Published on : 23 Jul 2020 18:22 pm

பேசும் படங்கள்... (23.07.2020)

Published on : 23 Jul 2020 18:22 pm

1 / 32

’கரோனா’ தொற்றுப் பரவல் காரணமாக... வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜுன் 12-ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த இ-சேவை மையங்கள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி இன்றுமுதல் (ஜூலை - 23) இயங்க ஆரம்பித்தன. இதையடுத்து... வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையம் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. படம்: வி.எம்.மணிநாதன்

2 / 32

சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று (23.7.2020) திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான பிரமிட் நடராஜன்... பாஜக-வில் இணைந்தார். அவருக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். உடன் - அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன், மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர். படம் : க.ஸ்ரீபரத்

3 / 32

சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று (23.7.2020) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகிறார்... தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன். படம் : க.ஸ்ரீபரத்

4 / 32

நாளை ஆடிப்பூரத்தை முன்னிட்டு... திருமணம் ஆகாதவர்கள் திருமணம் ஆகவேண்டியும்... குழந்தையில்லாதாவர்கள் குழந்தை வரம் வேண்டியும்... அம்பாளுக்கு வளையல் காப்பு அணிவதற்காக - இன்று (23.7.2020) மதுரை - எல்லீஸ் நகர் கருமாரியம்மன் கோயில் வாசலில் உள்ள கடைகளில் பெண்கள் வளையல் வாங்கிச் சென்றனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

5 / 32

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு... தமிழ்நாடு வருவாய்த் துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பில்... துணை வட்டாட்சியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட... பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (23.7.20200 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

6 / 32

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ’கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து,... அங்கு தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி சந்தை அப்புறப்படுத்தப்பட்டது. வரும் 10 நாட்களுக்கு... அப்பேருந்து நிலையம் ’கரோனா’ பாதிக்கப்பட்ட பகுதியாக- மாநகராட்சி நிர்வாகம் சார்பாக இன்று (23.7.2020) அறிவிக்கப்பட்டது படம்: மு.லெட்சுமி அருண்

7 / 32

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ’கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து,... அங்கு தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி சந்தை இன்று (23.7.2020) அப்புறப்படுத்தப்பட்டது. அங்குள்ள காய்கறிகளை மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் தொழிலாளர்கள். படங்கள் : மு.லெட்சுமி அருண்

8 / 32
9 / 32

மத்திய - மாநில அரசுகள் பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்; ’கரோனா’ தொற்றுப் பரிசோதனை முடிவுகளை வட்டார அளவில் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... மதுரை - மாநகர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இன்று (23.7.2020) அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. படம் :எஸ். கிருஷ்ணமூர்த்தி

10 / 32
11 / 32
12 / 32
13 / 32

’கரோனா’ தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருவதால்... பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திருநெல்வேலி - வண்ணாரப்பேட்டையில் ’சித்த மருத்துவ நண்பர்கள்’ அமைப்பு மற்றும் ’ஸ்காட் நிர்மான்’ அமைப்பு சார்பில் ’கரோனா’ தொற்று ஆலோசனை மையம் இன்று (23.7.2020) தொடங்கப்பட்டது.. இந்த ஆலோசனை மையத்தில் ’கரோனா’ தொற்றின் ஆரம்பகட்ட அறிகுறிகளுக்கு சித்த மருத்துவ உதவி வழங்கப்படும் என ‘சித்த மருத்துவ நண்பர்கள்’ அமைப்பின் தலைவர் ஜோசப் தாஸ் கூறினார். படங்கள் : மு. லெட்சுமி அருண்

14 / 32
15 / 32

1999-ம் ஆண்டு - ஜூலை 23-ம் தேதி... மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தபோது - ஏற்பட்ட கலவரத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர். அந்த உயிரிழப்பின் நினைவாக ஆண்டுதோறும் இதே நாளில்... அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும்... கொக்கிரகுளம் - தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்துவது வழக்கம். அந்நினைவாக இன்று (23.7.2020) தாமிரபரணி ஆற்றில் பலவேறு கட்ட்சியினர், சமூக அமைப்பினர் மலர் தூவி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். படங்கள் : லட்சுமி அருண்

16 / 32
17 / 32

உயிர் நீத்த ஒரு மனிதனின் உடலுக்கு... மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்வதை உலகம் பார்த்திருக்கிறது. உயிர் நீத்த ஒரு மனிதனை அடக்கம் செய்த கல்லறைக்கு... மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்வதை உலகம் பார்த்திருக்கிறது. உயிர் நீத்த ஒரு மனிதனின் உருவப்படத்துக்கோ... உயிர் நீத்த ஒரு மனிதனின் சிலைக்கோ.... மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்வதை உலகம் பார்த்திருக்கிறது. இதோ - ஒரு நதியின் மீது மலர் வளையம் வைத்து வணங்கப்படுவதை உலகமே இன்று (23.7.2020) உற்றுப் பார்க்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே (23.7.2020) நாளில் கூலி உயர்வு கேட்டு போராடியபோது ஏற்பட்ட அசம்பாவிதத்தில்... 17 பேர் - தாமிரபரணி நதியில் விழுந்து உயிரிழந்தனர். அவர்களுக்கான அஞ்சலிதான்... இந்த மலர்வளையம்! படம் : மு.லெட்சுமி அருண்

18 / 32

புதுச்சேரி மாநிலத்தில் உயர் கல்வியில் படிக்க சேருவதற்காக ’சென்டாக்’ அமைப்புக்கு விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான ஆன்லைன் சேவை புதுச்சேரியில் உள்ள சுப்பிரமணி பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. படங்கள்: எம்.சாம்ராஜ்

19 / 32
20 / 32

புதுச்சேரியில் இப்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ’பட்ஜெட்’ உரை நிகழ்த்த முதல்வர் நாராணசாமி இன்று (23.7.2020) வருகை தந்தார். படம் : எம்.சாம்ராஜ்

21 / 32

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை திருத்தம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைள் மூலம் இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கைப்பற்ற... மத்திய அரசு வழிவகுப்பதாகக் கூறி.... கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இன்று (23.7.2020) கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். படம் : ஜெ .மனோகரன்

22 / 32
23 / 32

கோவை - செல்வபுரம் காவல் நிலைய காவலர்களுக்கு இன்று (23.7.2020) ’கரோனா’ தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முகக் கவசம், கை கழுவும் கிருமிநாசினி மருந்து, முகக் கண்ணாடி மற்றும் ஊட்டச்சத்து நீர் போன்ற பாதுகாப்புப் பொருட்களை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் வழங்கினார். உடன் - இணை ஆணையர்கள். படம் : ஜெ .மனோகரன்

24 / 32
25 / 32
26 / 32

கோவை - மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில்... புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அலைபேசி செயலி மூலம் வாகனத் தகுதிச் சான்று வழங்க... புகைப்படம் எடுக்கும் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர். படம் : ஜெ .மனோகரன்

27 / 32

சென்னை - மீனம்பாக்கம் அருகில் உள்ளது திரிசூலம் மலை. நான்குபுறமும் மலைகளால் சூழப்பட்டு... கண்ணுக்கு இனிமையாக காட்சி அளிக்கும் இங்கே அமைந்துள்ளது திரிசூல நாதர் திரிபுரசுந்தரி அம்மன் மலைக் கோயில். இக்கோயிலின் குளம் இப்போது பிளாஸ்டிக் குப்பைகளால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இக்குளத்தை சீர்செய்து செப்பனிட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்

28 / 32
29 / 32
30 / 32

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ’சகோதரன்’ திருநங்கைகள் அமைப்பினர்... இன்று (23.7.2020) கோடம்பாக்கம் நெடுஞ்சாலைப் பகுதிகளில் - கரோனா தொற்று தொடர்பாக விழிப்புணர்வூட்டும் வகையில் திருநங்கைகள் கலந்துகொண்ட ’கோலாட்டம்’ கலை நிகழ்ச்சி நடைபெற்றது. படங்கள் : ம.பிரபு

31 / 32
32 / 32

Recently Added

More From This Category