Published on : 23 Jun 2020 17:38 pm

பேசும் படங்கள்... (23.06.2020)

Published on : 23 Jun 2020 17:38 pm

1 / 52

சென்னை - திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் இன்று (23.6.2020) மாநகராட்சிப் பணியாளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்... கரோனா கண்டறிய உதவும் உபகரணங்களை வழங்கினார். படங்கள் : எல்.சீனிவாசன்

2 / 52
3 / 52

மதுரை - பகுதிகளில் கரோனா தொற்று அதிகமாக பரவுவதால்... இன்று (23.6.2020) மாநகரப் பேருந்தில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டப் பிறகு பயணிகள் ஏற்றப்பட்டனர். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

4 / 52

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும்... கலால் வரி உயர்வுக்கும்... மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து எஸ்.டி.டி.யு தொழிற்சங்கம் சார்பில் - மதுரை பெரியார் நிலையம் அருகே... கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

5 / 52

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து... மதுரை சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக... இன்று (23.6.2020) மதுரை பைபாஸ் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

6 / 52

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக... ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் - கோயில்கள் மூடப்பட்டுள்ளன. கோயில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் - சேலம் மாவட்டத்தில் கோயில் திருவிழாக்களை நம்பி பிழைத்துவரும்... பம்பை, உடுக்கை இசைக் கலைஞர்கள்.... தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி இன்று (23.6.2020) இசை கருவிகளை இசைத்தவாறு... ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். படம் : எஸ்.குரு பிரசாத்.

7 / 52
8 / 52
9 / 52

கோவையில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த... திரிபுரா மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை... கோவை மாவட்ட நிர்வாகத்தினர் இன்று (23.6.2020) சிறப்பு பேருந்துகளின் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்... அங்கிருந்து அவர்கள் தனி ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். முன்னதாக - அத்தொழிலாளர்களுக்கு... உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு... உணவும் வழங்கப்பட்டது. படங்கள்: ஜெ .மனோகரன்

10 / 52
11 / 52
12 / 52
13 / 52

கோவை - ஆர் .எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் நாளுக்கு நாள் வாடிக்கையாளர் கூட்டம் அதிகரிப்பதால்... கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எனவே, அம்மார்க்கெட்டை... அங்கிருந்து தேவாங்கர் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு மாற்றப்படவுள்ளதையொட்டி - கடைகள் அமைப்பதற்கு வசதியாக... கோடுகள் போடப்படுகின்றன. படம்: ஜெ மனோகரன்

14 / 52

கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில்... கோவை - பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து இன்று (23.6.2020) கரோனா தொற்று விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை... ஆட்சியர் ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் - வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பாஸ்கர், சரவணன், சிவகுருநாதன், குமரவேல்.உள்ளிட்டோர். படம்: ஜெ மனோகரன்

15 / 52

கோவை - வெள்ளலூர் அன்பு நகர் சிறப்பு பயிற்சி மையத்தில்... மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 25 பேர் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு இன்று (23.6.2020) ‘சத்ய சாய் மாருதி’ அறக்கட்டளை சார்பில்... மளிகைப் பொருட்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பத்ரி நாராயணன் வழங்கினார். உடன், தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்ட இயக்குநர் விஜயகுமார். படம்: ஜெ மனோகரன்

16 / 52

கரோனா தொற்று அதிகமாக பரவுவதால்... அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மீறி... மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சர்வேயர் காலனியில் சமூக இடைவெளியின்றி செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

17 / 52
18 / 52

வேலூர் - சத்துவாச்சாரி பகுதி ஆர்டிஓ சாலை, ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் சார்பில் பேண்ட் வாத்தியம் வாசித்து கரோனா தொற்று பரவலைத் தடுப்பது குறித்து... பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் - ’’சென்னையில் இருந்து வேலூருக்கு வருபவர்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்

19 / 52
20 / 52

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக - திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் - பூ மாலைகளுக்கு தேவையில்லாததால்... ஊரடங்குக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளுடன் பூக்கடைகளைத் திறந்தும்... வியாபாரம் இல்லாமல் தவித்து வரும் பூ வியாபாரிகள். படம் : பு.க.பிரவீன்

21 / 52
22 / 52
23 / 52
24 / 52

வேலூரில் - கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக - வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பம் பகுதியில் (சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலை நடுவில்) பந்தல், தடுப்புகள் அமைத்து அத்தியாவசியத் தேவையின்றி மாவட்ட எல்லைக்குள் இ-பாஸ் அனுமதி இல்லாமல் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருவோரை... காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கண்காணித்து வருகின்றனர். படம் : வி.எம்.மணிநாதன்

25 / 52
26 / 52
27 / 52
28 / 52

புதுச்சேரியில் - கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து... இன்று (23.6.2020) பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய திறந்துவிடப்பட்ட கடற்கரை சாலை... முழுவதும் தடுப்பு கட்டையால் மூடப்பட்டது. படம்: எம்.சாம்ராஜ்

29 / 52

கரோனா நிவாரணமாக மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் அரிசி வழங்குவதற்காக - புதுச்சேரி சவரிராயலு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்... அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி நடந்து வருகிறது. படம்: எம்.சாம்ராஜ்

30 / 52

புதுச்சேரியில் - போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாத ஊதிய நிலுவையை வழங்கக் கோரி... போக்குவரத்துக் கழக இயக்குநர் அலுவலகம் முன்பு... அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்

31 / 52

புதுச்சேரியில் - நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று (23.6.2020) இரவு மழை பெய்தது. இதனால் - காற்றில் வெப்ப சலனம் குறைந்ததையடுத்து... புதுவை கடற்கரைச் சாலையில் - தேங்கிய மழை நீரில் முகம் பார்க்கும் அழகிய கட்டிடங்கள். படம்: எம்.சாம்ராஜ்

32 / 52

கரோனா தொற்று பரவுவதை தடுக்கவும்.... கடைத்தெருவில் கூட்டம் கூடுவதைத் தடுக்கவும் - காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகளை திறக்க புதுவை அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து - புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள அலைபேசி அங்காடியில் காத்திருந்த பொதுமக்கள்.

33 / 52

கரோனா தொற்று பரவுவதை தடுக்கவும்.... கடைத்தெருவில் கூட்டம் கூடுவதைத் தடுக்கவும் - காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகளை திறக்க புதுவை அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து - இன்று (23.6.2020) புதுச்சேரி காந்தி வீதியில் பொருட்கள் வாங்க அதிக அளவில் திரண்டிருந்த பொதுமக்கள். படம்: எம்.சாம்ராஜ்

34 / 52

கரோனா தொற்று பரவுவதை தடுக்கவும்.... கடைத்தெருவில் கூட்டம் கூடுவதைத் தடுக்கவும் - காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகளை திறக்க புதுவை அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து - இன்று (23.6.2020) ஒலிபெருக்கி மூலம் திறந்திருந்த கடைகளை மூட சொல்லும் காவல் துறையினர். படம்: எம்.சாம்ராஜ்

35 / 52

கடந்த ஆண்டில் மழைப் பொழிவு குறைவாக இருந்ததாலும்... இந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகரித்ததாலும்... பம்மலில் உள்ள குவாரி பள்ளங்களில்... நீர் வற்றி - குறைந்த அளவே காணப்படுகிறது. இந்த குவாரி பள்ளங்களில் இருந்துதான் அனகாபுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொழியும் மழையை பொறுத்துதான் அனகாபுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் சீராக கிடைக்கும் என இப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர் தகவல் + படங்கள்: எம்.முத்துகணேஷ்

36 / 52
37 / 52

திருநெல்வேலி - கே.டி.சி நகர் மற்றும் வி.எம். சத்திரம் பகுதியில் உள்ள கடைகளில்... கிருமி நாசினி தெளிக்கப்படுகிறதா என்றும்.... வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்றும்... பொருட்கள் தரமாக உள்ளதா என்றும்... சுகாதார ஆய்வாளர்கள் இன்று (23.6.2020) பரிசோதனை மேற்கொண்டனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்

38 / 52
39 / 52

கரோனா பேரிடர் காலப் பணி, குப்பையை அகற்றுவது, சாலையில் தேங்கும் மணலை அப்புறப்படுத்துவது... என தன்னலம்பாராமல் - சேவை ஆற்றி வருகின்றனர் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள். ’’குடும்பத்தோடு உட்கார்ந்து உணவருந்தக்கூட நேரமின்றி... வேலை செய்யும் எங்களுக்கு நாளொன்றுக்கு - 320 ரூபாய் மட்டுமே கொடுக்கிறார்கள். நிரந்தர ஊழியருக்கு இணையாக எங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்’’ என அவர்கள் கோரிக்கை வைத்தனர். படம்: மு.லெட்சுமி அருண்

40 / 52

பழவந்தாங்கல் சுரங்கப் பாதையை சீரமைக்க வேண்டும் என்கிற இப்பகுதி பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கையை அடுத்து - சுரங்கப் பாதை சீரமைப்பு பணி சமீபத்தில் தொடங்கி நடந்து வந்தது. இந்நிலையில் - சென்னையில் முழு ஊரடங்கையொட்டி தற்போது - பணிகள் நிறுத்தப்பட்டதுடன்... சுரங்கப் பாதையும் மூடப்பட்டுள்ளது. ’’இந்தக் கரோனா தடை உத்தரவு அமலில் இருக்கும் நாட்களில்... போக்குவரத்தும் இருக்காது. மக்கள் நடமாட்டமும் இருக்காது. எனவே சுரங்கப் பாதையை சீரமைக்கும் பணியை விரைவாகவும் எளிதாகவும் செய்து முடிக்கலாம்’’ என இப்பகுதி பொதுமக்கள் கருதுகிறார்கள். படங்கள் : எம்.முத்துகணேஷ்

41 / 52
42 / 52
43 / 52

வேலூரில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி... வேலூர் மாவட்டத்துக்கு - கரோனா தொற்று தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று (ஜூன் - 23) சென்னையில் இருந்து வேலூர் வந்தபோது... வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில்... அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அங்கு பணியில் இருந்த காவல் துறையினர், வருவாய் துறையினரிடம் விளக்கம் கேட்டறிந்தார். படம்: வி.எம்.மணிநாதன்

44 / 52
45 / 52
46 / 52
47 / 52

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததையொட்டி கடந்த மாதம் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு... அதற்கு பதிலாக தற்காலிகமாக திருமழிசையில் காய்கறி சந்தை செயல்படுகிறது. இந்நிலையில் - நேற்று (22.6.2020) இரவு முதல் அதிகாலை வரை பெய்த மழையின் காரணமாக -திருமழிசை காய்கறி மார்க்கெட் பகுதி சேறும் சகதியுமாக மாறியது. இதனால் காய்கறி வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். படம்; ம.பிரபு

48 / 52
49 / 52
50 / 52

சென்னையில் முழு ஊரடங்கின் 5-வது நாளான இன்று (23.6.2020) பாரிமுனை சந்திப்பு, உயர்நீதிமன்ற வளாகம் ஆகிய பகுதிகளின் வெறிச்சோடிய தோற்றம். படம்; ம.பிரபு

51 / 52

சென்னையில் முழு ஊரடங்கின் 5-வது நாளான இன்று (23.6.2020) மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட... தியாகராய நகர் ரெங்கநாதன் தெரு. .படம்; ம.பிரபு

52 / 52

Recently Added

More From This Category

x