Published on : 15 Jul 2020 18:30 pm

பேசும் படங்கள்... (15.07.2020)

Published on : 15 Jul 2020 18:30 pm

1 / 79

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் இன்று (15.7.2020) காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன், கடம்பூர் ராஜு மற்றும் அரசு அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். படங்கள் : க.ஸ்ரீபரத்

2 / 79
3 / 79

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில்... இன்று (15.7.2020) நடைபெற்ற விழாவில் அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் கட்சியினர் மலர் துவி மரியாதை செலுத்தினர். உடன், உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனர். படங்கள் : க.ஸ்ரீபரத்

4 / 79
5 / 79

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (15.7.2020) அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் - காங்கிரஸ் தலைவர் ஏ.வி சுப்பிரமணியன், அமைச்சர் நமச்சிவாயம். படம்: எம்.சாம்ராஜ்

6 / 79
7 / 79

புதுச்சேரி - உருளையன்பேட்டையில் ரூ.20 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை இன்று (15.7.2020) புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார். அருகில் - அமைச்சர் நமச்சிவாயம், சிவா எம்எல்ஏ ஆகியோர். படம் : எம்.சாம்ராஜ்

8 / 79

புதுச்சேரி - உருளையன்பேட்டையில் புதிதாக ரூ. 20 கோடி செலவில் கட்டப்பட்டு, இன்று (15.7.2020) புதுச்சேரி முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி. படம் : எம்.சாம்ராஜ்

9 / 79

புதுச்சேரி - உருளையன்பேட்டையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி திறப்பு விழாவுக்கு இன்று (15.7.2020) வருகை தந்த முதல்வர் நாராயணசாமியின் காரை மறித்து... புதுச்சேரி - பொதுப்பணித் துறை தினகூலி ஊழியர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அந்த இடத்தில் காவல் துறையினருக்கும் ஊழியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. படம் : எம்.சாம்ராஜ்

10 / 79
11 / 79
12 / 79

இன்று (15.7.2020) திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த புதுச்சேரி - முதல்வர் நாராயணசாமியின் காரை மறித்து.... காருக்கு வழிவிடாமல் காரின் முன்னால் படுக்க முயன்றவரை... காவல் துறையினர் குண்டுகட்டாக துாக்கி அப்புறப்படுத்தினர். படம் : எம்.சாம்ராஜ்

13 / 79

புதுச்சேரி - உருளையன்பேட்டையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி திறப்பு விழாவுக்கு புதுச்சேரி முதல்வருடன் வருகை தந்த காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ ஜான்குமாரை... பொதுப்பணித் துறை ஊழியர்கள் ஆவேசமாக திட்டிப் பேசியபோது, அவர்களிடம் இருந்து எம்எல்ஏ-வை மீட்டு... பாதுகாப்பாக அவரை காருக்கு அழைத்துச் செல்லும் காவல் துறையினர். படம் : எம்.சாம்ராஜ்

14 / 79
15 / 79

தமிழகத்தில் - அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது. சேலம் - கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (15.7.2020) வழங்கப்பட்ட புத்தகங்களை மகிழ்ச்சியுடன் மாணவிகள் பெற்றுச் சென்றனர். படங்கள் : எஸ். குருபிரசாத்

16 / 79
17 / 79
18 / 79
19 / 79

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து... சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு - சேலம் ஆட்டோ தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் இன்று (15.7.2020) நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள் : எஸ். குரு பிரசாத்

20 / 79
21 / 79

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 11, 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்குக்கான பாடப்புத்தக விநியோகம் இன்று (15.7.2020) தொடங்கியது. மேலும் மாணவ - மாணவியருக்கு வீடியோ வடிவில் பாடங்களை அவர்களின் மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது. சென்னை அசோக் நகர் - அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்த நிகழ்ச்சியில்... பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டு மாணவியருக்கு புத்தகங்களை வழங்கினர். படங்கள் : ம.பிரபு

22 / 79
23 / 79
24 / 79
25 / 79
26 / 79

சென்னையில் - சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தாலும்... தனிமனித வாகனப் போக்குவரத்து அதிக அளவில்தான் உள்ளது. இதற்கு உதாரணமாக - இன்று (15.7.2020) வடபழனி பாலத்துக்கு கீழ் நெரிசலுடன் கூடிய வாகனங்களின் எண்ணிக்கையை சொல்லலாம். படங்கள்: ம.பிரபு

27 / 79
28 / 79
29 / 79
30 / 79
31 / 79

சென்னை - தியாகராய நகர் - மேட்லி சாலையில் உள்ள ஷாசன் ஜெயின் பெண்கள் கல்லூரி வளாகத்தில் இன்று (15.7.2020) நடைபெற்ற நிகழ்ச்சியில்... சென்னை நகராட்சியுடன் - ஜெயின் சமூக சங்கம் இணைந்து வழங்கவுள்ள கரோனா தடுப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் - சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கலந்துகொண்டு இந்த சங்கத்தின் ஆதரவுடன் 20 வாகனங்கள் மூலம் நடக்கவுள்ள கரோனா தடுப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். படம்: பு.க.பிரவீன்

32 / 79
33 / 79
34 / 79

வேலூர் - காட்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜூலை 15) நடந்த நிகழ்சியில்... 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான விலையில்லாப் பாடப் புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வழங்கினார். அருகில் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், ஆசிரியர்கள் உள்ளிட்டோர். படம் : வி.எம்.மணிநாதன்

35 / 79
36 / 79

இப்புடி இருந்தா எப்புடீங்க: சென்னை பெருநகரத்தில் கடந்த சில நாட்களாகத்தான்... ’கரோனா’ தொற்றுப் பரவல் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் எதைப் பற்றியும் கவலியின்றி.... சமூக இடைவெளியைக் காற்றில் பறக்கவிட்டு, இன்று (15.7.2020) சென்னை - தியாகராய நகர் ரெங்கநாதன் தெருவில் அலைமோதிய மக்கள் கூட்டம். படங்கள் : பு.க.பிரவீன்

37 / 79
38 / 79

வேலூர் - காட்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜூலை - 15) நடந்த நிகழ்சியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. படம் : வி.எம்.மணிநாதன்

39 / 79

காட்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜூலை - 15) வழங்கப்பட்ட... விலையில்லாப் பாடப் புத்தகங்களை பெற்றுக்கொண்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவிகள் மகிழ்ச்சியுடன் அந்தப் புத்தகங்களை பார்த்து மகிழ்ந்து... புகைப்படத்துக்காக அணிவகுத்தனர். படங்கள்: வி.எம்.மணிநாதன்

40 / 79
41 / 79

மதுரை - ஆத்திக்குளம் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தில்தான்... தென் மண்டலத்துக்கான சி.பி.ஐ அலுவலகம் செயல்படுகிறது. சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை - மகன் கொலை வழக்குத் தொடர்பான விசாரணை மற்றும் சிபிஐ உயர் அதிகாரிகளின் வருகை... போன்றவற்றால் தற்போது இந்த அலுவலகம் பரபரப்பாக உள்ளது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

42 / 79

’கரோனா’ தொற்றுப் பரவலை தடுப்பது தொடர்பாக... வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (15.7.2020) நடைபெற்றது. இதில் - மாவட்ட ஆட்சியர், சரவணன் எம்எல்ஏ, பெரியகுளம் எம்எல்ஏ, காவல்துறை ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

43 / 79

முன்னாள் முதல்வர் - காமராஜர் பிறந்த நாளையொட்டி... இன்று (15.7.2020) காட்பாடி - அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப் படத்துக்கு - மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். படம் : வி.எம்.மணிநாதன்

44 / 79
45 / 79

மதுரை - மாநகராட்சி பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்... இன்று (15.7.2020) 10 மற்றும் 11, 12-ம் வகுப்புக்கான விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. சமூக இடைவெளியுடன் மாணவிகள் வரிசையில் வந்து இப்புத்தகங்களை வாங்கிச் சென்றனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

46 / 79
47 / 79

சமூக ஊடகங்களில்... இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி... மதுரை - இந்து முன்னணி புறநகர் மாவட்டத் தலைவர் குருஜி ராமச்சந்திரன் தலைமையில் - இந்து முன்னணியினர் இன்று (15.7.2020) மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

48 / 79

சமூக ஊடகங்களில்... இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி... இந்து முன்னணியினர் இன்று (15.7.2020) வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். படம்: வி.எம்.மணிநாதன்

49 / 79

ரயில்வே நிர்வாகத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து... திருச்சி ரயில்வே நிலையம் முன்பு இன்று (15.7.2020) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்

50 / 79
51 / 79

திருச்சி - சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (15.7.2020) 10 மற்றும் 11, 12-ம் வகுப்பு மாணவியருக்குரிய வரும் கல்வி ஆண்டுக்கான விலையில்லா பாடப்புத்தகங்களை ஆசிரியைகள் வழங்கினர். படம்: ஜி.ஞானவேல்முருகன்

52 / 79

இன்று (15.7.2020) வழங்கப்பட்ட விலையில்லாப் பாடப் புத்தகங்களைப் பெற்றுகொண்ட மகிழ்ச்சியில் வீடு திரும்பும்... திருச்சி - சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள். படம்: ஜி.ஞானவேல்முருகன்

53 / 79

திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (15.7.2020) திருநெல்வேலி - காவல் கண்காணிப்பாளராக மணிவண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார் . படம்: மு. லெட்சுமி அருண் .

54 / 79

திருநெல்வேலி - காவல் கண்காணிப்பாளராக இன்று (15.7.2020) பொறுப்பேற்றுக் கொள்ள வந்த மணிவண்ணனுக்கு... திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது படம்: மு. லெட்சுமி அருண்

55 / 79

புதுச்சேரி - குபேர் அங்காடியில் கடைக்காரர்கள் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து... இன்று நகராட்சியின் சுகாதாரத் துறையினர் அங்காடியை பூட்டி ’சீல்’ வைத்தனர். படம்: எம்.சாம்ராஜ்

56 / 79

புதுச்சேரி - குபேர் அங்காடியில் கடைக்காரர்கள் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து... இன்று நகராட்சியின் சுகாதாரத் துறையினர் அங்காடியை பூட்டி ’சீல்’ வைத்ததால் உள்ளிருக்கும் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டன. படங்கள் : எம்.சாம்ராஜ்

57 / 79
58 / 79

குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் இன்று (15.7.2020) வழங்கப்பட்ட 10 மற்றும் 11, 12-ம் வகுப்புகளுக்கான விலையில்லாப் பாடப் புத்தகங்களை காட்டி மகிழும் மாணவிகள். படங்கள் : எம்.முத்து கணேஷ்

59 / 79
60 / 79

குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் இன்று (15.7.2020) 10 மற்றும் 11, 12-ம் வகுப்புகளுக்கான விலையில்லாப் பாடப் புத்தகங்களை மாணவிகளுக்கு அப்பள்ளியின் ஆசிரியைகள் வழங்கினர். படங்கள் : எம்.முத்து கணேஷ்

61 / 79
62 / 79

சென்னை - குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் இன்று (15.7.2020) மாணவிகளுக்கு மடிக்கணினியில் ஆல்-லைன் கல்விக்கான மென்பொருள் (சாஃப்ட்வேர்) ஆசியைகளால் பதிவிறக்கம் செய்து தரப்பட்டது. படம்: எம். முத்து கணேஷ்

63 / 79

சென்னை - குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் இன்று (15.7.2020) வழங்கப்பட்ட வகுப்புக்கான விலையில்லாப் பாடப்புத்தகங்களை... ஆவலுடன் எண்ணிப் பார்க்கிறார் ஒரு மாணவி. படம்: எம். முத்து கணேஷ்

64 / 79

சென்னை - குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் 10 மற்றும் 11, 12-ம் வகுப்புக்கான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் இன்று (15.7.2020) வழங்கப்பட்டன. அப்புத்தகங்களை பெற மாணவிகளுடன் வந்த பெற்றோருக்கு கிருமிநாசினி திரவம் வழங்கும் ஆசிரியை. படம்: எம். முத்து கணேஷ்

65 / 79

சென்னை - குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் 10 மற்றும் 11, 12-ம் வகுப்புக்கான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் இன்று (15.7.2020) வழங்கப்பட்டன. அப்புத்தகங்களை பெற மாணவிகளுடன் வந்த பெற்றோர் பள்ளி வளாகத்தில் பொறுமையுடன் காத்திருந்தனர். படம்: எம். முத்து கணேஷ்

66 / 79

சென்னை - குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் 10 மற்றும் 11, 12-ம் வகுப்புக்கான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் இன்று (15.7.2020) வழங்கப்பட்டன. அப்புத்தகங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களின் மகிழ்ச்சியின் வெளிச்சம் முகக்கவசத்தையும் மீறி தெரிந்தது. படம்: எம். முத்து கணேஷ்

67 / 79

சென்னை - குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் இன்று (15.7.2020) மாணவர்களுக்கு மடிக்கணினியில் ஆல்-லைன் கல்விக்கான மென்பொருள் (சாஃப்ட்வேர்) பதிவிறக்கம் செய்து தரப்பட்டது. அதனை தங்கள் மடிக்கணினியில் பார்த்து மகிழும் - மாணவர்கள். படம்: எம். முத்து கணேஷ்

68 / 79

சென்னை - குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் இன்று (15.7.2020) வழங்கப்பட்ட விலையில்லாப் பாடப்புத்தகங்களை... கொண்ட பையை... ஒரு பக்கம் தாயும்... இன்னொரு பக்கம் மகனும் பிடித்துச் சென்றனர். இக்காட்சி - ’’உன் முன்னேற்றப் பாதைகளில்... எப்போதும் உன் சுமைகளை நானும் பகிர்ந்துகொள்வேன் மகனே... நட... வெற்றியை நோக்கி நட...’’ என அந்த தாய் சொல்வதைப் போன்றிருந்தது. படம்: எம். முத்து கணேஷ்

69 / 79

தமிழகத்தில் மின் கட்டண விதிப்பில் பல்வேறு குளறுபடிகளைத் தொடர்ந்து... மின் கட்டணம் செலுத்த கடைசி நாளான இன்று (15.7.2020) சென்னை - பல்லாவரம் பகுதியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில்... நீண்ட நேரம் காத்திருந்தனர் . படங்கள்: எம்.முத்து கணேஷ்

70 / 79
71 / 79
72 / 79

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு... இன்று (15.7.2020) கரோனா தொற்று உறுதியானதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் அவரது அறை மூடப்பட்டது. படம்: ஜெ .மனோகரன்

73 / 79

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு இன்று (15.7.2020) கரோனா தொற்று உறுதியானதையொட்டி... ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை... கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகளில் இன்று தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். படம்: ஜெ .மனோகரன்

74 / 79

பல்லாயிரம் எளிய மக்களுக்கு குறைவான கட்டணத்துடன் செயல்படும்... இந்திய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையைத் தனியாருக்கு தாரை வார்க்கும்... மத்திய பாஜக அரசை கண்டித்து... இன்று (15.7.2020) கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்டனர். படம் : ஜெ .மனோகரன்

75 / 79
76 / 79

கோவை - துணி வணிகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லாப் பாடப் புத்தகங்களை இன்று (15.7.2020) அப்பள்ளியின் தலைமை ஆசிரியை வழங்கினார். படம்; ஜெ .மனோகரன்

77 / 79
78 / 79

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று (15.7.2020) நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில்... காங்கிரஸ் கட்சி மாநிலச் செயலர் மயூரா ஜெயக்குமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். படம்: ஜெ.மனோகரன்

79 / 79

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று (15.7.2020) நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில்... காங்கிரஸ் கட்சி மாநிலச் செயலர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் அக்கட்சியினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். படம்: ஜெ.மனோகரன்

Recently Added

More From This Category