Published on : 27 Jul 2020 18:34 pm

பேசும் படங்கள்... (27.07.2020)

Published on : 27 Jul 2020 18:34 pm

1 / 57

ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்றச் செயல்களைத் தடுக்க... ரயில்வே போலீஸாருக்கு உதவியாக புதிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு இன்று (27.7.2020) வந்த வாகனத்தை ஓட்டிப் பயிற்சியெடுக்கும் போலீஸார். படங்கள் : எம்.முத்துகணேஷ்

2 / 57
3 / 57
4 / 57

விவசாயத்தை முற்றிலும் அழித்து வேளாண்மைத் தொழிலில் இருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் - மத்திய அரசு 4 அவசரச் சட்டங்களைத் கொண்டுவந்துள்ளதாகக் கூறி... அவற்றை திரும்பப் பெறக் கோரி... சென்னை - தாம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் இன்று (27.7.2020) நடைபெற்றது. படங்கள் : எம்.முத்துகணேஷ்

5 / 57
6 / 57

சென்னை மாநகராட்சி மற்றும் ’ரூட்’ அறக்கட்டளை இணைந்து... ராஜா அண்ணாமலைபுரம் பவானிகுப்பம் பகுதியில்... இன்று (27.7.2020) ’கரோனா’ தொற்றுப் பரவல் விழிப்புணர்வுக்காக - ரங்கோலி போடும் பெண்கள். படங்கள்: க.ஸ்ரீபரத்

7 / 57
8 / 57
9 / 57

‘கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்புக்காக ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால்... பிளஸ் 2 தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வு இன்று (27.7.2020) நடை பெற்றது. சென்னை - மயிலாப்பூர் பி.எஸ். பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு முன்னதாக உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டு... பின்னர் தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். படங்கள்: க.ஸ்ரீபரத்

10 / 57
11 / 57
12 / 57

‘கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்புக்காக ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால்... பிளஸ் 2 தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வு இன்று (27.7.2020) நடை பெற்றது. சென்னை - மயிலாப்பூர் பி.எஸ். பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள். படம் : க.ஸ்ரீபரத்

13 / 57

’கரோனா’ தொற்றுப் பரவல் காரணமாக... வேலூர் - மாங்காய் மண்டி அருகே முத்து மாரியம்மன் கோயில் தெருவில் அதிநவீன இயந்திரம் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் இன்று (27.7.2020) கிருமிநாசினி மருந்து தெளித்தனர். படம் : வி.எம்.மணிநாதன்

14 / 57
15 / 57

சென்னை - பாரிமுனையில் உள்ள பத்திரியன் தெருவில் 'கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்புக்காக ஊரடங்கு அமலில் இருந்த காரணமாக 4 மாதங்களாக இயங்காமல் இருந்த சில்லறை பூ வியாபாரம் இன்றுமுதல் (27.7.2020) இயங்கத் தொடங்கியது. பத்திரியன் தெரு நுழைவுவாயிலிலேயே பூ வாங்க வரும் பொதுமக்கள் அனைவருக்கும் உடல் வெப்ப அளவுப் பரிசோதனை செய்யப்பட்டு... பின்னரே பூ வாங்க அனுமதிக்கப்பட்டனர். படம் : ம.பிரபு

16 / 57
17 / 57
18 / 57
19 / 57
20 / 57

வேலூர் - வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை... குடியாத்தம் இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்த முதல்நிலை சரிபார்க்கும் பணி இன்று (27.7.2020) தொடங்கியது. இதை அங்கீகரிக்கபட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். படம் : வி.எம்.மணிநாதன்

21 / 57
22 / 57
23 / 57

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் அவசரச் சட்டம் விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் உள்ளதெனக் கூறி... அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி... மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று (27.7.2020) சென்னை - அண்ணா நகரில் உள்ள தனது வீட்டின் முன்பு மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். படங்கள் : ம.பிரபு

24 / 57
25 / 57

வேலூர் - வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள... குடியாத்தம் இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்த முதல்நிலை சரிபார்க்கும் பணிகளை... இன்று வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். படம் : வி.எம்.மணிநாதன்

26 / 57

ப்ளஸ் 2 தேர்வு எழுதாமல் விடுபட்ட மாணவ - மாணவியருக்கான நிலுவைத் தேர்வு இன்று (27.7.2020) தமிழகமெங்கும் நடைபெற்றது. திருச்சி - பாலக்கரை ஹோலி ரெடிமீர்ஸ் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு கூடத்துக்கு முன்பாக முகக்கவசம் அணிந்து படிக்கும் மாணவி. படம்: ஜி.ஞானவேல்முருகன்.

27 / 57

திருச்சி - பாலக்கரை ஹோலி ரெடிமீர்ஸ் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் இன்று (27.7.2020) ப்ளஸ் 2 தேர்வில் விடுபட்ட தேர்வினை எழுத வந்த மாணவி ஒருவருக்கு உடல் வெப்ப அளவுப் பரிசோதனை செய்யும் ஆசிரியை. படம்: ஜி.ஞானவேல்முருகன்.

28 / 57

திருச்சி - பாலக்கரை ஹோலி ரெடிமீர்ஸ் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் இன்று (27.7.2020) ப்ளஸ் 2 தேர்வில் விடுபட்ட தேர்வினை முகக்கவசம் அணிந்து எழுதிய மாணவி. படம்: ஜி.ஞானவேல்முருகன்.

29 / 57

கரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக வழங்கியதாகக் கூறி... திருச்சி - உறையூரில் செயல்படும் தனியார் மருத்துவ ஆய்வு மையத்துக்கு இன்று (27.7.2020) திருச்சி - மாநகராட்சியினர் ’சீல்’ வைத்தனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.

30 / 57
31 / 57

மின்சார திருத்தச் சட்ட வரைவு உள்ளிட்ட அவசர சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி... திருச்சி - பெரிய மிளகுப் பாறையில் இன்று (27.7.2020) விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்.

32 / 57

புதுச்சேரி பொதுப்பணித் துறை ஒப்பந்த ஊழியர்களின் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... இன்று மாலையில் புதுச்சேரி - சண்முகாபுரம் தண்ணீர்தொட்டி மீது ஏறி.. தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளர்கள். படம்: எம்.சாம்ராஜ்

33 / 57
34 / 57
35 / 57

புதுச்சேரி - சட்டப்பேரவையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ என்.எஸ்.ஜெயபால், மற்றும் பாதுகாவலர் இருவருக்கு கரேனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து... சட்டப்பேரவை வளாகம் இழுத்து மூடப்பட்டது. படம்: எம்.சாம்ராஜ்

36 / 57
37 / 57
38 / 57

புதுச்சேரி - சட்டப்பேரவையில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ’கரோனா’ தொற்று உள்ளதா என... அவர்களின் வாயில் உள்ள எச்சில் மாதிரியை சோதனைக்கு எடுக்கும் மருத்துவர்கள். படங்கள்: எம்.சாம்ராஜ்

39 / 57

பொதுமக்களிடம் காவலர்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்து... வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம்... வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் பணியிடை பயிற்சி மையத்தில் இன்று (ஜூலை - 27) தொடங்கியது. இப்பயிற்சியை டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தொடங்கி வைத்து உரையாற்றினார். படம்: வி.எம்.மணிநாதன்

40 / 57

மத்திய அரசை கண்டித்து சென்னை சின்னமலையில் காங்கிரஸ் கட்சி சார்பில்... அக்கட்சியின் தமிழக தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில்... இன்று (27.7.2020) ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் - காங்கிரஸ் எம்பி-க்கள் வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத் மற்றும்செல்வப்பெருந்தகை, கட்சி நிர்வாகிகள் சிரஞ்சீவி , செல்வம் , திரவியம் , சிவராஜசேகர் , அரும்பாக்கம் வீரபாண்டி ஆகியோர் பங்கேற்றனர். படம்: பு.க.பிரவீன்

41 / 57
42 / 57

மும்பையில் உள்ள அம்பேத்கர் வீட்டை சேதப்படுத்த முயன்றவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி... மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதி தமிழர் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (27.7.2020) நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

43 / 57

ஆபாச நடனங்களுக்கு ’குறவன் - குறத்தி’ எனப் பெயரிட்டு சமூக வலைதளங்களில் இருக்கிற வீடியோக்களை நீக்குமாறு... ’குறமகள் வள்ளிப் பெருந்தகை பாசறை’ சார்பாக... இன்று (27.7.2020) மதுரை - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

44 / 57

மத்திய - மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள மின்சாரத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்; கூட்டுறவு வங்கியை ரிசர்வ் வங்கியுடன் இணைக்கக் கூடாது; மத்திய வங்கிகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வ்லியுறுத்தி... அகில இந்திய விவசாயிகள் சங்கப் போராட்டக் குழுவின் சார்பாக... மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (27.7.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

45 / 57

கோவை - ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விரைவு தபால் நிலைய ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால்.... மூடப்பட்ட தபால் நிலையத்துக்கு இன்று (27.7.2020) மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். படம் : ஜெ .மனோகரன்

46 / 57

கோவை - சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று (27.7.2020) விடுபட்ட பிளஸ் 2 பாடங்களுக்கான தேர்வினை தனித்தேர்வர்கள் எழுதினர். படம்: ஜெ.மனோகரன்.

47 / 57
48 / 57

கோவை - சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று (27.7.2020) விடுபட்ட பிளஸ் 2 பாடங்களுக்கான தேர்வு எழுத வந்த மாணவிக்கு உடல் வெப்ப நிலை கண்டறியும் ஆசிரியர். படம் : ஜெ .மனோகரன்

49 / 57

பல இடங்களில் முருகப் பெருமானின் வேல் ஓவியம் வரையப்பட்டதைத் தொடர்ந்து... குனியமுத்தூர் காவல் நிலையத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து - இன்று (27.7.2020) காவல்நிலையம் முன்பு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் முற்றுகையில் ஈடுபட்டனர். படங்கள்: ஜெ .மனோகரன்

50 / 57
51 / 57

கோவை - அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (27.7.2020) பொறியியல் படிப்புக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் மாணவி. அருகில் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுகந்தி ராணி உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

52 / 57

பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றூம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவுபடி... வேலூர் - கொசப்பேட்டையில் உள்ள ஈவேரா நாகம்மை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில்... பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு இன்று (ஜூலை - 27) பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை தலைமை ஆசிரியை தாரகேஸ்வரி வழங்கினார். படங்கள்: வி.எம்.மணிநாதன்

53 / 57
54 / 57

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி... வேலூர் - கொசப்பேட்டையில் உள்ள ஈவேரா நாகம்மை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில்... இன்று (27.7.2020) அவரது உருவப் படத்துக்கு ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் மரியாதை செலுத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்

55 / 57

காட்பாடி - சித்தூர் பேருந்து நிலையத்தில்... வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் நடமாடும் நவீன கைக் கழுவும் வாகனத்தின் செயல்பாடுகளை இன்று (27.7.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படங்கள்: வி.எம்.மணிநாதன்

56 / 57
57 / 57

கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில்... தமிழகத்தில் பெரிய கடைகளைத் திறக்க அரசு அனுமதியளிக்காத நிலையில்... இன்று (27.7.2020) சென்னை - தியாகராய நகர் ரெங்கநாதன் தெருவில் திறக்கப்பட்ட கடைகளில்... பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் குவிந்திருந்தது. படம்: பு.க.பிரவீன்

Recently Added

More From This Category