திருநெல்வேலி டவுன் போஸ் காய்கறி சந்தையில் உள்ள கடைகள் அனைத்தும் ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ்... புதிய கட்டிடம் கட்டுவதையொட்டி சமீபத்தில் இடிக்கப்பட்டன. அங்கு இதுவரையில் செயல்பட்டு வந்த காய் கனி கடைகளுக்கு - திருநெல்வேலி டவுன் பார்வதி சேஷ மஹால் எதிரே இன்று (6.8.2020) இடம் ஒதுக்கப்பட்டது. படங்கள்: மு.லெட்சுமி அருண்

8 / 46
9 / 46
10 / 46
11 / 46

’கரோனா’ தொற்றுப் பரவல்... அதை தடுக்க சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் ஊரடங்கு என பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும்... புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 15 -ம் தேதி சுதந்திர தின விழாவை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (6.8.2020) நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலர் அஷ்வனிகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். படம் : எம்.சாம்ராஜ்

12 / 46

திருநெல்வேலி மாவட்டத்தில்... நடைபெறவிருக்கும் மாவட்ட வளர்ச்சி மற்றும் ‘கரோனா’ தொற்றுப் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்துகொள்ளவிருப்பதையொட்டி... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கலையரங்கம் தயார் நிலையில் உள்ளது. படம்: மு.லெட்சுமி அருண்

13 / 46

புதுச்சேரி தேர்தல் துறையில்... ’சீல்’ வைத்து பாதுகாக்கப்படும் வாக்கு இயந்திரங்களை... இன்று (6.8.2020) அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் - துணை ஆட்சியர் சுதாகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். படம் : எம்.சாம்ராஜ்

14 / 46

கோவை - பீளமேடு ஹட்க்கோ காலனிப் பகுதியில் கோவை மாநகராட்சி சார்பில் இன்று (6.8.2020) நடந்த ‘கரோனா’ தொற்று தடுப்பு முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள்... காய்ச்சல் பரிசோதனை செய்துகொண்டு. மாத்திரை மருந்துகளை வாங்கிச் சென்றனர். படம் ; ஜெ .மனோகரன்

15 / 46
16 / 46
17 / 46

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக... கோவை - ஜிசிடி கல்லுரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் சேறும் சகதியுமாகி பொதுமக்களும் வியாபாரிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். படம்: ஜெ .மனோகரன்

18 / 46
19 / 46
20 / 46

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘ EIA 2020’ என்கிற இயற்கையையும்... சுற்றுச்சூழலையும் பெரிதும் பாதிக்கும் திட்டத்தை... கண்டித்து கோவை - தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சியினர் இன்று (6.8.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : ஜெ .மனோகரன்

21 / 46
22 / 46

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் முக்கியமானது... 85.40 கன அடி ஆழம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியாகும் . கடந்த ஆண்டு வறண்டு கிடந்த நிலையில்... இந்த ஏரியில் தற்போது 77 கன அடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. படம் : பு.க.பிரவீன்

23 / 46

வேலூர் மாநகராட்சியில் ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் ரூ.175.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 13 அங்கன்வாடி மையங்களை... அங்கன்வாடி பணியாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று (ஆகஸ்ட் - 6) நடந்தது. இதில், புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களின் சாவியை அமைச்சர் கே.சி.வீரமணி பணியாளர்களிடம் ஒப்படைத்தார். படம் : வி.எம்.மணிநாதன்

24 / 46

வரும் 15-ம் தேதி நடைபெறவிருக்கும் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்காக சென்னையில் தலைமைச் செயலகத்தை அழகுப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி தலைமைச் செயலக வளாகத்தில் ஊழியர்கள் ’மெக்சிகன் புல்’ பதிக்கின்றனர். படங்கள் : க.ஸ்ரீபரத்

25 / 46
26 / 46

வரும் 15-ம் தேதி நடைபெறவிருக்கும் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்காக சென்னையில் தலைமைச் செயலகத்தை அழகுப்படுத்தும் விதமா அதன் முகப்பு பகுதியில்... வண்ணம் தீட்டும் பணிகள் இன்று (6.8.2020) மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படம் : க.ஸ்ரீபரத்

27 / 46

மதுரை மாவட்டத்தில் ரூ.32 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி, ஏற்கெனவே நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகளை இன்று (6.8.2020) திறந்து வைத்தார். அருகில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி. உதயகுமார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

28 / 46

மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (6.8.2020) நடைபெற்ற நிகழ்ச்சியில்... தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

29 / 46

மதுரை ஆட்சியர் வளாகத்தில் இன்று (6.8.2020) நடைபெற்ற நிகழ்ச்சியில்... முதல்வர் பழனிசாமி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் அமைச்சர்கள் ஆர். பி. உதயகுமார், செல்லூர் ராஜு படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

30 / 46

மதுரையில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி... நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு இன்று (6.8.2020) வருகை தந்த முதல்வரை... முன்னதாக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் வரவேற்றனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

31 / 46

வேலூர் மாவட்டம், பாகயத்தை அடுத்த இடையசாத்துப் பகுதி... மூப்பனார் நகரில் ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சர் கே.சி.வீரமணி இன்று (ஆகஸ்ட் - 6) திறந்து வைத்தார். அருகில் வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் உட்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர். படங்கள் : வி.எம்.மணிநாதன்

32 / 46
33 / 46
34 / 46
35 / 46
36 / 46
37 / 46

சென்னை - காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில்.. நவீன கொட்டகை (ஷெட் ) அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆம்.. புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது மீன் மார்கெட்! படம் : க.ஸ்ரீபரத்

38 / 46

வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள... சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்காக... சென்னை - நேப்பியர் பாலம்... சுத்தப்படுத்தப்பட்டு வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. படங்கள் : க . ஸ்ரீபரத்

39 / 46
40 / 46

வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள... சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்காக தலைமைச் செயலகத்தை அழகுப்படுத்தும் விதமாக வண்ணம் தீட்டும் பணி இப்போது நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தின் கோட்டை கொத்தளத்தில் உள்ள தேசியக் கொடிக் கம்பத்துக்கு வன்ணம் தீட்டும் ஊழியர். படம் : க.ஸ்ரீபரத்

41 / 46

சென்னையில் சமீப காலமாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக... பல்லாவரம் ஏரி நிரம்பித் தளும்புகிறது. நிரம்பிய ஏரித் தண்ணீரில் நீர் கோழிகள். ’கபடி’ விளையாடுகின்றனவோ! படங்கள் : எம்.முத்து கணேஷ்

42 / 46
43 / 46

’கரோனா’ தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் அமலில் இருக்கும் ஊரடங்கு காரணமாக... திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த... உடற்பயிற்சிக் கூடங்களை... இன்றுமுதல் (6.8.20200 திறக்கலாம் என... புதுச்சேரி ஆட்சியர் அருணின் உத்தரவையடுத்து... இன்று மாலையில் திறக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தில் உற்சாகமாக உடற்பயிற்சியில் மேற்கொண்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள். படங்கள் : எம்.சாம்ராஜ்

44 / 46
45 / 46
46 / 46

Recently Added

More From This Category