Published on : 17 Jul 2020 17:52 pm

பேசும் படங்கள்... (17.07.2020)

Published on : 17 Jul 2020 17:52 pm

1 / 58

வேலூரை அடுத்த ரங்காபுரம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள நியாய விலைக் கடையில்... இன்று (17.7.2020) அசிரி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட விலையில்லாப் பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம்... முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நிற்கச் சொல்லி - ரேஷன் கடை ஊழியர்கள் பலமுறை கூறியும், அதைப் பொருட்படுத்தாமல் நின்றிருந்த அப்பகுதி மக்கள். படம் : வி.எம்.மணிநாதன்

2 / 58

பொதுவாக ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா கோலாகலம்தான். ’கரோனா’ தொற்று ஊரடங்கால் இப்போது சென்னை உட்பட 4 மாவட்டங்களில் சிறு கோயில்களை திறக்கவும் தடையிருப்பதால்... இன்று (17.7.2020) ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் - மயிலாப்பூர் முண்டகக்கன்னி அம்மன் ஆலயம் முன்பு... வாசலிலேயே படையலிட்டு பக்தர்கள் வழிபட்டனர். படம் : ம.பிரபு

3 / 58
4 / 58
5 / 58

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவ - மாணவியருக்கு விரைவில் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு, அதற்குரிய பாடங்களை விளக்கும் வீடியோக்களை மாணவர்களின் மடிக்கணினியில் பதிவிறக்கம் செது தரும் பணி நடைபெற்று வருகிறது. இன்று (17.7.2020) சேலம் - குகை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கல்வி வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள். படம் : எஸ்.குரு பிரசாத்

6 / 58

வேலூரை அடுத்த ரங்காபுரத்தில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில்.. உதவி வனப்பாதுகாவலர் உட்பட 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து.... இன்று (17.7.2020) அந்த அலுவலகம் முழுதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு... சுத்திகரிக்கப்பட்டு... மூடப்பட்டது. படம் : வி.எம்.மணிநாதன்

7 / 58
8 / 58

சமூக ஊடகங்களில் - கந்த சஷ்டிக் கவசத்தை அவதூறாக சித்தரித்ததாக கூறப்படும் யூ டியூப் சேனலை கண்டித்து... இன்று (17.7.2020) திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சியினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . படம்: மு. லெட்சுமி அருண்

9 / 58

சென்னையை வரவேற்கும் முகப்புப் பகுதியான வண்டலூரில்... புதிய பாலம் நீண்டகாலமாக கட்டப்பட்டு வருகிறது. இது... சென்னைக்கு கனரக வாகனங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களை புறவழிச் சாலைக்கு மாற்றி... நகருக்குள் போக்குவரத்தைக் குறைக்கும் முக்கிய பாலமாக அமையவுள்ளது. இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால்... இன்னும் சில நாட்களில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படங்கள் : எம்.முத்துகணேஷ்

10 / 58
11 / 58
12 / 58
13 / 58
14 / 58

இந்தியாவின் மாபெரும் - பொதுத் துறை நிறுவனமான ரயில்வே துறையைத் தனியார்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டிப்பதுடன்... அந்த முயற்சியை ரத்துசெய்யக் கோரியும்... இன்று (17.7.2020) திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்துக்குள் - எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. படங்கள்: மு.லெட்சுமி அருண்

15 / 58
16 / 58

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்... கோட்டாட்சியர் உட்பட இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மற்றும் பலருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... இன்று (17.7.2020) கோட்டாட்சியர் அலுவலம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்திகரிக்கப்பட்டு... மூடப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்

17 / 58

சமூக ஊடகங்களில் - கந்த சஷ்டி கவசத்தை அவதூறாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள யூ- டியூப் ஒளிபரப்பை உடனடியாக தடை செய்யக் கோரி... இன்று (17.7.2020) வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்

18 / 58

திருநெல்வேலி மாவட்ட தீயணைப்புத் துறையும், மாநகராட்சி நிர்வாகமும் இணைத்து... பாளையங்கோட்டை, தச்சநல்லூர், திருநெல்வேலி டவுன் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை தொடங்கினர். இந்நிகழ்ச்சியை இன்று (17.7.2020) மாநகராட்சி ஆணையர் கண்ணன் தொடங்கி வைத்தார். படங்கள்.மு லெட்சுமி அருண்

19 / 58
20 / 58
21 / 58
22 / 58

மதுரை - மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்... இன்று (17.7.2020) நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்ததோடு... பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

23 / 58
24 / 58
25 / 58

’ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது வயல்மொழி. புதுச்சேரியில் - சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து புதுச்சேரி மாநிலம் - பொறையூர் கிராமப் பகுதிகளில் விவசாயப் பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். படங்கள் : எம்.சாம்ராஜ்

26 / 58
27 / 58
28 / 58

கந்த சஷ்டி கவசம் குறித்து ஒரு யூ-டியூப் சேனலில் வெளியான... பதிவு இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்துவதாகவும், அந்த சேனலை தடை செய்யக் கோரியும்... இன்று (17.7.2020) புதுச்சேரி - டிஜிபியிடம் சித்ரா என்ற வழக்கறிஞர் புகார் மனு கொடுத்தார். படம் : எம்.சாம்ராஜ்

29 / 58

சென்னையில் - கரோனா தொற்றின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில்... அதற்கு பல துறைகள் முக்கிய காரணமாக இருந்தாலும் - தூய்மைப் பணியாளர்களின் தொண்டு மகத்தானது. இந்நிலையில் - இன்று (17.7.2020) திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் குப்பைத் தொட்டிக்கு வெளியில் தேங்கிக் கிடக்கும் குப்பையை... முகக்கவசம், கையுறை, காலை மூடும் காலணி (ஷூ) போன்ற பாதுகாப்பு சாதனகள் எதுவுமின்றி... வெறும் கையால் தூய்மைப் பணியாளர் ஒருவர் சுத்தம் செய்வதை காண முடிந்தது. தொண்டுள்ளமிக்க - இந்தத் தூய்மை பணியாளருக்கு... மாநகராட்சி நிர்வாகம்... பாதுகாப்பு சாதனங்கள் எதையும் வழங்கவில்லையா? அல்லது அவற்றை அவர் பயன்படுத்தவில்லையா என்பதை... மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கவனிப்பது அவசியம். படங்கள் : க.ஸ்ரீபரத்

30 / 58
31 / 58
32 / 58
33 / 58
34 / 58

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி... இன்று (17.7.2020) திருவல்லிக்கேணி பாலாடை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் - ’தங்கப் பாவாடை’ அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

35 / 58

’கரோனா‘ தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மாநகர ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில்... ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி... இன்று (17.7.2020) திருவல்லிக்கேணி பாலாடை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றதையும்... பூஜையையும் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட சில பக்தர்கள் மட்டும் கண்டு தரிசித்தனர். படம் : க.ஸ்ரீபரத்

36 / 58

சேலத்தில் - கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால்... கிராமப்புறப் பகுதிகள் அனைத்தும் பசுமையோடு காட்சியளிக்கின்றன. இந்நிலையில் - ஏற்காடு அடிவாரப் பகுதியின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை... பச்சை பசேல் என விழிகளுக்கு விருந்து வைக்கிறது இயற்கை! படம் : எஸ்.குருபிரசாத்

37 / 58

திருநெல்வேலி - மேலப்பாளையம் சந்தைப் பகுதியில் உள்ள ஓடைப் பகுதியில் இன்று (17.7.2020) நெளிந்து கொண்டிருந்த மலைப்பாம்பு குட்டியைப் பார்த்து பலர் விலகிச்சென்றனர். அப்போது அப்பகுதிக்கு வந்த அப்துல் ஜப்பார் மற்றும் அவரது நண்பர்கள்... பாம்பு குட்டியை மீட்டு. வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த மலைப் பாம்பு மக்கனத்தி வகையைச் சார்ந்த பாம்பு இனம் என்று தெரிவித்த வனத் துறை அதிகாரிகள்... எல்லோரையும் போல் அலட்சியமுடன் அங்கிருந்து அகலாமல்... தைரியமுடன் பாம்பு குட்டியை மீட்ட அந்த இளைஞர்களைப் பாராட்டினர். படங்கள் : மு.லெட்சுமி அருண்

38 / 58
39 / 58
40 / 58

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான இன்று (ஜூலை - 17) வேலூர் - கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள வேம்புலி அம்மன் கோயிலில்... அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. ’கரோனா’ தொற்று பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் கோயிலின் உள்ளே பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. படம் : வி.எம்.மணிநாதன்

41 / 58

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான இன்று (ஜூலை - 17) வேலூர் - மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் கோயிலில்... அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. படம்: வி.எம்.மணிநாதன்

42 / 58
43 / 58

வேலூர் - இன்பெண்டரி சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையை... வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது எனக் கூறி... இன்று (17.7.2020) அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்

44 / 58

வேலூரில் பல பகுதிகளில் ஆபத்தான ’மாஞ்சா’ நூலைப் பயன்படுத்தி... காற்றாடி விடுவது அதிகரித்து வருகிறது. ‘மாஞ்சா’ நூலைப் பயன்படுத்தி காற்றாடி விடுவதனால் எற்படும் விபத்தைத் தவிர்க்க... வேலூர் - சலவன்பேட்டைப் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ’மாஞ்சா’ நூல் இணைக்கப்பட்ட காற்றாடிகளை இன்று (17.7.2020) காவல் துறையினர் பறிமுதல் செய்து... உடன் எடுத்துச் சென்றனர். படம் : வி.எம்.மணிநாதன்

45 / 58

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக... இன்று (17.7.2020) கோவை குற்றாலத்தில்... ஆர்ப்பரித்து வந்த தண்ணீர். படம்: ஜெ.மனோகரன்

46 / 58
47 / 58
48 / 58
49 / 58

மர்ம நபர்களால் காவிச் சாயம் பூசப்பட்டுள்ள... கோவை - குறிச்சிப் பகுதி பொள்ளாச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள பெரியார் சிலை . படம் : ஜெ. மனோகரன்

50 / 58
51 / 58

பெரியார் சிலை மீது மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டதைக் கண்டித்தும்... இந்த செயலில் ஈடுபட்டு சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும்... கோவை மாவட்ட மதிமுக சார்பில்... அக்கட்சியின் அலுவலகம் முன்பு... இன்று (17.7.2020) மாவட்டச் செயலாளர் ஆர். ஆர். மோகன்குமார் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : ஜெ. மனோகரன்

52 / 58

பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி... கோவை காந்திபுரம் படிப்பகம் முன்பு தந்தைபெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய தலித் அமைப்புகள் இன்று (17.7.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : ஜெ .மனோகரன்

53 / 58

கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறாக பேசும் யூ -டியூப் சேனலைத் தடை செய்யக் கோரி... இன்று (17.7.2020) வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ‘விஸ்வ இந்து பரிஷத்’ அமைப்பினர் புகார் மனு அளிக்க வந்தனர். படம் : வி.எம்.மணிநாதன்

54 / 58

ஆடி மாதம் - முதல் வெள்ளிக்கிழமையான இன்று (ஜூலை -17) வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயிலில் அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. கரோனா தொற்று பரவல் காரணமாக... அம்மன் கோயிலின் உள்ளே பக்தர்கள் எவரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. படம்: வி.எம்.மணிநாதன்

55 / 58

சென்னை - காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறைச் செயலாளர் சமீரன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், காவல்துறை கூடுதல் ஆணையர் அருண்குமார், இணை ஆணையர் பாலகிருஷ்ணன், அதிமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் இன்று (17.7.2020) மீனவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் - காசிமேடு மீனவர்கள் தாங்கள் கடலில் பிடித்துவரும் மீன்களை விற்கும் நேரத்தை காலையில் இருந்து... மாலை நேரமாக மாற்றியமைக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். மீனவர்களின் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. படங்கள் : ம.பிரபு

56 / 58
57 / 58
58 / 58

Recently Added

More From This Category

x