Published on : 26 Jun 2020 17:28 pm

பேசும் படங்கள்... (26.06.2020)

Published on : 26 Jun 2020 17:28 pm

1 / 38

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை, சட்டத் துறை, பதிவுத் துறை மற்றும் சுகாதாரத் துறை சார்பில் ரூ.26 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை இன்று (26,6,2020) முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதில் - அமைச்சர்கள் என். நடராஜன், எஸ்.வளர்மதி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் பங்கேற்றனர். படம்: ஜி. ஞானவேல் முருகன்

2 / 38

திருச்சி ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (26.6.2020) முதல்வர் பழனிசாமி தலைமையில்... மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் - திருச்சி மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். படம்: ஜி. ஞானவேல் முருகன்

3 / 38

திருச்சி ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (26.6.2020) முதல்வர் பழனிசாமி தலைமையில்... மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. படம்: ஜி. ஞானவேல் முருகன்

4 / 38

மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை வழங்கக் கோரி... புதுச்சேரி மீனவர்கள் அரசுக்கு அனுப்பிய கோப்பில் கையேழுத்திடாத துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து... இன்று (26.6.2020) 500-க்கும் மேற்பட்ட படகில் கருப்புக் கொடியுடன் கடற்கரைப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்

5 / 38
6 / 38
7 / 38

புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்... தற்போது (26.6.2020) இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது. இதையடுத்து தனது வயலில்... தானியங்கி நாற்று நடும் இயந்திரம் மூலம் நாற்று நடும் விவசாயி. படம் : எம்.சாம்ராஜ்

8 / 38

வேலூர் - புதிய மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில்... பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (26.6.2020) தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர். படம் : வி.எம்.மணிநாதன்

9 / 38

இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய வீரர்கள் மீது சீனா நடத்திய தாக்குதலில்.... உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக - இன்று (26.6.2020) மதுரை காந்தி மியூசியத்தில் மதுரை மாவட்ட காங்கிரஸார் கையில் மெழுகுவத்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

10 / 38

மதுரையில் இன்று (26.6.2020) பெய்த கனமழையால்... ஏவி பாலத்தில் தண்ணீர் தேங்கியது. அதை அகற்றும் பணியில் மதுரை மாநகராட்சி ஊழியர்கல் ஈடுபட்டனர். படம் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி

11 / 38

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் இருந்தபோது தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததை அடுத்து - போலீஸாரை கண்டித்து இன்று (26.6.2020) சென்னை உட்பட தமிழகத்தில் பல பகுதிகளில் கடையடைப்பு நடைபெற்றது. குறிப்பாக - சென்னையில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி இருந்தாலும்.... புரசைவாக்கம் பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. படம் : ம.பிரபு

12 / 38

சென்னை முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில்... காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்துள்ள ஆரம்பாக்கம் பகுதியில் - டாஸ்மாக் மதுக்கடை திறந்துள்ளது. இந்நிலையில் - அங்கு போலீஸாரின் கெடுபிடிகளாலும்,பணப் பற்றாக்குறையாலும் மது அருந்துவோர் கூட்டம் இன்று (26.6.2020) வெகுவாக குறைந்து காணப்பட்டது. படங்கள்: எம்.முத்து கணேஷ்

13 / 38
14 / 38

காஞ்சிபுரம் மாவட்டம் - குன்றத்தூர் பகுதியில் கரோனா தடுப்புக்காக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று (26.6.2020) குன்றத்தூர் பிரதான சாலையில்... அனைத்து கடைகளும் பூட்டப்பட்ட நிலையில் வெறிச்சோடி காணப்பட்டது. படங்கள் : எம்.முத்து கணேஷ்

15 / 38
16 / 38

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் இருந்தபோது வியாபாரிகளான தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததை அடுத்து - போலீஸாரை கண்டித்தும், உயிரிழப்புக்குக் காரணமான போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டியும்... இன்று (26.6.2020) திண்டுக்கல்லில் முழு கடையடைப்பு நடைபெற்றது. படம் : பு.க.பிரவீன்

17 / 38
18 / 38
19 / 38
20 / 38

திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே நடைபெறும் புதிய கதவணை கட்டுமானப் பணிகளை இன்று (26.6.2020) தமிழக முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். உடன் - அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள். படம்; ஜி .ஞானவேல் முருகன்

21 / 38
22 / 38

தமிழ்நாடு தீயணைப்பு துறையின் சார்பில் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது பாதிக்கப்பட்ட 60 பேர்.... சிகிசிச்சை முடிந்து இன்று (26.6.2020) மீண்டும் பணிக்குத் திரும்பினர். இவர்களை எழும்பூரில் - அத்துறையின் இயக்குநர் சைலேந்திர பாபு வரவேற்றார். படம்: ம.பிரபு

23 / 38
24 / 38

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் இருந்தபோது வியாபாரிகளான தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததை அடுத்து - போலீஸாரை கண்டித்தும், உயிரிழப்புக்குக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோவை வியாபாரிகள் சங்கம் சார்பில் கோவை ஸ்டேட் பேங்க் சாலையில் இன்று (26.6.2020) கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. படம்; ஜெ மனோகரன்

25 / 38
26 / 38

கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே.... காங்கிரஸ் கட்சியின் தமிநாடு மாநிலச் செயல் தலைவர் - மயூரா ஜெயக்குமார் தலைமையில்... சீன - இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு - இன்று (26.6.2020) மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. படம்; ஜெ .மனோகரன்

27 / 38
28 / 38

கோவை மாநகராட்சி வளாகத்துக்குள்... பல்வேறு பணிகள் தொடர்பாக வரும்... பொதுமக்கள் ஒவ்வொருவரும் - இன்று (26.6.2020) ’மொபைல் தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். படம் : ஜெ.மனோகரன்

29 / 38
30 / 38
31 / 38

சென்னை மாநகராட்சியில்... பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குறுகிய தெருக்களில் கரோனா மீட்புப் பணியில் ஈடுப்படும் வகையில்... தமிழ்நாடு மீட்புப் பணிகள் ஊழியர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் இன்று (26.6.2020) குறுகிய தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் தங்கள் இருசக்கர வாகனங்களில் பணிக்கு புறப்பட்டனர். படம் : ம.பிரபு

32 / 38
33 / 38
34 / 38
35 / 38

தமிழகத்தில் கரோனா தொற்றின் அச்சமின்றி... பலர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் உள்ளனர். இந்நிலையில் - சேலம் மாநகர் பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்களில்... சமூக இடைவெளியைக் கடைபிடிக்கப்படுகிறதா? கிருமிநாசினி பயன்படுத்தப்படுகிறதா? மற்றும் குளிர்சாதனம் உபயோகிக்கப்படுகிறதா என அம்மாபேட்டை மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

36 / 38
37 / 38

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமலில் இருக்கும் ஊரடங்கு விதிமுறைகளைக் கடைபிடிக்காமல்... வண்டலூர், ஓட்டேரி, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் அனுமதியின்றி சுற்றித் திரிந்தோரிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்கள் அனைத்தும் ஓட்டேரி அருகே உள்ள பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படங்கள் : எம்.முத்துகணேஷ்

38 / 38

Recently Added

More From This Category