Published on : 02 Jul 2020 16:12 pm

பேசும் படங்கள்... (02.07.2020)

Published on : 02 Jul 2020 16:12 pm

1 / 39

சென்னை - பெருநகர புதிய காவல் ஆணையராக இன்று (2.7.2020) பொறுப்பேற்ற மகேஷ் குமார் அகர்வாலிடம் பொறுப்புகளை ஓப்படைத்தார் முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். படங்கள் : ம.பிரபு

2 / 39
3 / 39
4 / 39
5 / 39
6 / 39

சென்னை - பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை மார்க்கெட் சந்திப்பில் உள்ள... காந்தி சிலைக்கு நேற்று (1.7.2020) இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முகமுடி அணிந்துள்ளனர். படங்கள் : ம.பிரபு

7 / 39
8 / 39
9 / 39

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக... ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 100 நாட்கள் ஆனதையொட்டி... சென்னை - அகரத்தில் உள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவத் தம்பதினர்... தனது மகளுடன் கரோனா தொற்றின் 100-வது நாளை பதாகையுடன் நினைவு கூர்ந்தனர். படங்கள்: ம.பிரபு

10 / 39
11 / 39
12 / 39

கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிக்காக... சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிநவீன இயந்திரம் மூலம் - வேலூர் அண்ணா சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினர். படம் : வி.எம்.மணிநாதன்

13 / 39
14 / 39

மதுரை - எல்லீஸ் நகரில் 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த... சித்தி விநாயகர் கோயில் இன்று (2.7.2020) பிரதோஷம் என்பதால் திறக்கப்பட்டு - சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து... மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ப்கதர்களுக்கு காட்சியளித்தார் படங்கள் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

15 / 39
16 / 39

2003-ம் ஆண்டு - அரசு ஊழியர்களின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்கவும்... தமிழக அரசை கண்டித்தும்... தமிழகத்தின் அனைத்து அரசுத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக... போராட்டம் நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் அந்நாளை ’எழுச்சி நாளாக’ அரசு ஊழியர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (2.7.2020) அந்நாளை நினைவுகூர்ந்து - மதுரை - வணிகவரித் துறை அலுவலகம் முன்பு அனைத்து அரசுத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில்... ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

17 / 39

தென் மண்டல ஐ.ஜி ஆக நியமிக்கப்பட்டுள்ள.... எஸ். முருகன் இன்று (2.7.2020) மதுரையில் - தனது அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

18 / 39
19 / 39

திருநெல்வேலி - தச்சநல்லூர் பகுதியில் தங்கள் வயல்களில் விளைந்த உளுந்து பயிரை... அறுவடை செய்த விவசாயிகள்... அதனை சாலைகளில் போட்டு காய வைக்கின்றனர். அதன் மேல் வாகனப் போக்குவரத்தால்... உளுந்து செடியிலிருந்து பிரியும் உளுந்தை விவசாயி ஒருவர் காற்றில் தூற்றுகிறார். நெல்லை - ஊருடையான் குடியிருப்பு சாலையில் விவசாயிக்கு உதவியாக - உளுந்து செடியை சாலைகளில் போட்டு உலர வைக்கும் பெண்கள். படங்கள் : மு.லெட்சுமி அருண்

20 / 39
21 / 39
22 / 39

மதுரையில் - இன்று (2.7.2020) காவல் துறை துணைத் தலைவராக... பதவி ஏற்றுக் கொண்ட டிஐஜி ராஜேந்திரன். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

23 / 39
24 / 39

தாம்பரம் - சானட்டோரியம் நெஞ்சக மருத்துவமனைப் பகுதியில்... புதிதாக அமைக்கப்பட்டுள்ள - கரோனா தொற்று ஆய்வாக வளாகத்தை... தமிழக சுகாதார நலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் - இன்று (2.7.2020) தொடங்கி வைத்தார். அருகில் - அரசு சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் செங்கல்பட்டு - மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆகியோர். படங்கள் : எம்.முத்துகணேஷ்

25 / 39
26 / 39
27 / 39
28 / 39
29 / 39

ஜூலை - 1 முதல் ஜூலை 15-ம் தேதி வரையில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால்... கோவை - ரயில் நிலையத்தில் வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய பார்சல்கள் தேங்கியுள்ளது. படம் : ஜெ மனோகரன்

30 / 39
31 / 39

ஜூலை - 1 முதல் ஜூலை 15-ம் தேதி வரையில் ரயில் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளதால்... கோவை - ரயில் நிலைய பணிமனையில் ரயில் பெட்டிகளுக்கு ரயில்வே பணிமனை ஊழியர்கள் வண்ணம் பூசும் பணியில் இன்று (2.7.2020) ஈடுபட்டனர். படம் : ஜெ .மனோகரன்

32 / 39
33 / 39

கோவை - மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில்... முகக்கவசம் , மொபைல் போன், ஸ்டெதாஸ்கோப்... போன்ற பொருட்களை கிருமி நீக்கம் செய்யும் வகையில் தெர்மாக்கோலால் வடிவமைக்கப்பட்டுள்ள மருத்துவப் பெட்டியை ... சமூக மருத்துவத் துறை மருத்துவர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் இன்று (2.7.2020) விளக்கி காட்டினார். படம் : ஜெ .மனோகரன்

34 / 39

ஊரடங்கு - உத்தரவு அமலில் உள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படாத நிலையில்... இன்று (2.7.2020) பூட்டப்பட்டிருக்கும் கோவை கோணியம்மன் கோயிலின் முன்பு... பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண் வீட்டாரும்... மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை வீட்டாரும்... (நிச்சயதார்த்தம் ) உப்பு மாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. படம் : ஜெ .மனோகரன்

35 / 39

திருநெல்வேலி - பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில்... பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது இல்லை என்று.... தொடர்ந்து வந்த புகாரையடுத்து - திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணன் இன்று (2.7.2020) அந்த மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார். படங்கள் : மு.லெட்சுமி அருண்

36 / 39

தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக 3 மாதங்களுக்கு முன்பே விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி விறுவிறுப்படையும். தற்போது கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால்... வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்து வருகிறது. இந்நிலையில் - சேலத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படும் நெய்க்காரப்பட்டி மற்றும் உத்தமசோழபுரத்தில் வழக்கத்தைவிட மிகவும் குறைவான சிலைகளே தயாரிக்கப்பட்டுள்ளன. நெய்க்காரப்பட்டியில் வர்ணம் பூசுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள். தகவல் + படங்கள் : எஸ்.குரு பிரசாத்

37 / 39
38 / 39
39 / 39

கோவையில் மின் வாரிய ஊழியர்களுக்கு இந்து தமிழ் திசை சார்பில் முழுமையான முக கவசம் வழங்கப்பட்டது.

Recently Added

More From This Category