Published on : 20 Jun 2020 18:25 pm

பேசும் படங்கள்... (20.06.2020)

Published on : 20 Jun 2020 18:25 pm

1 / 53

புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் இன்று (20.6.2020) காலையில் காயம் பட்ட நிலையில் வனத் துறையினரால் மீட்கப்பட்ட வெளிநாட்டு பறவையான (பெயர் ’பெயின்ட ட் ஸ்ட்ரோக்’ எனச் சொல்லப்படுகிறது) மஞ்சள் மூக்கு நாரைக்கு கால்நடைத்துறை மருத்துவமனையில் வனத்துறையினர் சிகிச்சை மேற்கொண்டனர். படம்:எம்.சாம்ராஜ்

2 / 53

புதுச்சேரி பகுதிகளில் - இரவு நேரத்தில் அடிக்கடி எற்படும் மின்தடையைக் கண்டித்தும்... இக்குறைபாட்டை... சீர் செய்ய வராத மின்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்... இன்று (20.6.2020) புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன். படம்:எம்.சாம்ராஜ்

3 / 53

கரோனா தொற்று காரணமாக... அமலில் இருந்த ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் - ஹோட்டல்களில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிடலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 'பார்சல் மட்டுமே கொடுக்க வேண்டும்’ என மதுரை மாவட்ட ஹோட்டல் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று (20.6.2020) மதுரை - பைபாஸ் ரோடில் உள்ள கவுரி கிருஷ்ணா ஹோட்டலில் பார்சல் உணவு மட்டும் விற்கப்பட்டது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

4 / 53

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக - 19.6.2020 முதல் 30.6.2020 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கின் 2-வது நாளான இன்று (20.6.2020) வெறிச்சோடி காணப்படும் சென்னை -நேப்பியர் பாலம் மற்றும் மெரினா காமராஜர் சாலை. படங்கள்: ம.பிரபு

5 / 53
6 / 53
7 / 53
8 / 53

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில்... கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக - 19.6.2020 முதல் 30.6.2020 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கின் 2-வது நாளான இன்று (20.6.2020) வெறிச்சோடி காணப்பட்ட சென்னை - அண்ணா சாலை. படம்: ம.பிரபு

9 / 53

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்... கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக - 19.6.2020 முதல் 30.6.2020 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கின் 2-வது நாளான இன்று (20.6.2020) வெறிச்சோடி காணப்படும் சென்னை போர் நினைவு சின்னம் வழியாக தலைமைச் செயலகம் செல்லும் சாலை. படங்கள்: ம.பிரபு

10 / 53
11 / 53

நாளை காலை 10.33 முதல் பகல் 1.50 மணி வரையில் - சூரிய கிரகணம் நிகழவுள்ள நிலையில்... இன்று (20.6.2020) மதியம்... வானில் - சூரியனைச் சுற்றி வளையம் போல் தோன்றியது. படங்கள்: ம.பிரபு

12 / 53
13 / 53
14 / 53

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இ ருந்து சிலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதைத் தடுக்க - தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (20.6.2020) சேலம் - உடையாப்பட்டி பகுதி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்த சென்னை பதிவு எண் கொண்ட வாகனமொன்றை நிறுத்தி... போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். படம்: எஸ்.குரு பிரசாத்

15 / 53

கரோனா தொற்று பரவாமல் தடுக்க... தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் - பொது இடங்களுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்நிலையில் இன்று (20.6.2020) சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே... பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதியை மீறியும், சமூக இடைவெளி இன்றியும்... குறிப்பாக - ஒரே வாகனத்தில் நிறைய பேர் ஏறிச் சென்றனர். இதுகுறித்து - அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படங்கள்: எஸ்.குரு பிரசாத்

16 / 53
17 / 53
18 / 53

ரூ.52 கோடி மதிப்பில் கோவை குறிச்சி குளம் மேம்பாட்டுப் பணிகளை இன்று (20.6.2020) தொடங்கி வைத்து... அதன் வரைபடத்தை பார்வையிடுகிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. படம: ஜெ .மனோகரன்

19 / 53

கோவையில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக... பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் - கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் வரிசையில் செல்ல... தடுப்புகள் அமைக்கும் பணி இன்று (20.6.2020) நடைபெற்றது. படம்: ஜெ.மனோகரன்

20 / 53

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில்... இன்று (20.6.2020) சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜுனன்... பொதுமக்கள் மத்தியில் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து - கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார். படம்: ஜெ .மனோகரன்

21 / 53

தமிழகத்தில் - பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து... கோவையில் இன்று (20.6.2020) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஜெ .மனோகரன்

22 / 53

கரோனா தடுப்பு நடவடிக்கையாக... வெளியில் செல்லும் அனைவரும் முக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தி வரும் நிலையில்... இன்று (20.6.2020) கோவை பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முகம் அச்சிட்ட முகக்கவசத்தை அணிந்து சென்ற பொதுமக்கள். படம்: ஜெ .மனோகரன்

23 / 53

தமிழகத்தில் - கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு காவல் துறையினரின் மகத்தான பணிகள் பெரிதும் பயன்பட்டு வருகின்றன. சென்னையில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து... தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல்நிலைய வாசலிலும் உணவுப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலையொட்டி... இன்று (20.6.2020) பாளையங்கோட்டை காவல் நிலைய வாசலில் விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. படம்; மு.லெட்சுமி அருண்

24 / 53

திருநெல்வேலி - ஜங்க்சன் பகுதியில் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்... இன்று (20.6.2020) பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்; மு.லெட்சுமி அருண்

25 / 53
26 / 53

சமீபத்தில் கேரளாவில் உணவில் வெடி வைத்து கொடுத்ததால்... பெண் யானையொன்று உயிரிழந்த செய்தி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. மனிதர்களால் தொடர்ந்து... விலங்குகள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற கருணைக்குரல்... சமூக வலைதளங்களிலும், சமூக நல மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியிலும் எதிரொலித்தது. இந்நிலையில் மாணவ - மாணவிகள் பாடியுள்ள ‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ என்ற விழிப்புணர்வு பாடல் அடங்கிய குறுந்தகடை... இன்று (20.6.2020) திருநெல்வேலி - காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் - சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் சரவணன் வெளியிட்டார். உடன், இசையமைப்பாளர் இசக்கியப்பன். படம்: மு.லெட்சுமி அருண்

27 / 53

வேலூரில் இன்று (20.6.2020) காய்கறி வியாபாரிகள், தொழிலாளர்கள் பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக - வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் நடந்த சிறப்பு முகாமில் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்

28 / 53
29 / 53

சீன - இந்திய எல்லையான லடாக் பகுதியில் - சீன ராணுவத்துடன் நடந்த மோதலில்... வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும்... கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களின் நினைவாகவும்... வேலூர் - கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் தர்ம ஸ்தாபனம் சார்பில் - இன்று (ஜூன் 20) மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்

30 / 53

திண்டுக்கல் மாவட்டம் - நத்தம் பகுதியில் விளைந்த மாங்காய்களை... இன்று தரம்பிரித்து விற்பனைக்காக - வெளிமாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி. படம்: பு.க.பிரவீன்

31 / 53

வேலூர் மாவட்டத்தில் - காவல் துறையினர் பலர்... கரோனா வைரஸ் தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் - பாகாயம் காவல் நிலையம், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாரின் அறிவுறுத்தலின்படி... கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க - வேலூர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களும் இன்றும் (ஜூன் 20) நாளையும் 2 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. மேலும் - முன்னெச்சரிக்கை நடவ்டிக்கையாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்... காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்

32 / 53
33 / 53

இந்திய - சீன எல்லையான லடாக் பகுதியில்... இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து... மதுரை கட்டபொம்மன் சிலை அருகே - தென் இந்திய பார்வேட் பிளாக் கட்சி சார்பில் சீனப் பொருட்களை உடைக்கும் நூதனக் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (20.6.2020) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் - இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவம் நடத்திய தாக்குதலை கண்டித்தும், சீனப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரியும், சீனப் பொருட்களை இந்திய வர்த்தகர்கள் விற்பனை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி... 25-க்கும் மேற்பட்ட தென் இந்திய பார்வேட் பிளாக் கட்சியினர் - சாலையில் சீனப் பொருட்களைப் போட்டுடைக்கும் நூதனக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு... 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியினை மேற் கொண்டனர். தகவவல் + படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

34 / 53
35 / 53
36 / 53
37 / 53

மதுரை - எஸ்.எஸ்.காலனியில் வசிக்கும் மக்களின் பல்லாண்டு கால பெருங்கனவாக இருந்த... குடிநீர் குழாய் இணைக்கும் பணி - தற்போது (20.6.2020) ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ்... இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

38 / 53

வேலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து... வேலூர் - ஆற்காடு சாலை, அண்ணா சாலை, காந்திரோடு, மெயின் பஜார், லாங்கு பஜார், சுண்ணாம்புக்காரத் தெரு உட்பட பல பகுதிகளில் இன்று (20.6.2020) அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. படம்: வி.எம்.மணிநாதன்

39 / 53
40 / 53
41 / 53

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் நடமாடும் வாகனத்தை சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் ராமன் நேற்று (19.06.2020) தொடங்கி வைத்தார். மேலும் நகராட்சியின் கூடுதல் பயன்பாட்டுக்காக - கிருமி நாசினி மருந்து தெளிக்கும் நவீன இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். படங்கள்: எஸ் குருபிரசாத்

42 / 53
43 / 53

வீடு வீடாக சென்று - காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யும் பணியை... நேற்று முதல் (19.6.2020) சென்னை மாநகராட்சியினர் தொடங்கினர். இந்நிலையில் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாநகராட்சி பணியாளர் ஒருவர் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கிறார். படம்: ம.பிரபு

44 / 53

சென்னையில் இன்று (19.6.2020) முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்... சென்னை - செண்ட்ரல் ரயில்வே நிலையம் அமைந்துள்ள சாலைப் பகுதி வாகனப்போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. படம்: ம.பிரபு

45 / 53
46 / 53

சென்னையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையொட்டி... சென்னையில் நேற்று முதல் (19.6.2020) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை - அண்ணா சாலை (மவுண்ட் ரோடு) முழுவதுமாக முடப்பட்டது. எனவே - ஜெமினி மேம்பாலம் தொடங்கி எல்.ஐ.சி கட்டிடம் உள்ள பகுதி வரை எந்த வாகனப் போக்குவரத்துமின்றி இன்று வெறிச்சோடிக் காணப்பட்டது. படங்கள்: ம.பிரபு

47 / 53
48 / 53
49 / 53
50 / 53

நாளை - (21/06/2020) உலக யோகா தினம்... நாடு முழுவதும் “எனது வாழ்க்கை எனது யோகா’’ - என்ற தலைப்பில் கொணடாடப்படுகிறது. இதையொட்டி யோகா தினத்தன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை யோகா செய்ய மாணவர்களுக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் - கோவை புலிய குளம் புனித அந்தோணியர் உயர்நிலை பள்ளியின் தேசியமாணவர் படை அலுவலர் ஜி.ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர் - தானே யோகாசனம் செய்து... அதனை காட்சி வடிவில் வீடியோவில் பதிவு செய்து தேசிய மாணவர்படை மாணவர்களுக்கு... வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். இந்த வீடியோ பதிவைப் பார்த்து நாளை( 21/6/2020 ) காலையில்... பார்த்து - அம்மாணவர்கள் அனைவரும் யோகா செய்யவுள்ளனர். படங்கள்: . ஜெ .மனோகரன்

51 / 53
52 / 53
53 / 53

Recently Added

More From This Category