Published on : 28 Jul 2020 20:21 pm

பேசும் படங்கள்... (28.07.2020)

Published on : 28 Jul 2020 20:21 pm

1 / 59

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் இன்று (28.7.20)பெய்த மழையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் மற்றும் மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். படங்கள்:எம்.முத்து கணேஷ்

2 / 59
3 / 59
4 / 59

சென்னையை அடுத்த தாம்பரம் - சானட்டோரியம் பகுதியில் இன்று (28.7.20) மாலையில் பெய்த மழையில் சாலையில்... நனைந்துகொண்டே நடந்தபடியும், வாகனங்களிலும் வீடு திரும்பும் பொதுமக்கள். படங்கள் : எம்.முத்து கணேஷ்

5 / 59
6 / 59
7 / 59
8 / 59
9 / 59
10 / 59
11 / 59
12 / 59
13 / 59
14 / 59
15 / 59
16 / 59

சென்னையை அடுத்த தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (28.7.20) மாலை நல்ல மழை பெய்தது.தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் மழையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். படங்கள்:எம்.முத்து கணேஷ்

17 / 59
18 / 59
19 / 59
20 / 59
21 / 59
22 / 59
23 / 59
24 / 59

சென்னை - அண்ணா சாலை எல்.ஐ.சி அருகே இன்று (28.7.2020) மாலையில் இருள் சூழ்ந்து மழை பெய்ததால் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. படம்: ம.பிரபு

25 / 59

சென்னையை அடுத்த நங்கநல்லூர் - பழவந்தாங்கல் பகுதியில் சுரங்கப்பாதை வேலை நீண்ட நாட்களாக நடந்து வருகிறது .ஊரடங்கு முடிவதற்குள் பணி முடிந்தால் நல்லது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படங்கள்:எம்.முத்து கணேஷ்

26 / 59
27 / 59
28 / 59
29 / 59

சென்னை - அரும்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் இன்று (28.07.20) அகற்றப்பட்டன. படம்: ம.பிரபு

30 / 59
31 / 59

ஒப்பந்த செவிலியர்களுக்கு உரிய முறையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (28.07.20) சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தை முற்றுகையிட்ட ஒப்பந்த செவிலியர்கள். படம்.: ம.பிரபு

32 / 59
33 / 59

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் கரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று (28.07.20) காலை உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒதியஞ்சாலையில் வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். படங்கள்: எம்.சாம்ராஜ்

34 / 59

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் கரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று (28.7.20) காலை உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காமராஜர் நகர் தொகுதி சார்பில் வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள். படங்கள்.எம்.சாம்ராஜ்

35 / 59

பக்ரீத் பண்டிகையை ஆகஸ்ட் 1 -ம் தேதி முஸ்லிம்கள் கொண்டாட உள்ளனர். இதையடுத்து முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகைக் 'குர்பானி 'கொடுக்க உளுந்தூர்ப்பேட்டை, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து புதுச்சேரி முல்லா வீதிக்கு ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. படங்கள்.எம்.சாம்ராஜ்

36 / 59
37 / 59

பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுக்க வந்துள்ள மிகப்பெரிய இந்த செம்மறி ஆடு 37 கிலோ எடை கொண்டது .திமிறும் செம்மறி ஆட்டின் கொம்பைப் பிடித்து காண்பிக்கிறார் மேய்ப்பாளர் கந்தசாமி. படங்கள்;.எம்.சாம்ராஜ்

38 / 59

கோவை - நஞ்சப்பா சாலையில் தன் வளர்ப்பு நாய்க்கு கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணிவித்துச் செல்லும் வாகன ஓட்டி . படம் : ஜெ .மனோகரன்

39 / 59
40 / 59

கடைகள் நெருக்கமாக உள்ள உள்ள இடமான கோவை பவள வீதி, கருப்பக் கவுண்டர் வீதிகளில் மாநகராட்சி மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு கிருமி நாசினி பவுடர்கள் தெளிக்கும் மாநகராட்சி ஊழியர்கள். படம் : ஜெ .மனோகரன்

41 / 59
42 / 59

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு கலாம் மக்கள் அறக்கட்டளை சார்பில் , கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கோவை ் காந்திபுரம் காவல்நிலையம் அருகில் காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார். படம் : ஜெ .மனோகரன்

43 / 59
44 / 59

கரோனா தொற்று சிகிச்சை மையமான கோவை சிங்காநல்லுர் இ எஸ் ஐ மருத்துவமனை அருகே கிருமிநாசினி தெளிக்கும் மாநகராட்சி ஊழியர்கள். படம் : ஜெ .மனோகரன்

45 / 59
46 / 59

கரோனா தொற்று அதிகம் பரவுவதால் மதுரை மாவட்டம் - உசிலம்பட்டி எல்லையில் தேனி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களைப் பரிசோதனை செய்யும் மாவட்ட போலீஸார். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

47 / 59
48 / 59

மதுரையில் இருந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு லாரி மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய ’கோவிட் 19; மருந்துப் பெட்டகங்கள் இன்று (28.7.2020) கொண்டு வந்து இறக்கப்பட்டன. படம்: வி.எம்.மணிநாதன்

49 / 59
50 / 59

காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் உழவர் உழைப்பாளர் குழுவினரின் விவசாய விளைபொருட்களின் மதிப்பு கூட்டும் கூடத்தை இன்று (287.20) வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். படம்: வி.எம்.மணிநாதன்.

51 / 59
52 / 59
53 / 59

டாஸ்மாக் மதுபானக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 50 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய பச்சை வண்ண பேட்ஜ் அணிந்து வேலூர் ரங்காபுரம் மூலக்கொல்லை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் பணியில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் . படம்: வி.எம்.மணிநாதன்.

54 / 59

கரோனா பரிசோதனையை வீடு வீடாக நடத்திப் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும், கரோனா தொற்று காலம் முழுமைக்கும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும், நுண்நிதி நிறுவன கடன்களை அரசே ஏற்று தள்ளுபடி செய்ய வேண்டும், கூட்டுறவு மற்றும் தேசிமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த முதியோர் அனைவருக்கும் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் வாளகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்

55 / 59

சென்னையின் இன்று (28.7.2020) முன் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்து சாலைகளில் தண்ணீர் ஓடியது. வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்ததால் அண்ணா சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் விளக்குகளை எரியவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. படங்கள்: ம.பிரபு

56 / 59
57 / 59
58 / 59

மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே.குருசாமியின் ... காமராசர்புரம் வீட்டின் முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதையொட்டி... காவல் துணை ஆணையர் சிவபிரசாத் இன்று (28.7.2020) விசாரணை மேற்கொண்டார். படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

59 / 59

Recently Added

More From This Category