Published on : 16 Jul 2020 16:19 pm

பேசும் படங்கள்... (16.07.2020)

Published on : 16 Jul 2020 16:19 pm

1 / 76

ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை கண்டித்து... சிஜடியு சார்பில் இன்று (16.7.2020) மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் - சென்னை எம்ஜிஆர் ரயில் (சென்ட்ரல்) நிலையம் முன்பு நடைபெற்றது. படம் : க.ஸ்ரீபரத்

2 / 76

தமிழகத்தில் 12- ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று (16.7.2020) வெளியிடப்பட்டன. மாணவ - மாணவியரின் கைபேசிக்கு வந்த தேர்வு முடிவுகளை திருவல்லிக்கேணி - லேடி வெலிங்டன் பள்ளி மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். படங்கள் : க.ஸ்ரீபரத்

3 / 76
4 / 76
5 / 76
6 / 76

நடப்பு கல்வி ஆண்டுக்கான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் அந்தந்த அரசுப் பள்ளிகள் மூலம் மாணவ - மாணவியருக்கு தற்போது வழங்கப்படுகின்றன. விரைவில் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளதால்... திருவல்லிக்கேணி - லேடி வெலிங்டன் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகளின் மடிக்கணினியில்... பாடங்களுக்கான வீடியோ செயலி பதிவிறக்கம் செய்து தரப்பட்டது. மாணவிகள் - பள்ளியிலேயே வரிசையாக அமைர்ந்து கல்வி செயலியை எப்படி இயக்குவது என செயல்விளக்கமும் பெற்றனர். மடிக்கணினியை படங்கள் : க.ஸ்ரீபரத்

7 / 76
8 / 76
9 / 76

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு இன்று (16.07.2020) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. சேலம் அரிசிபாளையம் பகுதியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் கட்டை விரலை உயர்த்தி காண்பித்து வெற்றி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டன. படம்:எஸ்.குரு பிரசாத்

10 / 76
11 / 76

மதுரை - ராஜாஜி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் உடலை வைப்பதற்கு... தனி வார்டு அமைக்கக் கோரி... இன்று (16.7.2020) மதுரை - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மனு கொடுத்தனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

12 / 76

இன்று (16.7.2020) ஆடி மாத முதல் நாள் என்பதால்... மதுரை - எல்லீஸ் நகரில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

13 / 76

எளிய மக்களுக்கும் பயன்தரும் வகையில் பொதுத்துறை நிர்வாகமாக விளங்கும் ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிகளைக் கண்டித்து... டி.இஆர்யு மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்களின் சார்பாக... இன்று (16.7.2020) மதுரை மேற்கு ரயில்வே நிலைய நுழைவாயில் முன்பு - கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

14 / 76

வேலூர் - காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு... கிருமிநாசினி மருந்து, முகக்கவசம், கையுறைகளை... இன்று (16.7.2020) வேலூர் - லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வழங்கினர். படம்: வி.எம்.மணிநாதன்

15 / 76

ஓட்டுநர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... இன்று (16.7.2020) வேலூர் - அண்ணா கலையரங்கம் அருகே டிஎன்ஆல் ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்

16 / 76

கரோனா தொற்றுப் பரவல் அதிமிருப்பதால்.... பொதுமக்களில் பலர் பிராய்லர் கோழிக்குப் பதிலாக... நாட்டுக் கோழியை வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர். இதையடுத்து - புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரியில் உருவாக்கப்பட்ட நாட்டுக்கோழி குஞ்சு வகைகளான... கிரி ராஜா, நாட்டுக்கோழி, வான்கோழி, பண்ணைக் கோழி வகைகளை வாங்க... இன்று (16.7.2020) அட்டை பெட்டிகளுடன் வரிசையில் நிற்கும் பொதுமக்கள். படம்: எம்.சாம்ராஜ்

17 / 76

கரோனா தொற்றுப் பரவல் அதிமிருப்பதால்.... பொதுமக்களில் பலர் பிராய்லர் கோழிக்குப் பதிலாக... நாட்டுக் கோழியை வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர். நாட்டுக்கோழி குஞ்சுகளை விற்பனையாளர்களுக்கு விலைக்கு கொடுக்கும் புதுச்சேரி ப ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவத் துறை ஊழியர். படம் : எம்.சாம்ராஜ்

18 / 76
19 / 76

இன்று (16.7.2020) வெளியான - பிளஸ் 2 தேர்வு முடிவுகளை... பரபரப்பாகவும் ஆர்வத்தோடும் தங்கள் செல்போன்களில் பார்த்து மகிழ்கிறார்கள்... புதுச்சேரி திருவள்ளுவர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள். படம் : எம்.சாம்ராஜ்

20 / 76

இன்று (16.7.2020) வெளியான - பிளஸ் 2 தேர்வு முடிவுகளை... ஆர்வத்தோடு பார்வையிடும் புதுச்சேரி திருவள்ளுவர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள். படம் : எம்.சாம்ராஜ்

21 / 76
22 / 76

இன்று (16.7.2020) வெளியான - பிளஸ் 2 தேர்வு முடிவுகளின்படி... திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2-வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு.. சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கி பாராட்டுகிறார் பள்ளி முதல்வர் கலாவதி. படம் : எம்.சாம்ராஜ்

23 / 76

கரோனா தொற்றுப் பரவல் காராணமாக... இன்று (16.7.2020) புதுச்சேரி தலைமை அஞ்சல் அலுவலகம் இன்று முழுமையாக மூடப்பட்டது. படம் : எம்.சாம்ராஜ்

24 / 76

இந்தியாவின் மாபெரும் பொதுத்துறை நிறுவனமாக இந்திய ரயில்வே நிர்வாகத்தை... தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து... இன்று (16.7.2020) வேலூர் - கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் முன்பாக மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்

25 / 76

சென்னை - எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் தனிச் சிறப்பு மையத்தில்... அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆகியோர் இன்று (16.7.2020) ஆய்வு செய்தனர். படங்கள் : எல் சீனிவாசன்

26 / 76
27 / 76
28 / 76
29 / 76

வேலூர் - சலவன்பேட்டை பகுதியில் உள்ள ஆணைக்குளத்தம்மன் கோயிலில்... ஆடி மாத விழாவையொட்டி - அம்மனுக்கு பூஜை செய்ய அனுமதிக்கக் கோரி... கோயிலின் முன்பாக பக்தர்கள் இன்று (16.7.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது - தகவலறிந்து வந்த காவல் துறையினர் பக்தர்களிடம் பேச்சுவார்தை நடத்தி அமைதியாக திருப்பி அனுப்பி வைத்தனர். படம் : வி.எம்.மணிநாதன்

30 / 76

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சில பகுதிகளின்... குடிநீர் தேவையை தாமிரபரணி ஆறு பூர்த்திசெய்கிறது. இந்நிலையில் - 128 கி.மீ வரை நீளம் கொண்ட தாமிரபரணி ஆற்றின் நீரில்... பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்திடக் கோரி... சமூக நல ஆர்வலர்கள் பல தடவை அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் - மாவட்ட நிர்வாகமும் , மாநகராட்சி நிர்வாகமும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் - தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க எந்த மாதிரியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளப் போகிறது... என கேள்வி சமூக நல ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள். படத்தில் நீங்கள் பார்ப்பது - திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் காட்சி. தகவல் + படம்: மு.லெட்சுமி அருண்

31 / 76
32 / 76

திருமழிசை தற்காலிக சந்தையில் தினம்தோறும் அதிகாலையில் பெய்யும் மழையால்... காய்கறி ஏற்றிவரும் லாரிகளை நிறுத்துமிடம்... சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் - காய்கறிகளை ஏற்றிவரும் லாரிகளை ஓட்டுநர்கள் சாலையிலே நிறுத்துவதால்... இப்பகுதியில் இடநெருக்கடி ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. படம்: ம.பிரபு

33 / 76
34 / 76
35 / 76

திருமழிசை தற்காலிக சந்தையில் தினம்தோறும் அதிகாலையில் பெய்யும் மழையால்... காய்கறிகளை ஏற்றிவரும் லாரிகளை நிறுத்துமிடம்... சேறும் சகதியுமாக மாறியுள்ளது. படம் ; பிரபு

36 / 76
37 / 76

திருமழிசை தற்காலிக சந்தையில் தினம்தோறும் அதிகாலையில் பெய்யும் மழையால்.. தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் அதிகரித்து மற்ற நோய்களுக்கு வழிவகுக்குமோ என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் ; பிரபு

38 / 76

தமிழ் கடவுள் முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களைக் கண்டித்து... தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தின் முன்பாக... இன்று (16.7.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். படம் : ம.பிரபு

39 / 76

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, சிறு குறு நிறுவனங்கள் மட்டுமின்றி பெரு நிறுவனங்களும் பொருளாதார பின்னடவை சந்தித்து வருகின்றன. இதனால் எளிய, நடுத்தர மக்கள் வேலையிழப்பு, ஊதியம் குறைப்பு உள்ளிட்ட சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் அன்றாட தேவையான உணவு உற்பத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்கள் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில்... மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீரால் தொடர் வேலைவாய்ப்பு பெற்றுள்ள விவசாய தொழிலாளர்கள்... திருச்சியை அடுத்த சிறுமருதூரில் உள்ள வயலில் மகிழ்ச்சியுடன் பணி செய்கின்றனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.

40 / 76
41 / 76
42 / 76
43 / 76
44 / 76
45 / 76

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீரால் தொடர் வேலைவாய்ப்பு பெற்றுள்ள விவசாய தொழிலாளர்கள்... திருச்சியை அடுத்த சிறுமருதூரில் உள்ள வயலில் வயலில் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.

46 / 76
47 / 76
48 / 76

சமூக ஊடகங்களில் தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களைக் கண்டித்து... இன்று (16,7,2020) வேலூர் - சலவன்பேட்டை பகுதியில் வீடுகளின் முன்பாக... முருகன் படங்களை வைத்து.. கந்த சஷ்டி கவசத்தை படித்த பொதுமக்கள் மற்றும் பாஜகவினர். படம் : வி.எம்.மணிநாதன்

49 / 76

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை - 16) இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, வேலூர் - தோட்டப்பாளையத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்... ஓட்டப்பட்டிருந்த தேர்வு முடிவுகளை முகக்கசவம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன் பார்த்த மாணவிகள். படம் : வி.எம்.மணிநாதன்

50 / 76

வேலூர் - மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் இன்று (ஜூலை - 16) முதல் வீடு வீடாக கபசுரக் குடிநீர் வழங்கவும், டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு செல்லும் தூய்மைப் பணியளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உபகரணங்கள் வழங்கி, சில அறிவுறுத்தல்களை வழங்கினர். படம் : வி.எம்.மணிநாதன்

51 / 76

இந்திய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயப்படுத்தும் மத்திய அரசை கண்டித்து.... கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் இன்று (16.7.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : ஜெ .மனோகரன்

52 / 76

இன்று (16.7.2020) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியை... தங்கள் கைகளை மடித்து கட்டி... தெரிவிக்கும் மாணவிகள். படம் : ஜெ .மனோகரன்

53 / 76

இன்று (16.7.2020) கோவை - ராஜவீதி துணிவணிகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்... பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பரபரப்பாகவும் ஆர்வத்தோடும் செல்போன்களில் பார்க்கும் மாணவிகள். படம் : ஜெ .மனோகரன்

54 / 76
55 / 76

நடப்பு கல்வி ஆண்டுக்கான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மாணவ - மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளதால்... 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு அவர்களின் மடிக்கணினியில்... கோவை - துணிவணிகர் பள்ளி ஆசிரியைகள் வீடியோ செயலியை பதிவிறக்கம் செய்து கொடுகத்தனர். படம் ; ஜெ .மனோகரன்

56 / 76
57 / 76

12 -ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதை... மகிழ்ச்சிடன் செல்போனில் காட்டி மகிழும்... கோவை - பிரசன்டேஷன் பள்ளி மாணவி. படம் : ஜெ .மனோகரன்

58 / 76

சென்னையை - அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள செம்பாக்கம் ஏரியின் கலங்கல் அருகே கரை உடைக்கப்பட்டு ஏரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏனெனில் - இந்த ஏரியைைப் பாதுகாக்க கரைகளை உயர்த்தி கட்டுவதற்காக கழிவு நீரை வெளியேற்றுகிறோம் என பொதுப்பணித் துறையினர் கூறுகின்றனர். அதே சமயம்... இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்றி, உடன் தூர்வாரி கரைகளை உயர்த்திக் கட்டினால் நல்லது என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்

59 / 76
60 / 76
61 / 76
62 / 76
63 / 76
64 / 76

சென்னை - நங்கநல்லூரில் ஒரு வீட்டு தோட்டத்தில் முழுவதும் வெட்டப்பட்ட ஒரு வாழை மரத்தில்... இலைகளின்றி குலை மட்டும் தள்ளியிருக்கிறது. இதை அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர். படங்கள்: எம்.முத்துகனேஷ்

65 / 76
66 / 76
67 / 76
68 / 76

தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளம் செல்போன் வியாபாரி ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களைசி.பி.ஐ போலீஸார்... மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பரிசோதனை செய்தது பின்பு - அ வர்களை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி - அதன்பிறகு சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். படம் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி

69 / 76

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி-மாடப்பாக்கம் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் சுரங்க பாதை கட்டுமானப் பணிகள்... 3 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதில் ரயில்வே துறையின் பணி முடிந்துவிட்டது .மீதி நெடுஞ்சாலை துறைவசமே உள்ளது.இதனை விரைந்து முடித்து மக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படங்கள்:எம்.முத்துகணேஷ்

70 / 76
71 / 76
72 / 76

ஆடி முதல் நாளான இன்று (16.7.2020) சேலத்தில் தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் - அரிசிpபாளையம் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் பொதுமக்கள் தேங்காய் சுட்டுக் கொண்டாடினர். படங்கள் : எஸ். குரு பிரசாத்

73 / 76
74 / 76
75 / 76
76 / 76

Recently Added

More From This Category

x